காதல் கோணம் ...!செவ்வக முகத்தழகி 
செந்தூரப் பொட்டழகி 

முக்கோணச் சிரிப்பாலே 
முனுமுனுக்க செஞ்சவளே 

வட்டம் போட்டுத் தவிக்கிறேன் 
வஞ்சியவள் கொடியிடையில் 
கெஞ்சி கேட்க்கிறேன் 

சதுரமாய் சேர்ந்திடுவோமா 
சமத்துவ இதயத்தில் ...!12 டா ? - 1 னா ?

வணக்கம் இன்று நம்மை வாட்டி வதைக்கும் மின்சாரத்தை பத்தி புதுமையில் பழமை என்ற கோணத்தில் சுருக்கமாக எழுதிகிறேன்.

நாம் ஒரு யூனிட் மின்சாரம் சேமித்தால் ஒரு யூனிட் உற்பத்திக்கு சமம்
அப்படி என்றால் இன்றைய சூழலில் தினமும் இரண்டு மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை.

அப்படி என்றால் எவ்வளவு மின்சாரம் நம்மளால் சேமிக்க முடியும் ?
இருந்தும் மின்சாராப் பற்றாக்குறை வருவது ஏன் ?
அன்றைய காலத்தில் மக்கள் வீட்டுக்கு பத்து பன்னிரண்டு குழந்தைகள் வரை பெற்றார்கள் இந்தக்காலத்தி வீட்டுக்கு ஒன்று மிஞ்சினால் இரண்டு அவ்வளவு தான் இருந்தும் மின்சாரத் தேவை அதிகம் வரக் காரணம் என்ன ?

மக்கள் தொகை தான் என்று கூறலாம் இருந்தும் நான் கூற வருவது அது இல்லை அன்று மக்கள் இரவு நேரங்களில் மட்டும் வீட்டுக்கு ஒன்று அல்லது  இரண்டு என்ற கணக்கில் விளக்கை பயன் படுத்தினார்கள்.

எல்லோர் வீட்டிலும் ரேடியோ இருக்க வாய்ப்பில்லை சில வீடுகளில் தான் டிவி மின்விசிறி இருந்திருக்கும் அப்போது வீட்டுக்கு பத்து பிள்ளைகள் இருந்தாலும் அவர்களின் பயன் அளவு குறைவு .

அப்படியே டிவி பார்க்க வேண்டும் என்றால் பஞ்சாயத்து டிவி தான் கிராம மக்கள் அனைவரும் கூடி உக்காந்து பார்ப்பார்கள் என்றாவது விழாக்கள் வந்தால் ரேடியோ திரைப்படம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இப்படி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவார்கள்

இப்படியே போக போக விஞ்ஞானம் வளர்ந்தது வீட்டுக்கு வீடு டிவி மின்விசிறி ,ரேடியோ, குளிர்சாதனப் பெட்டி, வாசிங்மிசின்,இஸ்திரி பெட்டி ,  AC என்று பயன்பாட்டுப் பொருட்கள் அதிகரித்தது ,பயன் பெரும் எண்ணிக்கை குறைந்தது.

எதற்கெடுத்தாலும் முன்னிலை வகிப்பது மின்சாரம் தான் கொஞ்சம் நேரம் மின்சாரம் இல்லை என்றால் மக்கள் மனம் கொந்தளிக்கிறது.அதற்கும் விஞ்ஞானம் விட்டு வைக்கவில்லை Generators ,UPS என்று மின்சாரத்தை சேமிக்க வழி கண்டுபிடித்து விட்டது.அது மட்டுமா பகலைக் கூட இரவாக்க முடியும் இரவைக் கூட பகலாக்க முடியும்.

அப்படி என்றால் எப்படி மின்சாரத்தை நம்மால் சேமிக்க முடியும் கூறுங்கள் முடியவே முடியாது ! இதில் வேடிக்கை என்றால் அன்றைய காலம் போல் வீட்டுக்கு பத்து பன்னிரண்டு பெற்றால் நம் நிலை எங்கே ? இனிவரும் காலங்களில் இந்த ஒன்றும் இல்லாமல் போகலாம் ?சிந்தியுங்கள்

அதைவிட்டுவிட்டு அடுத்தவர் மீது குறை கூறுவதும் குற்றம் சாட்டு வதையுமே வேடிக்கையாக கொண்டுள்ளோம். இதனால் எத்தனைப் போராட்டாம் எத்தனை உயிர்கள் பலி.

கேள்வியின் முடிவுக்கு வருகிறேன் இன்றைய ஒன்றைவிட அன்றைய பன்னிரெண்டே சிறந்தது என்று நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைகிறேர்கள் ?

வாருங்கள் தங்கள் கருத்தை கூறுங்கள். தவறுகள் இருப்பின் தயங்காமல் சுட்டி காட்டுங்கள்.

அன்புடன்
ஹிசாலி.
நன்றி!!!என் முதல் காதல் ...!
மண் வாசம் மாறா மன்னவனே உன்னை 
இந்தப் பெண் வாசம் சூடிக்கொள்ள ஏங்குகிறது -இனி 
நம் வாசம் காற்றில் கலந்து உலகில் 
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் காண்போம் வா 

கவிதையில் மறைத்தேன் என் காதலை 
கனவினில் சிரித்தேன் நம் மோதலை 
உணவினில் சுவைத்தேன் உன் பெயரையே 
உயிரினில் அரைத்தேன் உன் கண்களை 

நினைவிலும் நிஜத்திலும் நீயானாய் என்றும் 
நீங்கா இடத்தில் காதல் தேன்னானாய் உன்னை 
அருகினில் அழைத்திட தைரியமில்லை 
அதானால் வெறுத்திட என் உயிரில்லை - நீ 

மண நாள் ஒன்று தரும் வரை இந்த 
மானும் உருகுது முதல் முறை 
பிழை ஏதும் கூறாமல் வழி விடு என் 
பின்னால் உன் பெயர் வரைந்திடு அன்பே ...! ஒரு நிலா இரு கனவு ...!
இதயம் இரண்டானாலும் 
இரவு ஒன்று தானே 
அந்த உறவுக்காக 

இருவரும் காதலிக்கிறோம் 
ஒருவர் நிழலில் 
இருவர் கனவில் ...!


மலரின் ஒத்திகை...!
தனிமையில் நானிருந்து 
உன் தலை கோர்வது 
போல் 

மலரைக் கோருகிறேன் 
இந்த ஒத்திகைக் கனவு 
பலிக்கும் என்ற ஆசையில் ...!

எது புனிதம் ...!
உலகத்தின் புனிதம் 
இந்த துளசி மட்டும் 
அல்ல

சீதையாய்  வாழ்கிற 
என் காதலும் 
புனிதம் தான் ...!


கடைசி உலகம் ...!


முதல் முதலாக 
உதட்டால் தட்சணை 
செய்கிறேன் 

நீயே என் 
கடைசி உலகமாய் 
இருக்க வேண்டும் என்று ...! 

தங்கமும் செல் போல் மாறும்
நண்பரே வாருங்கள் அடுத்து ஒரு கேள்வி ?

நம் முன்னோர்கள் காலத்தில் தங்கத்தின் விலை அணா கணக்கில் இருந்தது நம் காலத்தில் சுமார் எழு வருடங்களுக்கு முன் ஒரு கிராம் தங்கம்  ஐந்து  நூறு ரூபாய்யாக இருந்தது அனால் இன்று ஒரு கிராம் தங்கம் முவ்வாயிரம் இப்படி வரக் காரணம் யார்? நாம் தான் ஒரு காலக் கட்டத்தில் தங்கம் இரு மடங்காக அதிகரிக்கும் போது மக்கள் மோகம் தங்கத்தை நோக்கியது அதனால் தான் தங்கம் விலை அதிகரித்தது இதே போல் இன்னும் தொடர்ந்து கொண்டே போனால் தங்கம் வாங்க முடியுமா ?முடியாது ஆனால் பின் வரும் காலத்தில் பணத்தை வாங்க இந்த தங்கம் ஈடாகாது மீண்டும் நாம் பண்ட மாற்று முறையை தான் கையாடவேண்டும் எப்படி என்று கூறுகிறேன் இனி வருங்காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தங்கம் கிலோ கணக்கில் இருக்கும் ஆனால் பணம் எல்லாம் ஒரே இடத்தில் எங்கோ குவிந்துவிடும் அப்போது தங்கத்தை வைத்து உணவு உண்ண  முடியுமா ?முடியாது அக்கணம் நாம்  உணவுக்காக தங்கத்தை குறைந்த விலைக்கு பணமாக மாற்றி உணவு தானியங்களை நாம் வாங்கும் சூழல் வந்துவிடும் அப்போது பணம் தான் மூலகாரணமாக இருக்கும் என்ன ஒரு கொடுமை பாருங்கள் நாட்டில் எல்லாவற்றையும் விற்று விட்டோம். இப்போது பணத்தையும் விற்பனை சந்தையில் விற்கும் நிலை வரவேண்டுமா ?அச்சமயம் நம் நாட்டுக்காக தியாகங்கள் செய்தவர்கள் ஒரு விற்பனை பொருளாக மாறுகிறதை நினைத்து பாருங்கள் கண்கள் கூசும் பூமி தாய் கண்களில் எரிமலைகள் பொங்கும்  நாடே சாம்பலாக மாறும் நினைத்தாலே கொடுமையாக உள்ளதா ? இதோ

அதற்கு  ஒரு சரியான எடுத்துக்காட்டு தருகிறேன் 


நம் விஞ்ஞான வளர்ச்சியில் முதலிடம் வகிப்பது செல் போன் இந்த செல் போன் வந்த காலத்தில் ஒரு காலுக்கு ஒரு ரூபாய் அதே வெளியூர் காலுக்கு மூன்று ரூபாயாக இருந்தது.எஸ்.எம்.எஸ் கூட ஒரு ரூபாய் வாங்கினார்கள் அப்படியே வளர வளர செல் போன் மாடல் கூடியது ரகங்களும் பலவாறு வந்தது அதை மக்களும் வாங்கி வாங்கி பயன் பெற்றார்கள்.அது மட்டுமா ஒவ்வொருவருக்கும் ஒன்று இரண்டு போன்கள் என்று வைத்துகொண்டார்கள் இப்போது ஒரு காலுக்கு பத்து பைசா ப்ரீஎஸ்.எம்.எஸ் பூஸ்டர் கார்டு விலை மதிப்பே இல்லாமல் பேச மாதந்திரக் கட்டணம் விஞ்ஞானம் வளர்ந்தது அத்தோடு மெஞ்ஞானமும் அழிந்தது எந்த பொருளுமே வரும் போது இருக்கும் மௌசு நாளடைவில் குறையும் இது இயற்கை இது புரியாமல் மக்கள் குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல்  ஒரே பாதையில் சென்றால் ஏழை மக்கள் என்ன செய்வார்கள் யோசியுங்கள்?

நன்றி !

( சும்மாங்க ஒரு புதிய கோணத்தில் எழுத முயற்சித்தேன் படித்து  குறைகளை கூறுங்கள் )


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய புதுமையே நேற்றைய பழமைஎன்னடா இது ஒரு பழைய தலைப்புனு  நினைக்கிறேங்களா ?

ஆமாங்க ஐந்து பைசா பத்து பைசா இருபது பைசா இருபத்தி ஐந்து பைசா

எல்லாம் மலையேறி போச்சினு நினைகிறேங்களா ?


இல்லை இல்லை இன்றை சூழலில் அம்மாவசை வந்தால் தெருக்களில்

பார்க்கலாம் அந்த பைசாக்களை

பாருங்கள் மக்கள் எதையுமே வேஸ்ட்டு பண்ண நினைக்கவில்லை

அதே போல் தான் நாம் பலவகையான உணவுப் பண்டங்களை குளிர்சாதனப்

பெட்டியில் வைத்து உண்கிறோம்

இது நல்லதா ?

இல்லை இல்லை கூடிய விரைவில் இவை எல்லாம் தீமையாகவே இருக்கும்

நன்மை என்று நினைத்து வாழ்வது வாழ்க்கை அல்ல

நன்மையை தேடி வாழ்வதே வாழ்க்கை

நாமும் ஒரு நாளில்  அந்த அம்மாவசை இரவுக்கு பலியாக போகிறோம்

என்று சிம்பாலிக்க சொல்கிறேன்

என்னங்க புரிஞ்சதா ?

புரிந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்

நன்றி !


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------மாதம் தீண்டா வருடம் ...!எட்டிப் பார்க்கும் நேரத்தில் 
தட்டிக் கேட்கிறது நொடிகள் 

மணியாக மாறி 
நாட்களாகக் கூடி 
வாரமாகத் தேடி 
வாழத் துடிக்கிறது இதயம்  

மாதமும் வருடமும் 
நம்மை தீண்டாதவரை...!

கோயில் நிலா...!இரவு பாதையில் 
இவளும் ஓர் நிலவு தான் 

துன்பத்தை போக்கி 
இன்பத்தை தரும் இன்ப நிலா 

கஷ்டத்தை போக்கி 
கவிதையை தரும் கற்பனை நிலா 

வரவு செலவு வாழ்க்கையில் 
வந்து வந்து போகும் 
பாதி நிலா 

இவளே என் வீதி உலா 
என்றுமே என் இதயத்தின் 
கோயில் நிலா...!

ஆறறிவைத் தொலைத்தப்படி ...!
இயந்திரமாய் 

இருந்த இதயத்தில் 

வசீகரமாய் தோன்றிய 

காதலனே 

வானும் மண்ணும் 

தீண்டா ஆசைபோல் 

அசையாமல் நிற்கிறேன் 

சந்தனம் 

சாக்கடையில் சேருமா ?

கண்ணாம் பூச்சி ஆட்டம் ...!அவள் 
சும்மா என்று சொன்னதுமே 
சொக்கிவிட்டேன் 

அக்கம் பக்கம் 
யாரும் பார்க்கும் முன் 

அவளை 
என் 
கண்களில் செதுக்கிவிட்டேன் 

கண்ணாம் பூச்சி இரவில் 
கனவுப் பூக்களால் அரங்கேற்ற ...!உடைந்த மனம் ...!மனம் உருகப் பேசியவனின் 

மனதைப் புரிந்து கொள்ள 

முடியாததால் 

மனமுடைந்துப் போனேன் 

மலரும் நினைவில் 

நிஜமில்லா நிழலைக் கண்டு ...!

இறைவன் எழுதிய விதியா ?
எத்தனையோ இதயங்கள் 

என்னைக் கொய்தபோதும் 

ஏற்காத மனது 

உன்னை மட்டும் 

ஏற்கக் துடிக்கிறது ஏன்?

இறைவன் எழுதிய விதியா ?

உப்பிட்டவரை உள்ளளவு நினை ...!


வான்மகள் 
வேர்வை சிந்திக் களைத்ததால் 
தான் என்னவோ!

மண்ணில் முத்தமிட்ட 
துளிகள் எல்லாம் 
கடலைத் தேடி ஓடுகிறதோ !

ஹிஷாலீ ஹைக்கூ ...!


முள் பாதை 

தேய்ந்த செருப்பு 

கண்ணிருந்தும் குருடன் ...!
வறுமை ...!
வயிறுகள் அழுதல் 
வறுமை 

வரப்புகள் இழந்தால் 
வறுமை 

நெருப்புகள் அணைந்தால் 
வறுமை 

நெஞ்சங்கள் எதிர்த்தால் 
வறுமை 

உறவுகள் வெறுத்தால் 
வறுமை 

உணர்வுகள் எரித்தால் 
வறுமை 

காதலில் தோற்றால் 
வறுமை 

காலம் வதைத்தால் 
வறுமை 

எங்கும் வறுமை 
எதிலும் வறுமை 
என்று எழுதிவிட்டோம் - இதை 

அழிக்க ஆளில்லை 
அரவணைக்கத் தோளில்லை 
தொடர்ந்து கொண்டே போகிறது 
தொற்று வியாதியாய் 

இதை விரட்ட யாருமில்லை 
விடைத் தேடும் கேள்வியாய் 
வராவிட்டால் 
வாழ்வில் இல்லை பெருமை 

அருமையாய் சொன்னார்கள் 
சிறுமையிலும் வறுமையை 
ஆதரிக்கிறோம் 
வறுமை ஒழிப்பு தினம் என்று ...!


நீயும் நிலா தான் ...!இரவில் மட்டும் வருபவள்
நிலவல்ல ?

எண்ணியக் கணமெல்லாம் என்
முன்னே நிற்பவளே
உண்மையான நிலா !

அப்படியென்றால்
நீ வெறும் ஒளியா?
இல்லை இரவின் பலியா ?
சொல்

இல்லையென்றால்
உன் மறு பின்பம் தான்
இந்த வெண் மேகமோ?

என்னைக் காணத் தவித்து
கலங்கிக் கலங்கி
கரையும் நிழலில் ஒளியாக
வந்து என் உயிரை
வாங்கி நிலவாகிறாயோ

பெண்ணே அப்படியென்றால்
நீயும் நிலா தான் !!!உண்மையின் வெளிச்சம் ....!


விமலா தேவி இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் இதில் தேவி அடக்கம் அமைதி பண்பு மரியாதை தெரிந்த பெண் இருந்தும் அறிவில் கொஞ்சம் மட்டம் என்பதால் விமலா செய்யும் தவறுகளுக்கெல்லாம் தேவியே பொறுப்பேற்று திட்டு வாங்குவது வழக்கம் .................... 

ஓர் நாள் அதே போல் விமலா சரண்டர் செய்ய சொன்ன எண்ணை தேவியும் சரண்டர் செய்தாள் ஒரு வாரம் கடந்தாது அவர் அலுவலகத்தில் உள்ள AGM வெளியூர் சென்றார் அப்போது அவர் கொண்டு சென்ற internet photon வேலை செய்யவில்லை 

உடனே விமலாவிற்கு போன் செய்து internet photon வேலை செய்யவில்லை என்னம்மா வேலை செயிறேங்க ஒரு பொறுப்பே இல்ல எல்லாம் Time Pass க்குதான் வேலை செய்றேங்க என்றார் 

உடனே விமலா தேவியிடம் நீ நான் சொன்ன எண்ணை சரண்டர் செய்யாமல் வேறு எண்ணை சரண்டர் செய்து எண்ணை திட்டு வாங்க வைத்து விட்டாயே இதை நான் எம்டியிடம் கூறாப்போகிறேன் என்றவாறு சென்றாள் .... 

இடையில் போன் வந்தது விமலா நெட்வொர்க் ஆகாததால் இன்டெர்நெட் வேலை செய்யாமல் இருந்தது இப்போது வேலை செய்கிறது என்று sorry கேட்டார் AGM 

உடனே விமலாவும் ஓகே சார் என்று போன் வைத்துவிட்டு அமைதியாக 
இருக்கையில் அமர்ந்தாள் ......... 

அன்று இரவு 
ஹலோ நான் தான் மனச்சாச்சி பேசுறேன் ............. 
ஏன் அழுகிறாய் ......... 
அதுவா நான் செய்த தவறை நினைத்து தான் 
என்ன தவறு செய்தாய் .........? 
என்னுடன் பணிபுரியும் எனது தோழியிடம் அவள் செய்யாத தவறுக்காக அதிகமா கோவப் பட்டுவிட்டேன் 
இருந்தும் மன்னிப்பு கேட்க மனம் தடுமாறுகிறது ........! 

அப்படியா ......? ஓகே நீ செய்த தவறை நீயே அறிந்தபின் ஏன் மன்னிப்புக் கேட்க தயக்கம் ............ 

அதுவா நான் போய் கேட்டால் என் மதிப்பு குறைந்துவிடும் அதானல் இதை அப்படியே மூடிவைக்க போகிறேன் சோ நீ கொஞ்சம் நேரம் என்னை தொந்தரவு செய்யாதே என்று தூங்கிவிட்டாள் 

மாதம் முடிந்தது ஓர் நாள் அவள் அலுவலகத்திற்கு இன்டர்நெட் பில் கொரியரில் வந்தது அதை தேவியே வாங்கி படித்து பார்த்தாள் பின் தனது மேலிடத்திருக்கு அனுப்பினாள் 

அவளும் அதை பார்த்துவிட்டு காசோலை கொடுக்க சொல்லி தேவியிடம் கூறினாள்  தேவியும் அவ்வலுவலகத்திற்கு போன் செய்தால் காசோலையை வாங்கி செல்ல அவரும் வந்தார் 

வந்ததும் காசோலை தொகையை கண்டும் திகைத்தார் மேடம் இந்த தொகை தவறுதலாக எழுதியுள்ளது எங்களுக்கு வரவேண்டிய தொகை Rs.5700௦௦ நீங்கள் 700௦௦ குறைத்து போட்டுள்லேர்கள் சோ இது என்ன கணக்கு என்றார் 

உடனே தேவி சார் நாங்கள் இதில் உள்ள ஒரு இன்டர்நெட் நம்பர் சரண்டர் செய்துவிட்டோம் சோ அத்தொகையை கழித்து காசோலை போட்டுள்ளோம் என்றாள் 

உடனே அவர் இல்லை மேடம் நீங்கள் சரண்டர் லட்டர் எதும் கொடுக்காததால் அந்த எண் சரண்டர் செய்யவில்லை அதனால் நீங்கள் அத்தொகையும் சேர்த்து தான் செலுத்தவேண்டும் என்றார் உடனே தேவி சார் உங்க ஆபீஸ்ல் தான் லட்டர் எதும் வேண்டாம் நாங்கள் சரண்டர் செய்துவிடுகிறோம் என்று கூறினார்கள் அப்படி என்றால் தவறு உங்களிடமே சோ நாங்க எப்படி பணம் செலுத்த முடியும் என்றாள் தேவி 

உடனே சாரி மேடம் இப்போது இருக்கும் பெண்கள் கொஞ்சம் புதுசு சோ அதில் உள்ள பாதி தொகையை நீங்கள் கட்டினால் போதும் . 

அப்படியே ஒரு சரண்டர் லட்டரும்  கொடுத்தால் நன்றியாக இருக்கும் என்றார் 

ஓகே சார் நான் லட்டர் தருகிறேன் அன்று நான் சரண்டர் செய்த எண் இதுவா கொஞ்சம் கூறுங்களேன் ...என்றாள் 

உடனே அவர் கூறிய எண்ணும் அன்று சரண்டர் செய்த எண்ணும் மிகவும் சரியாக இருந்தது சோ அன்று அவள் செய்தது மிகவும் சரியானது என்று அப்போது தான் புரிந்தது 

உடனே தேவி விமலாவிடம் நீ அன்று சொன்னாய் நான் சரண்டர் செய்த எண் தவறு என்று என்னை எம்டியிடம் திட்டு வாங்க செய்தாய் ஆனால் அன்று நான் செய்தது சரிதான் நீ தான் தவறாக என்னை மாட்டி விட்டு வேடிக்கை பாத்திருக்கிறாய் இதை நான் போய் எம்டியிடம் சொன்னால் உன் வேலையே போய் விடும் என்று கத்தினாள் 

இதை கேட்ட MD அவர் அறையில் இருந்து வெளியே வந்து விமலாவை கண்டபடி திட்டினார் நீ இதற்கு முன் செய்த தவறுகள் எல்லாம் தேவி தான் செய்தாய் என்று கூறீனாயே அதுவும் இதே மாதிரிதான் நடந்திருக்கும் என்று அவளை வேலையை விட்டு போகச் சொன்னார் 

விமலாவின் முகம் செத்து விட்டது அன்றே ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இவளவு பெரிய அவமானம் நடந்திருக்காது எண் வேலையும் போயிருக்காது நான் செய்த தவறுக்கு நல்ல தண்டனை கிடைத்தது என்று அழுதுகொண்டே சென்றாள் 

உடனே தேவி தனது எம்டியிடம் பேசி அவ்வேலையை அவளுக்கே வாங்கி தந்தாள் அவளும் தேவியின் பெருந்தன்மையை நினைத்து நன்றி கூறினாள் 

இதுவரை விமலா செய்த அனைத்து தவருதளுக்கும் தேவி திட்டு வாங்கியதை நினைத்து வெக்கி தலைகுனிந்து அதற்கு நன்றி கடனாய் இன்றையில் இருந்து உண்மையான வாழ்க்கை வாழ தொடங்குகிறேன் என்று உறுதி மொழி எடுத்தாள் 

அலுவளகத்தில் உள்ள அனைவரும் தேவியின் பெருந்தன்மையே நினைத்து பாராட்டினார்கள் 

அப்போது தேவி சொன்னாள் உண்மை வெகு நாட்கள் தூங்காது விரைவில் வெளிச்சம் போட்டுக் காட்டும் என்று கூறி தனது பணியை தொடர்ந்தாள் வெற்றியுடன் ...! 

எழுதியவர் 
உங்கள் ஹிஷாலீ.

இவள் காதல் இவளுடனே...!


எட்டிய தூரம் எழுத்துக்கள்
கட்டி அணைத்தாலும்
மண்ணீர் செல்லும்வரை இந்தப்
பெண்ணீர் இதயத்தில்
கண்ணீர் நிற்கவில்லை
காதலும் பொய்க்கவில்லை...!

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்... !


செம்மண் வகுடுகள்
பாலைவனமானத்தால்
விவசாயம் நாவரண்டு
வான் மழையை
வாய் பார்த்து நின்றது
விதைகள்...!

மக்கிய விதைகள்
மண்ணைக் கெடுப்பது போல்
சொக்கிய கண்கள்
சோகத்தில் வான் பார்த்தது
சோறுக்காக...!

எட்டிய துளிகள் எங்கே என்று
எங்கூரு சாமி கேட்க
கக்கிய மழை
காணாமல் உருண்டு ஓடியதால்
எங்கள் கண்ணீர் துளிகள்
கரை சேராமலே பட்ட இமையில்
கடலானது...!

கடலும் ஆவியாகவில்லை
கதிரும் போணியாகவில்லை
ஏணியாகவே நிற்கிறது
ஏர் முனைகள் அதில்
ஏளனமாய் புத்துகட்டி வாழ்கிறது
எறும்பினங்கள் ...!

அரும்பினங்கள் எல்லாமே
அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாம்
வரும் ஆருயிருக்கு விவசாயம்
ஒரு கேள்விக்குறியாம...!

இதுதான் காதல் சம்மதமா...!


அவளுக்குள்ளே நான்
எனக்குள்ளே அவள்
இருந்தும் பேசாமலே
பேசினோம் கண்களால்
ஒன்றரை வருடங்களாக
வெறும் சாலையில் மட்டுமே

திடீர் திருப்பமாய்
நான் தெரியாமலே
சென்றேன்...
தினம் தினம் தேடியவள்
சற்றென ஓர் நாள்
எனைக் கண்டதும்
புன்னகைத்தாள்
இது தான் காதல் சம்மதமா...?

நல் தோழனாக...!


என் காதல் தோல்வியானது
இருவரும்
தொலைவில் வாழ்ந்ததால்

மறு காதல் வேல்வியானது
முன் காதலை
முரணாக யோசித்ததால்

கேள்வியானது இதயம்
இன்று பின் காதலை
எண்ணி வருந்துகிறேன்

தோள் கொடுக்கும்
தோல்வியில்லா காதலில் வாழ
நல் தோழனாக...!

ஒப்பில்லா உழவு... !


இலவச மின்சாரம்
இந்திய பட்ஜெட்டில் உழவன்
ஏர் பிடிக்கவில்லை
எரிபொருளை வீணடிக்கவில்லை

வேளாண்மை திட்டத்தில்
வேடிக்கை பேச்சுக்கள் அங்கே
கூழ் குடிக்கவில்லை கூட்டுறவுமில்லை
பாட்டுறவு தோட்டத்திலே பாடுதுபார்

பேயிக்கு ராத்திரியாம்
நோயிக்கு மாத்திரையும்
என்று பேர் சொல்லும் உலகில்
உழவுக்கு யாத்திரையாம்
உணவுக்கு மாத்திரையாம்
என்று எவரும் கூறவில்லை இதை
ஏரும் மறந்ததில்லை...!

மும்மாரி மழையுமில்லை
முப்பொழுதும் விளையும் பயிருமில்லை
எப்பொழுதும் விஞ்ஞானம்
ஏற்றமிறக்க நிலையுமில்லை இதனால்
வாடிய பயிர்களுக்கு வலிக்கவில்லை
வான் மகள் பூமிக்கு வருத்தம் கொள்ளை

தேன் மழை பொழியும் தேகத்தில்
வியர்வை ருசிக்கவில்லை
விருந்தும் புசிக்கவில்லை
மனிதன் மாறிவிட்டான் - அதற்கேற்ப
மண்ணும் மாறிவிட்டது
இன்னும் விதைக்கவில்லை என்றால்
கொன்னு குவிக்கவேண்டும் இல்லை
சோமாலியா கொடுமையை உணரவேண்டும்

கரும்பை விதைத்து இரும்பு வாங்கியவன்
கல்லை ஒடைத்து காப்பு வாங்கினான்
பயிரை விதைத்து உயிரை வாழவைத்தவன்
பிளாட்டு போட்டு பணத்தை வாங்கினான்

காணி நிலம் கையளவு பணம்
போணி செய்கையிலே
பொய்யானது பணம் இதோ

ஐஞ்சுக்கும் பத்துக்கும்
கடன்வாங்கி
ஆட்டுபுளுக்கையும் மாட்டுச்சாணமும்
உரமா போட்டு

நாத்து நட்டி நீர் பாய்ச்சி
நல்ல சோறும் மண்ணும் சோறும்
சேர்த்து குழப்பி
உண்ட பசி தீரும் முன்னே

கந்து வட்டி கழுத்தறுக்க
தாலி கட்டி வந்தவளின்
தேகம் தவிர்த்து அடகுவைக்க

இது தேவையானு
வறுமை கேட்கையிலே
பொறுமையாய் புன்னகித்தேன்
நான் வளர்த்த மகசூலுக்கு அதை
நாலாவதாக ஒருத்தன் வந்து
லாபம் பெற

இதைக் கண்டும்
கண்ணீர் வரவில்லை கடவுளுக்கு
கண்ணும் தெரிவதில்லை
எண்ணி அழுவதாலே
இறைவன் வருவதில்லை இனி
உயிர்களும் நிரந்திரமில்லை

உறங்காமல் சுத்தும் உலகத்தில்
உழவனே இறைவனே என்று
உணரும் வரை...!

காதல் பறவை ...!


என் இதயத்தை
இடம் பெயர்த்தேன்
இளம் வெயில்
சூரிய ஒளியில்
இளவரசனே

உன் இதயத்தை
பரிசாக தந்தால்
ஸ்பரிசமுடன்
பவனிவருவோம்

இந்த பால் வண்ண
கடற்கரையில்
காதல் பறவைகளாக ...!

தேவை ஒரு விவசாய புரட்சி... !


பாலித்தீனுகும் பறவைக் காச்சலுக்கும்
மதிப்பு கொடுக்கும் நண்பா
பழைய சேற்றுகும் பானை பொழப்புக்கும்
மதிப்பு கொடுக்க மறந்ததேன்

சேலை நெய்ய பருத்தி வேண்டும்
ஓலை நெய்ய தென்னை வேண்டும்
வேலை செய்ய நிலம் வேண்டும்
வேர்வை சிந்த விவசாயம் வேண்டும்

எட்டடுக்கு மாடியிலும் எட்டி பார்க்கும்
பொன்னியரிசி நீ ஆறடி போகையிலே
அள்ளிப் போட வேணுமட வாக்கரிசி
பாஸ்ட் புட்டு காலமெல்லாம்
பாடை கட்டப் பார்க்கு இந்த பாதை
மாறி வாழ்ந்து பார்த்தாள்
பவ மன்னிப்பு கிடைக்குது

ஏழு லோகம் சுத்தி வந்த
என்ன பெத்த ராசா நீ
என்னாதான் சம்பாதிச்சாலும்
வாயிக்கு ருசியா ஆக்கிப்போட
வேணுமட அரிசி கொஞ்சம் லேசா

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்
மாறி போனது அன்று இனி
வீட்டுக்கொரு விவசாயம் செய்வோம்
மாறப்போகுது இன்று

உழவனுக்கு திருநாளாம் அதுவே
ஊரெல்லாம் வருடத்தின் முதல் நாளாம்
உழவும் இப்பே இல்லேனான் நாம்
உயிர் வாழ்வது சில நாளாம்

ஆடு மாடு கூட்டம் போல
வீடு மாடி பெருகுது குழந்தைங்க
ஓடி ஆடி விளையாட
ஒற்றை மாடி தான் மிஞ்சப்போகுது

சுதந்திரமெல்லாம் இயந்திரமாய்
மாறிப் வரும் காலத்தில்
சுகாதார கேட்டாலே
சுடுகாடாய் நாற்றம் வீசப் போகுது

பேனா பிடிக்கும் கையாலே
ஏர் பிடிக்க கத்துக்கோடா தோழ நீ
ஏழை தலைமுறைக்கே எடுத்துக்காட்டாய்
வாழ்ந்து காட்ட வாடா
விவசாய விஞ்ஞனியா வாடா

புரட்சி செய்வோம்
புரட்சி செய்வோம் வாடா
பொன்னு விளையிற பூமியிலே
பொருள விளையவைப்போம் வாடா

சே.குவேர - ஒரு மாமனிதன்


ஜூன் பதிநான்கில்
வான் பார்த்த மன்னனே
போராளி பெயரால்
ஊராள வந்த சிங்கமே - நீ

ஐந்தில் முதல்வனாய்
அரசாச்சி கண்ட ஆண் மகனே
ஆஸ்துமா ஆட்கொண்ட போதும்
அயராது விளையாடிய ரக்பி வீரனே

மருத்துவ துறையில்
மனம் நாடிய போதும்
மார்க்சியத்தில் ஈடுபட்ட
புரச்சி வேந்தனே -மீண்டும்

கியூபா புரட்சியால்
கரந்தடிப் போர்முறை
கட்டுரையில் குடியேற்றிய
கார்கால காவியனே - உன்னை

குளியல் சிக்கனத்தில்
பன்றி பட்டப் பெயர் கொண்ட
சாங்கோ பொருளுரைக்கு நீ
சதுரங்கத்தை பன்னிரெண்டில்
சுற்றிய கையேடு

கவிதை விரும்பி
அரும்பும் நூலகமாய்
மூவ்வாயிர எண்ணிக்கையில்
மோட்டார் ஈருருளிக்
நூலால் திரைப்பட விருதை
தட்டி சென்ற தொழுநோய்
தொண்டின் இறக்கமாணவனே


இலத்தீ அமெரிக்காவை
பாகம் பிரிக்கா பக்குவ
குடிமகனே
சே எண்ணும் தோழனாய்
தோள் கொடுத்து வந்த உன்னை

வாரி எடுத்தது ராணுவம்
வாழ்வை பறிக்கும் போது
வாடா ஒரு நிமிடம் பொறு
நான் எழுந்து நிற்கிறேன்
பிறகு என்னை சுடு என்ற
நீ சோசலிச ராஜவே

உன்னை இழந்த
மனைவி பிள்ளை
மார் தட்டி
பெருமிதம் கொண்டதுபோல்
நாங்களும் பெருமிதம்
கொள்கிறோம்

நாளைய உலகை
நல்லதோர் சோசலிச
ஆச்சியாக மாற்றுவோம்
என்று மனதார வேண்டி
இக்கவிதையை சமப்பிகிறேன்

இளைப்பாறாமல் போனதால்...!


கடவுளுக்கு தெரியும்
என்
கல்லறை நாட்கள்
காதலுக்கு புரியும்
என்
கருவறை நாட்கள்
இவை
எதுவுமே புரியாமல்
உறவுமே தெரியாமல்
உறைந்துவிட்டேன்
உயிரே
உன் இதயத்தில்
என் இதயம்
இளைப்பாறாமல் போனதால்...!

நீ தான் பூ மகளோ...!


வண்ணத்தின் தயாவளோ இல்லை
வானவில்லின் சேயவளோ நீ
யாரென்று சொல்லும் முன் நானொன்று
சொல்கிறேன் கேள் உன் பேர் பூ மகளோ

இன்பம் துன்பம் அறிந்ததில்லை
இல்வாழ்க்கை புரிந்ததில்லை
ஜதி மத வேதம் பார்க்கா
சமத்துவப் பூ மகளோ

உன்னை யாரும் அடித்ததில்லை
உலகில் யாரும் வெறுத்ததில்லை
கெட்ட பெயர் வைத்து அழைக்காத
ஒற்றைப் பெயர் கொண்ட பூ மகளோ

பந்த பாசம் உறவுமில்லை
பணம் சொத்து ஆசையுமில்லை
கொலைக் குற்றம் செய்யாத
கோவில் தெய்வம் பூஜிக்கும் பூ மகளோ

கருவறை பாரமில்லை
கண்ணீரில் வீழ்ந்ததில்லை
ஆடம்பர வாழ்க்கையாலே
ஆணவத்தில் அழியாத தியாகத்தின் பூ மகளோ

அண்ணன் தம்பி பகையுமில்லை
அனாதையாய் வாழ்ந்ததுமில்லை
நகை நட்டு அழகைவிட
நாளு மொழம் பூவழகாலே
மங்கலமாய் சிரித்திருக்கும் பூ மகளோ

மாமியார் கொடுமையில்லை
மானங்கெட்ட பொளப்புமில்லை
புத்தி கெட்ட மனிதர்களுக்கு
புத்தி புகட்டும் ஊனமில்லா பூ மகளோ

பூவின் வாசம்...!


ஆடையில்லாமல் மலர்ந்தேன்
அகிலத்தில் ஓர் நாள் வாழ்ந்தேன்

வண்டுக்கும் தேன் தந்து சென்றேன்
வளரும் தமிழுக்கு கவிதந்து மகிழ்ந்தேன்

நிலவுக்கு மணம் தந்து மறைந்தேன்
நீர் காற்றுக்கும் உணவாகி மகிழ்ந்தேன்

மனிதனுக்கு மருந்தாக பிறந்தேன்
மண்ணுக்கு விதையாக மகிழ்ந்தேன்

இறைவனுக்கு மாலையாக முடிந்தேன்
இதயமற்ற பெண்களுக்கு இல்லறத்தில் மகிழ்ந்தேன்

உதிக்கும் சூரியனுக்கு உறவாய் வருகிறேன்
உலகின் இயற்கைக்கு அழகாய் பூக்கிறேன்

என்றும் பூவாய் எதிலும் பூவாய்
வென்று வென்று வாழ்கிறேன்
என் பூவின் வாசத்தில்...!

பூவின் ஆராதனை...!


ஆயிரம் பூக்கள் பூத்தாலும் அதில்
இறுதிப்பூவாய் நானிருப்பேன் - என்றும்
இதயமற்ற மனிதருக்கும் நான்
உதயம் உற்ற பூவிரிப்பேன் - நாளைய

வாழ்வை தேடும் வியாபாரிகளுக்கு
வாரி வழங்கும் வள்ளலாய் வாழவைப்பேன்
நேற்று என்று நினைப்போரை
இன்றே நன்று என்று உணரவைப்பேன்

மாவிலைத் தோரணத்தில் மலர் மாலை
சூடி மகிழவைப்பேன் என்றும்
மஞ்சள் குங்குமம் நிலைத்திருக்க
மங்கையரின் அங்கத்தில் அணிவகுப்பேன்

சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு
சிங்காரமாய் விளையாட சங்கம் வகிப்பேன்
சீர்சனத்தி பழங்களிலே
பேர் உசத்தியாய் சிவந்திருப்பேன்

காலமெல்லாம் காத்திருப்பேன் என்
கருணை வடிவான இறைவனுக்கு
வண்டிற்கு பசி தீர்ப்பேன்
என் வண்ணத்தில் வட்டமிடும்
வண்ணத்துப் பூச்சுக்கு காவலிருப்பேன்

பூவெல்லாம் ஒன்று கூடும் போர்க்களத்தில்
பொல்லாத பூக்களாய் சாகடிப்பேன்
வளரும் கவிஞருக்கு கவி கொடுப்பேன்
வாழ்ந்து கெட்டு போகும் போது
வாக்கரிசியாய் சேர்ந்து நடப்பேன்

எங்கு சென்று வந்தாலும் இறுதியில்
மண் சென்று மக்கியிருப்பேன்
மறு ஜென்மம் நிறைவேற விதையாய்
வித்தேடுப்பேன் பூ விதையாய் வித்தேடுப்பேன்

பூவாளே காதல் சொல்ல வந்தேன்...!கொல்லையில மல்லிப் பூவு
கொண்டு வந்தேன் ராஜாத்திக்கு நீ
அல்லி முடிஞ்சா கூந்தலிலே
ஆசையாக சூடிக்கிட்டு...

தண்ணிக் குடம் தாகத்தாலே
தளதளனு சிரிச்சிப் புட்டு
கனகாம்பரம் வெக்கத்தில என்ன
காதல் பார்வை பார்த்தவளே

அல்லிப்பூ செண்டாலே
அய்த்தான் வாறேன் பக்கத்துல
ஆசையாக முத்தம் தந்தா
ரோஜா தருவேன் என்
ராஜாத்திக்கு ராஜாவா நானுமிருப்பேன்

நீயிருக்கும் இதயத்திலே நித்தம்
ஒரு பூ பூக்கையிலே
அச்சமெல்லாம் பேசுதுங்க
அகிம்சையாக கூசுதுங்க
மிச்சம் மீதி வாசத்திலே
மீட்க வாங்க ரோசத்துல
மரிகொளுந்து மாமா எனக்கு
மஞ்சத் தாலி தாமா

காதல் பூ சொன்னவளே
காகிதப்பூ பெண்ணவளே வைகாசி
மாதத்துல வாழைப்பூபந்தலில் பரிசம்போட்டு
மிச்ச மீதி பூவையெல்லாம்
மாலையாக கோர்த்து வச்சு
தாலிகட்டி கைபிடிப்பேன் தங்கமே
தாழம்பூ சாட்சியாக ....!

வார்த்தையை நினைத்தபடியே...!


வார்த்தைகள் வலிக்கவில்லை - பெண்ணே
வந்த கால் முடிந்த பின் - என்
வயது வலிக்குதடி உன்
வார்த்தையை நினைத்தபடியே

காதல் கலவரம்...!


அதிகம் பேசாதே என்ற நீ
அளவுக்கு அதிகமாய் பேசிவிட்டாய்
எஸ்எம்சில் என்
இருபது வருட கதைகளை
ப்ரீயானது காதல்
பேலன்ஸானது மோதல்
கழற்றி எறியும் சிம்மைப் போல்
காதலை மாற்றிவிட்டாய்
காரணம் கலவரம் என்று ...!

தொடர்கரை சீரியல்...!


எடுத்த கை பேசியை
வைக்க மனமில்லை பெண்ணே
நீ கொடுத்த முத்தங்கள்
படுத்தும் பாட்டை நினைக்கையில்

கடுத்துப் போய் கண்ணீர் விடுகிறேன்
உன் கரையும் என் கரையும்
தொடர்கரை சீரியல் போல்
தொடருவதால்...!

இதயம் இறந்துவிடும்...!


எரிமலை வெப்பம்
எகிறி குதித்ததால்
பனி மழை தீவில்
படர்ந்த காட்டுத் தீ உருமாறி....

கடல் வழி உப்பில்
கரையும் உயிரினங்கள்
ஒளிவிடும் சுவாசத்தில்
ஒளி வேதி நிலங்களை யெல்லாம்
கொலை நிலமாய் மாற்றி

உணவிடும் தொழிற்ச்சாலையில்
ஊரை சுற்றும் நச்சு புகைகள்
மகரந்த துகள்கள் மூலம்
மரணக் காற்றில் ஊடுருவி

சாலை வட்டத்தில் வாய் விட்டு
சிரிக்கும் புகை தேவதை இன்றைய
விமான ராணியாய்
விண்ணையும் மண்ணையும்
விளையற்ற நிலமாய் வளர்த்து

ஐய்ம் பூதங்களையும்
சிறுக கொன்று பெருக தீர்க்கும்
சுவாசங்கள் நாசங்களாய்
மாறக்கண்டும் நாம்
திருந்தவில்லை எனில்
இதயம் இறந்துவிடும்...!

என்னடா இது உலகம்...!


பிச்சைக் காசு
குப்பையாச்சி
பேர் வைத்த பிள்ளையாலே
அவன்
கட்டி வச்ச மூட்டையில்
கட்டை உறங்கும் நேரம்
எச்சிலாச்சி ஈக்களுக்கு
என்னடா இது உலகம்...!

என்றும் இளமையாக...!


எழுத எண்ணமில்லை
எழுதாத ஆசையுமில்லை
வண்ணக் கனவுகளில்
வாழ்ந்து முடிக்கிறேன்
என்றும் இளமையாக...!

காதலித்தபடியே...!


குமுறும் நெஞ்சத்தில்
கொலுவிருக்கும்
இன்ப துன்பங்கள்
பூஜைக்குரிய தலைவனை
காதலித்தபடியே...!

நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!


அறிமுகம் என்னவோ நீ
அண்ணனின் நண்பன்...
துணை முகமாக என்னை
தோழியாக்கியவனே இருவரும்
கணிமுக தொடரில்
ஒருமுகம் பதித்தோம்...

நட்புகள் நாளுக்கு நாள்
நலம் பெற...
பெயரை மறந்து
போட போடி என்று
போட்டி போட்டு நட்பை
கூறு போட்டோம்....

எவர் மனம் புண்பட்டதோ
எம்மிருவர் நட்பில்
ஏழரை நாட்டு சனிபோல்
என் இதழ் நான் உன் காதலியா
என்று கேட்டதால்
இரு கரையாக பிரிந்தோம்
இதயங்கள் பேசாமல்

பிரிவின் வலி இணைக்கும்
என்ற ஆசையில் காத்திருந்தேன்
ஆண்டுகள் ஆழத் தொடங்கியது
அமைதிகள் மோதத் தொடங்கியது
கனவில் கூட சேரவில்லை
காயங்கள் இன்னும் ஆறவில்லை

இதயம் கல்லான உன்னில்
நானே மீண்டும் இணைய
வந்தேன் என் அன்பே
நீ இணைந்த மறுகணமே
கல்லாய் மாறிவிட்டாய் என்
காதலைக் கண்டா இல்லை
உன் காதலை கொண்டா

பேசாமலே பேசுகிறாய்
இருவருக்கும் புரியாமல்
மின்னலே பாடலில்
நெஞ்சை பூப் போல் கொய்தவளே

நம்மை அறியாமலே... !


தொற்றிக் கொல்கிறது உன்
தோல்விகளும் என் கேள்விகளும்
நம்மை கேட்காமலே ....

பற்றிக் கொள்கிறது உன்
கண்களும் என் காதலும்
நம்மை அறியாமலே...!

குட்டி கவிதைகள்....!


மது
மாக்கள்
மங்களமில்லா பெண்கள்

அதிரடி சோதனை
லஞ்ச ஒழிப்பு
அஞ்சாத அரசியல்

ஆயுள் தண்டனை
முப்பது ஆண்டுகள்
உல்லாசம் இலவசம்

புகழ்மாலை உதிர்ந்தது
நாரைபோல்
மனுக்கள்

பிரபஞ்சத்தில்
மாற சக்தி
மனிதன்

கல்வி அறக்கட்டளை
கட்டிட பாதுகாப்பு
வரிக்கு பயந்தது உயில்

ஏற்றுக் கொள்வாயா என்னை...!


என்றோ ஓர் மூலையில் இருந்து
என்னை உட்கொள்ளும் உன் நினைவுகள்
காதலா இல்லை தேடலா என்று
புரியாமல் புலம்புகிறேன்....
என் புனர் ஜென்ம புண்ணியமாய்
விரும்பாமல் விரும்புகிறேன் அன்பே
ஏற்றுக்கொள்வாயா என்னை !!!!!!

காதல் தேசம் - 1


அவன் ஒரு தேசம்
நான் ஒரு தேசம்
இருவரும் பேசுகிறோம்
ஒரு மொழி கோசம்
அதுதான் காதல் தேசம்

சாதலே இல்லா காதல்...!


சுமையென நினைக்காமல்
சுகமென சுமந்த
தாயின் காதல்
தாய்ப்பாலில் முடிகிறது

அழகை நினைக்காமல்
அன்பை பகிர்ந்த
தந்தையின் காதல்
முதலெழுத்தில் முடிகிறது

மழலை மணியோசையில்
மனதை களவாடிய
சுற்றத்தின் காதல்
முத்தத்தில் முடிகிறது

கனவாய் இல்லாமல்
காதலாய் மலர்ந்த
பெண்மையின் காதல்
பள்ளியில் முடிகிறது

இடைப்பட்ட இன்பத்தில்
இருகைப் பற்ற தொடரும்
கல்லூரி காதல்
கண்ணீரில் முடிகிறது

பிறவிப் பயனை
பின்னோக்கும்
காலத்தின் காதல்
கடமையில் முடிகிறது

மீண்டும்
தாய்மையின் தாலாட்டில்
சாதலே இல்லா காதலாய்
காதல் பிறக்கிறது...!

உண்மை ...!


இலையுதிர்காலம்
உண்மை ....
இனியொரு வசந்தக்
காலத்தை தேடியபடியே ....!

பனியுதிர்காலம்
உண்மை ....
பரந்த உலகில்
பசியை தேடியபடியே ....!

கனியுதிர்காலம்
உண்மை ....
விதியின் நிழலில்
சுவையைத் தேடியபடியே ....!

மனமுதிர்காலம்
உண்மை .....
மரணம் அழைக்கும் போது
மண்ணை தேடியபடியே .....!

இருந்தும் .....
மரணத்தையே வெல்லும்
உண்மை .....
மறு ஜென்மமாய் பிறக்கிறது
இம் மண்ணில் .....!

பண்பே நிலையான அன்பே ...!


நிலவைத் தொட்ட ஒளியில்
நிழலின் வாசம் அன்பே

மழையைத் தொட்ட ஒளியில்
மண்ணின் வாசம் அன்பே

கதிரவன் தொட்ட ஒளியில்
காதல் மலரின் வாசம் அன்பே

விண்மீன் தொட்ட ஒளியில்
விடியலின் நேசம் அன்பே

அவ்வன்பின் ஒளியில் பிறந்த
உலகம் அன்பே

உலகே உயிராய் சுமந்த
மண்ணும் அன்பே

மண்ணில் பிறந்த மானிடனின்
மனதில் புகுந்த பண்பே
ஓர் நிலையான அன்பே ....!

உன் வசப்படுத்தியதால்...!


அழகுக்கு
ஆராதனை இல்லை அன்னமே...
உன்
அறிவுக்கு ஆலாபனை செய்கிறேன்
ஏன் தெரியுமா?
வடி முட்டாளையும் உன்
வசப்படுத்தியதால்...!

காதல் பிரசதாம்...!


நான் வராத ஊரில்
உன் வருகை எனக்கு
வரப்பிரசாதம்...!

நீ வாழாத பூமியில்
நான் வாழ்வது எனக்கு
வறண்ட பிரசாதம்...!

நானும் நீயும் சேர்ந்து
வாழும் தனிமைக்கு தான்
காதல் பிரசதாம்...!

நல்ல காதலர்களாக...!


இறப்பேன் என் கல்லறையில்
வேறொருவன் தூங்கும்
தருணம்...!

******************************************

தனிமையில்
செல்லும் போது தான்
நீ நானாகவும்
நிமிடங்கள் தேனாகவும்
சுரக்கிறது என் இதயத்தில்...!

******************************************

வெற்றி பெற வேண்டும்
காதலில் அல்ல
நம்மை தாங்கும்
காலங்களின் மாற்றத்தில்
என்றும் அழியா
நல்ல காதலர்களாக...!

******************************************

சொல்ல மறந்த உண்மைகள்... !


வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாளனே...

உன்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...

உணவின் ருசியில் உன் பசி
தீர்க்கிறேன்

உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிறேன்

அணியும் அணிகலன்களில் அளவில்லா
ஆசையை சொடுக்குகிறேன்

பேசும் வார்த்தையில் உன்
பொய்யாய் சிரிக்கிறேன்

அழும் போது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்

உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...

இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!

விவசாயின் ஏக்கம் ?


காலை கதிரவன் தான் எழுப்ப
களத்துமேட்டு பெண் மயில் தோகைவிரிக்க
ஓலை குடிசையிலே ஒய்யாரமா கோழி கத்த
ஒதுங்கிய நாயிகள் கூட்டம்
ஒருத்தரை ஒருத்தர் ஏங்கி பார்க்க

கண்டாங்கிச் சேலை கட்டி
கை நெறைய வளையல் போட்டு
சின்ன வகிடெடுத்து செந்தூர பொட்டு வச்சு
கன்னி சிரிப்பாலே கம்மங்கூல் எடுத்து வச்சி
வயல் மேட்டுக்கு வழியனுப்பும்
வாயாடி பொஞ்சாதியே வரட்டுமாடி நானும்

ஏங்க ஏர் கலப்ப பூட்டிவிட்டு
எருதுகளை மேயவிட்டு
வேண்டாத களையெல்லாம்
வேரோட அறுத்துவிட்டு
தங்க பூமிக்குள்ளே தாவரங்கள்
தூவி விட்டு

மஞ்சனத்தி மரத்தெல்லாம்
மாட்டுக்காக கட்டிக்கிட்டு
வானம் மயங்கும் முன்னே மாமா
வந்து சேறு குடிசைக்கு நான்
வாள மீனு சமச்சி வச்சி
வக்கனைய விருந்துவைகிறேன்

எல்லாம் கனவாக போனதே இப்போம்
காணி நிலம் கட்டிடமா ஏறுதே
அன்று வகை வகையா விளைஞ்ச பூமி
இப்போம் பிளாஸ்டிக்காலே விஷமா மாறுதே

என் வைரம் பாஞ்ச கட்ட இப்போம்
வாட்டுதடி மூச்சி முட்ட சற்று
இளைப்பாற இடமும் இல்லை
ஏர் பூட்ட வயதுமில்லை
ஏக்கத்தில் நிக்குதடி பூமி
இத எழுதியவன் மாற்றலடி சாமி

விழி இழந்தும் ஊமைகளாய்...!


பலரக ஆடை நெய்தவன் - தன்
பழைய ஆடையில் தினமும்
பொழுதை கழிக்கிறான்
ஒரு ஜான் வயிற்றுக்காக

சேற்று மண்ணில் செஞ்சிலுவை
கோலத்தில் ஏர் பிடிக்கும் விவசாயி
வயிற்று பசியில் உலக பசியை
தீர்க்கிறான்

பாதங்கள் இரண்டும் பார்ப்பவர்
கவரும் அழகில் வித விதமான
காலணிகள் தைப்பவன்
தரையில் நடக்கிறான் விதியா
இல்லை சதியா என்று புரியாமல்

ஆபரணங்கள் அழகு சாதனைகள்
உருவாக்கும் உருவங்கள் ஒளி இழந்த
வாழ்க்கையில் எங்கோ ஓர்
ஓரத்தில் உயிர் வாழ்கிறார்கள்
உயிர் காக்கும் உடலை
மண் உண்ணும் காலம் வரை

இதை அறிந்தும் தெரிந்தும்
அமைதியாக வாழும்
மக்களும் அரசாங்கமும்
கண்ணிருந்தும் குருடனாய்
காதிருந்தும் செவிடனாய்

செய் நன்றி மறந்து
தன் சுய நன்றி போற்றி
பெரும் வாழ்வு வாழ்கிறார்கள்
பேரம் பேசும் உலகில்
வெறும் பொய் மனிதர்களாய்

சித்திரையே வாராயோ...!


சித்திரையே வாராயோ எங்கள்
சிந்தனையில் நிம்மதியை தாராயோ
நித்திரையில் கண்ட சொப்பனங்கள் - எல்லாம்
நிறைவேற அருள் புரிவாயோ

அற்புதங்கள் பல தாராயோ எங்கும்
அதிசயங்கள் சில காண்பாயோ
அன்றாடம் உழைக்கும் ஏழைக்கு நீ- நீண்ட
ஆயுள் தந்து காப்பாயோ

குற்றம் குறைகள் மன்னிப்பாயோ எங்கள்
குழந்தைகள் அறிவை வளர்பாயோ
சட்டமும் நீதியும் காப்பாயோ - எங்கும்
சமத்துவம் பெருகிட காண்பாயோ

காணி நிலங்கள் செழிப்பயோ எங்கள்
கண்ணீர் துளியை துடைப்பாயோ
வாழும் உயிர்கள் சிறக்கவே - எங்கும்
வாழ்த்தி வணங்கி காப்பாயோ

கல்யாண முத்திரையில்...!


என் சேமிப்புகள் எல்லாம்
செலவாகியது கவிதையின்
சிணுங்களில்....

படித்துவிட்டு பக்கம் பக்கமாய்
வட்டியிட்டு காட்டு
முத்தங்களில்...

அதை அசையும்
சொத்துகளாய் குவிப்போம்
வரவு செலவு வாழ்க்கையில்...

மீதத் தொகையில் மீண்டும்
தொடங்கிடுவோம் காதல்
காசோலையில் கையெப்பம்மிடும்
கல்யாண முத்திரையில்...!

என் மறு பக்கம்...!


என் ஊரு மதுரப் பக்கம்
எனக்குள்ளும் ஆயிரம் வெக்கம்
எனக்கில்லை காதல் பக்கம் - இருந்தும்
எழுந்துவிட்டேன் கவிதை சொர்க்கம்

பிறந்ததும் பாட்டியின் பக்கம்
பேர்வைத்தது பள்ளியின் பக்கம்
படித்துவிட்டேன் ஒழுக்கத்தின் பக்கம் - இருந்தும்
பாரினிலே கண்ணீர் சொர்க்கம்

தந்தையோ மதுவின் பக்கம்
தாயோ தங்கையின் பக்கம்
தனிமையே வாழ்வின் பக்கம் - இருந்தும்
தன்னடக்கமே என் வயதின் சொர்க்கம்

கடந்துவிட்டேன் பூவின் பக்கம்
கல்யாணமோ தோல்வியின் பக்கம்
காலமோ முதுமையின் பக்கம் - இருந்தும்
கண்ணகியாய் சாவதே என் மூச்சின் சொர்க்கம்

கற்றுக்கொள்ள...!


எப்படியும்
நீ சொல்லமாட்டாய்
அப்படியும்
உன்னுடன் சேர்ந்து
ஒவ்வொரு நொடியிலும்
வாழ்கிறேன்
காதல் முகவரியை
கற்றுக்கொள்ள...!

லைலா மஜ்னுவைவிட...!


உன்னிடம்
நான் இருக்கேனா என்றும்

என்னிடம்
நீ இருக்கிறாயா என்று
சோதிப்பதிலே

நம் காதல் சாதிக்கிறது
லைலா மஜ்னுவைவிட...!

எப்படி வந்தது காதல்...!


கிளைக்கும் இலைக்கும்
காதல் வந்தது பறவையால்

மலருக்கும் மணதிற்கும்
காதல் வந்தது சூரியனால்

பசிக்கும் உணவுக்கும்
காதல் வந்தது மனிதனால்

இன்பத்திற்கும் துன்பத்திற்கும்
காதல் வந்தது இறைவனால்

பணத்திற்கும் தங்கத்திற்கும்
காதல் வந்தது ஆசையினால்

உனக்கும் எனக்கும் காதல்
வந்தது உயிரணுக்களால் பெண்ணே

என் தோழியே ?


அவள் வருவாள் என்று
வழிமேல் விழி வைத்து
காத்திருக்கவில்லை

உயிர் மேல் உயிர் வைத்து
உளறிக் கொண்டிருக்கிறேன்
ஈகோவிற்கு இடம் கொடுக்காதே
என் தோழியே ?

உண்மை காதலின் நிலவரம்...!


பேசிய இரவுகளை விட
உன்னுடன்
பேசாத இரவுகளை தான்
அதிகம் விருபுகிறேன்
ஏன் தெரியுமா ?

பேசும் போது
காதல் கோவிலாகிறது
காமம் தீபமாகிறது


பேசாத போது
காதல் காமமாகிறது
காமம் கவிதையாகிறது ...!

கையற்ற பொம்மைகள்...!


இரு கைகள் துணையிருந்தும்
இருக்கை இல்லை எனக்கு
இருந்தும் இதயமற்ற மனிதர்களால்
இதயம் விற்று வாழ்கிறேன்
விலை மாது என்ற பெயரில்

அநியாயத்தை அறுக்க ஆசைதான்
அன்றே நான் ஆனாதையாகிவிடுவேனோ
என்ற பயத்தில் வெறும் பொம்மையாக
வாழ்கிறேன்...!

நீண்ட இடைவெளிக்கு பின்
என் நிழலாக நீயும்
உண்மையை மறைத்து
பொய்மையை நிலைக்கவைக்கும்
கைத்தடி பொம்மைக்கு
வணக்கம் சொன்னபடியே வருகிறேன்
அவரவர் வாசல் தாண்டியபடியே

வா..?


வெவ்வேறு திசையில் பிறந்து
ஒரு கிளையில் உயிரானோம்
காதல் பந்தத்தில்
இதில் ...

பசுமையான நினைவுகள்
இனிமையான உணர்வுகள்
இரண்டுற கலந்து இதே வானில்
சுதந்திரமாய் பறப்போம் வா ...!

கண்ணீர் சிந்துங்கள்...!


இன்று இதயம் பறித்தவன் எங்கோ
இடம் பெயர்க்கிறான் - அவன்
எண்ணிய கனவுகளை இனிதே
நிறைவேற்ற...

உறவுகளே வாருங்கள்
ரபீக் அண்ணாவின் உன்னத
ஆத்மா உயிர்ப்பிக்க ஒரு துளி
கண்ணீர் சிந்துங்கள்...!

கோடிகள் குவித்திடுமோ குதூகலம்..?


இருவரும் ஆனந்தமாய் வாழ
கோடிகள் ஏதும் தேவையில்லை...
நீ கொஞ்சம் சிரித்தாலே போதும்...
என்றவன் ....

நாடோடியாக நாடு தாண்டி வாழ்கிறான்
என் புன்னகையை மறந்து
பொன் நகை சேர்க்க
என் கை சுவையை மறந்து
கால் வயிற்றில் பணம் சேர்க்க

இதோ அவன் சொல்லும் பாடம்
அகதிகள் இரவுக்கு
ஆயிரம் பொற்காசுகள்
உன் அன்பின் அரவணைப்பிற்கு
நூறாயிரம் பொற்காசுகள்
இறுதியில் வருவேன்

என் இதயமானவளே என்
இளமையை மறந்து
இளைப்பாறும் முதியவனாய்
அன்று திரும்பி பார்க்கிறேன்

நான் விட்டுச் சென்ற
கோடான கோடி இன்பங்களை
கோட்டை விட்டவனாய்
கண்ணீர் கனவுகளில்
காகிதத்தை பார்த்தபடியே

சேலை கனவுகள் ...!


சிலையும் சேலைக் கட்டினால் 
போதும்...
ஆர்ப்பப் பிறவிக்கும் கூட 
ஆசை வந்துவிடுமே என்று ...
உறங்கியது புடவை 
விழித்தது சுடிதார் 
பட்டாம் பூச்சியாய் 
சிறகடித்து பறக்க ...! 

சாமானியன் யார் ?

என்ன தான் மாற்றங்கள் வந்தாலும் 
எழுதியவன் தீர்ப்பில் 
எவருமே ஒன்று தான் 
என்று முன்னோர்கள் 
சொல்லி தந்த பாடம் 
பின்னோர்கள் பின்பற்ற மறந்ததால் 

பிழை என்று 
கருதிவிட்டார்கள் பூமியிலே இதை 
சரிசெய்ய யாரும் முயற்சிக்கவில்லை 
சாமானியன் என்ற பெயரும் 
பொறிக்கவில்லை மண்ணில் ...!

ஓரின ஈர்ப்பு ...!


என் இதயத்தை
பார்க்க ஆசைப்பட்டேன்
தோழியே ...

உன் இதயம்
என் இதயமாய் துடித்த போது
பார்த்துவிட்டேன்
நட்பின் காதலை...!

**********************************
நீயும் நானும்
சந்தித்ததில்லை
நிறைய சிந்தித்திருக்கிறோம்
கவிதையில்

நாம் சந்திக்கும் வேளையில்
சிந்திக்காமல் நம்மை
சிரிக்க வைத்தது
நம் குழந்தைத் தனம்

**********************************

நீ இருக்கும் இடத்தில்
என்னைப் போல்
அன்பான தோழன்
இருந்துவிட கூடாது என்று
வரம் கேட்கிறேன் கடவுளிடம்
நட்பை மறந்து காதலில்
மூழ்கிவிடக்கூடாது என்று

**********************************
பூக்கும் காலம் அறிந்தேன்
காய்க்கும் காலம் அறிந்தேன்
உதிரும் காலம் அறிந்தேன்
வளரும் காலம் அறிந்தேன்

எந்த காலம் வந்தாலும்
நம் உயிர் காலம் உள்ளவரை
நடப்பு காலம் நடமாடட்டும்
நம் மழலையின் மறுமலர்ச்சியில்

**********************************

கடல் நீரில்
சிறு துளி சேர்ந்தாலும்
சிதைந்துவிடும் சுவை

நம் நட்பில்
ஒரு கண‌ம் அழுதாலும்
பிள‌ந்துவிடும் இதயம்

**********************************
எழுது கோல் சொல்லும்
உனக்கும் எனக்கும்
உள்ள வருத்தங்களை
பக்கம் பக்கமாக
**********************************

நமக்குள்ளும்
காமம் கர்ப்பமாகிறது
ஆண்டுக்கு ஆண்டு

நீ அனுப்பும்
வாழ்த்து மடலில்
தள்ளாடிய வரிகளை
கண்டபோது

**********************************
உன்னை புரியும் முன்
நீ என்னை புரிந்ததால்
வருந்துகிறேன்

வரலாற்றில் நீ வராமல்
நான் வந்த பெருமை
உன்னை சேரும் போது
**********************************

காலை வணக்கமும்
மாலை வணக்கமும்
தொடருவது போல்
தொடருவோம் நம்
நட்பு வணக்கத்தை

உன்னில் நானாக உயிரில் நீயாகா...!


தொட்டுத் தான் அணைத்தேன்
தொலைவில் நீ இருந்து
என்னை துளைக்கும் செல்லாக

விட்டுத் தான் பிடித்தேன்
விடை பெற்ற நீ மீண்டும்
என்னை அழைக்கும் கனவாக

பட்டுத் தான் வருகிறேன்
நாம் வென்ற காதலின் பாசத்தில்
உன்னில் நானாக உயிரில் நீயாகா...!

கண்களை வருத்தும் கண்மணிகள்...!


என் முதல் உலகம்
தாயின் கருவறை
மறு உலகம்
தந்தையின் அறிமுகம்

சிற்றன வாசலில்
சிரிக்கும் விழிகள்
பற்றெனப் பறந்தது
பாரில்

விதியவன் விரைத்த
உயிரில்
விண்ணைச் சென்ற என்
பெற்றோரின் நடு நிலையில்

கற்றென கரைந்த
கண் மணிகள்
கண்ணீர் காயங்களாய்
வெந்நீர் மாற்றத்தில்
வெந்து தணிக்கிறது

என் சொந்த சோகத்தில்
பூத்த கரு விழி மணிகள்
என் வாழ்க்கைக்கு ஒளிகளாய்
வாழ்வுவரை தொடர்கிறது

நிஜக் கண்ணாடி...!


நீ
ஊருக்கு வேண்டு மென்றால்
உலக அழகியாக இருக்கலாம்
ஆனால்
நீ
என் உயிருக்கு அழகி
காரணம்
தாய் தந்தையே போல்
பிள்ளை என்ற
தவத்தை தருவதால் ...!

வாழ்வோமோ சாவோமோ ...!


இமைகள் அடிக்கும் போதெல்லாம்
இதயம் வலிக்கிறது
இடையில் நீயும் நானும்
சேர்வோமா பிரிவோமா
என்றில்லை
வாழ்வோமோ சாவோமோ
என்று...!

கடைசி நொடி...!
கடைசி நொடியில் 
மண்ணை அணைக்கும் சிகிரட்
ஒரு நாள் அதே மண்ணில் 
உன்னையும் அணைக்கும்
மறந்துவிடதே மனிதா 
திருந்திவிடு...! 


ரகசியம் எண்ண ...?என்ன தவம்
செய்தீர்கள் இந்த
பால் நிலவு பாதம் பட
படிகளே கூறுங்கள்

நானும்
சிறு துளி நேரம்
தியானம் செய்ய
விரும்புகிறேன் இன்னொரு
ஜென்மத்திலாவது

குறுங்கவிதைகள் ....!


சூடித் தான் பார்க்கிறேன்
சுயவரம் நடக்கவில்லை
சுய மரியாதையுடன்
கேள்விக்குறியாக
கன்னி பருவத்தை கடந்த

******************************************
வயதை கூட்டும் ஆண்டுகள்
வாடியது வயதோ முப்பது
வாலிபமோ செப்பியது
உன் மணவாளன் யார் என்று

*******************************************
ஆசைகள் அதிகரிக்கும் நேரம்
அவஸ்தைகள் அலங்கரித்தது
பெண்ணின் கற்பு
மண்ணின் பெருமை என்று

******************************************
இப்படியும் சொல்லியதால்
அப்படியே வாழ்கிறேன்
ஆண்டவனின் விதி என்று
வண்ண ஆடை கட்டிய விதவையாக

என்னவள் முகம் படித்தேன்...!


அவள் முகம் படித்தேன்
பல யுகம் கடந்த நொடியில்

தென்னை கீற்றைப் போல்
தேவதையின் கூந்தலடா

மஞ்சள் வண்ணத்திலே
மானவள் தோள்களடா

செரி இதழ்களிலே சிறு
கருப்பு நிற மச்சம்டா

கிளி மூக்கினால் என்னை
கெதி கலங்க வைத்தவளே

கண் வில் கொண்டு தாக்கியது போல்
தமிழ் சொல் வலி கொண்டு மாற்றினாள்
என்றும் என் உயிர் நீ தான்...!

இதயம் திறந்த பறவைகள் ..!


இதயம் திறந்த பறவைகள்
இன்னிசை குரலில் பறந்தனவாம்

உலகம் அறிந்த திசைகளிலே
உயர உயர பறந்தனவாம்

பசிகள் வந்த போதிலும்
பழங்களை கொற்றி தின்றனவாம்

மச்சமுள்ள இயற்கைக்கு எச்சமுள்ள
விதைகளை மாறி மாறி ஈந்தனவாம்

பச்சைக் கொடி காட்டிலே
பாசம் வீசும் காற்றிலே

மிச்ச மீதி துளிகளாய்
மேலிருந்து விழுகையில்

தாகம் தீர்த்த மக்களே
தேகம் போற்றி வாழுங்கள் ...!

ஒளிபெறும் வாழ்வும்...!


நிலா வானத்தில்
வெள்ளை மேகங்கள்
வெக்கத்தில் விலகியது காற்று

நிலா தாரகையில்
வெள்ளி ரதங்கள்
சொர்க்கத்தை தந்து சென்றது
தேன் நிலவு

இதில்
இருளும் ஒளியாகும்
இருண்ட வாழ்வும் ஒளிபெறும்

பரஞ்சோதி கிளியாக ...!


அவனை கண்டதும் எட்டுக்கு பத்து
என்று அடியெடுத்து
வைத்தேன் ஆசையில்

எட்டாத
மாடியைப் பார்த்து
கொட்டா விட்டான்

போடா பட்டாவி
என்று பாதையை
மாற்றி விட்டேன்
பரஞ்சோதி கிளியாக ...!

ஊழறிவு மனிதா ...!


வயிற்ருக்கு பல கல்வி
பயிற்றிட்ட போதும்

பகுத்தறிவு படிக்க
மறந்து விட்ட மனிதா

சொகுசறிவு மௌசறிவு
உன் தலைக்கேற

ஊழறிவு உலகின்
தலையறிவாய் உலவுகிறது
மண்ணில்...!

வெக்கத்தின் அதிசயம்...!


இமையம்
இயற்கை அதிசயம்

பிரமிடு
செயற்கை அதிசயம்

ஆனால்
இதற்கு ஈடாகுமோ

என்னவள்
வெக்கத்தின் அதிசயம்
காதல் என்று ...!

பெண்கள் காதல் ஏன் வெற்றி பெறுகிறது ...!


பெண்கள் காதல் மட்டும்
ஏன்
வெற்றி பெறுகிறது தெரியுமா

காதலிக்கும் முன்
கன்னியாகிறாள்

காதலித்த பின்
வேறு கள்வனுக்கு
மனைவியாகி

மறு பிறவியாய்
பத்தில் உயிர்தெளுந்து
தாயாவதால் ...!

புதுக் கவிதை...!


சிறைவைக்கும்
பெண்ணின்
கண்களுக்கு தெரிவதில்லை
காதலின்
மகத்துவம்!!!

அறிமுகக் காதல்...!


அவள் வரும்
தூரம் அறிந்தேன்
அருகில்
மகரந்தங்களின் மரணங்கள்
வீசியதால்

அவன் வரும்
நேரம் அறிந்தேன்
நிழலில்
சுட்ட தேகங்கள்
நீராய் மாறியதால் !!!

பார்த்து சிரிக்கிறது ஊழல்...!


நாற்றத்தின் உடலுக்கு
நறுமணமாம் சந்தனம்
சாக்கடையின் தோற்றத்திற்கு
ஊர் மணமாம் அரசியல்

கொளுத்துகிறது வெயில்
கோமணத்துடன் விவசாயி
ஒட்டிய வயிறில் தினமும்
கொட்டிய நிலவாய் வலம்
வயிற்று பசிக்கு

மானம்கெட்ட அரசியலுக்கு
வானவிளக்கு வண்ண தோரணம்
மேள தாளம் மேடை முழக்கம்
முகப்பொலிவுடன்
முன்பின் மாறா மக்கள் கூட்டம்

பணமாம் பாசமாம் பல்லாக்கு
செல்லும் வரை
பாழாப்போன உலகத்தில்
பாடுபட வைக்கிறது பணம்
பார்த்து சிரிக்கிறது ஊழல்...!

காலம் கடத்தவா....?


எனக்குள் நீ
இல்லை

உனக்குள் நான்
இல்லை

இருந்தும் நமக்குள்
மோதல் இருப்பது ஏன்?

நம் காதலை
காலம் கடத்தவா....?

எனக்கு உன் மீது காதல்...!


காகிதத்திற்கு
அழிப்பான் மீது காதல்
தவறை அழித்து
தலைவிதியை மாற்றுவதால்

பேனாவிற்கு
மை மீது காதல்
பொய் மெய் கலந்த
கற்பனையை ரசிக்க வைப்பதால்

கவிதைக்கு
சொல்லின் மீது காதல்
குருடனும் செவிடனும்
கிட்டாத அனுபவத்தை உணர்வதால்

தமிழே எனக்கு உன் மீது காதல்
என்னை வெளி உலகிற்கு
அறிமுகப்படுத்தியதால்...!

காதலில் மறைந்த சொத்து...!


காதலில் மறைந்த சொத்து
கனவோடு நினைவைக்காட்டும்
கண்கள்

ஊமை சொல்லோடு உன்
பெயரை திட்டும்
இதழ்கள்

என் உயிரோடு
உணர்வை தட்டி எழுப்பும்
இதயம்

என் தேவதை...?


என்னவள் முன் சென்று
அன்பே உன்னை
நான் காதலிக்கிறேன் என்றேன்
அதற்கு அவள் சொன்னாள்

நான் யார் தெரியுமா
பிறந்ததும் என்னை லட்ச்சாதிபதி
என்றார்கள்

வளர்ந்ததும் என்னை கோடிஸ்வரி
என்றார்கள்

கேவலம் ஒரு பிச்சைக்காரன் நீ
என்னை காதலிப்பதா என்றாள்

அதற்கு நான் சொன்னேன்
பிறந்தது வளர்ந்தது எல்லாம்
சரி தான் கண்ணே

இனி நீ வாழும் காலம் வரை
உன்னை நம் தலை முறைக்கு
ராணியாக்குகிறேன்
பொஞ்சாதி என்ற சொந்தத்தில்

சிரித்தபடியே
என் வலையில் சிக்கிவிட்டாள்
என் தேவதை...?

நாமும் ஓர் பகல் நட்சதிரம்...!


வானத்தை வர்ணித்தபடியே
வாழ்வை இழந்து
வருந்திக்கொண்டிருந்தேன்
கண்ணீர் வலிகளில்

கலங்காதே மகனே
உன் காலம் உள்ளவரை
நானும் நமது முன்னோர்களும்
உன் வாழ்க்கைக்கு விளக்காய்
வழிகாட்டுவோம் என்று கூறுகையில்
விடிந்த சூரியன்
வெற்றி துறந்தது பால் நிலா

அன்று தான் உணர்ந்தேன்
வாழ்க்கையின் வட்டம்
இது தான் என்று வாழ்கிறேன்
துன்பத்தையும் இன்பமாய்
மாற்றலாம் என்ற நம்பிக்கையில்
நடமாடுகிறேன் பகல் நட்சத்திரமாய்

புன்னகை பேசும் பல பாசை...!


மனதில் ஆயிரம் ஆசை
மனமே உன் முன்
மலரும் போது மறையும்
மௌன ஓசை

என் இதழில் நிதமும்
உன் ஓசை நீ
இமையில் வந்து நின்றால்
புன்னகை பேசும்
பல பாசை

அறிந்தும் திரிந்து
மறந்து வாழும் காதல்
மனதில் உதிர்ந்தும்
உடைந்தும் பேசும் ஓசை
ஊமை பாசை

எத்தனை பாசைகள்
வந்தாலும் அர்த்தம் கொள்ளும்
ஆண்மகனே நீ என்
அருகில் வாராயோ உன்
அன்பை தாராயோ ...!

சொர்க்க தங்கமே ...!


நீ ச்சி என்று
வெக்கி குனியும் போது
சொக்கி மயங்குகிறேன்
என் சொர்க்க தங்கமே

நீ
பக்க வந்து நின்னாள்
சுட்டு தனியும்
வெப்பக் காற்றினைக் கூட

தக்கவைத்துக் கொல்வேன்
என்
தலையணை மந்திரம் சொல்லும்
தந்திர ஆசைகளை

அந்தரத்தில் சொல்லிவிடாமல்
என் அஞ்சனையில்
காத்திடுவேன்

உன் கண்ணில் என் மின்னல்
கோலம் போடும்
நாள் வரை...!

மறவாமல் வந்ததால் ...!


காதலித்தேன் உன்னை
வேறு காதல் கிட்டியதால்
கை விட்டாய் என்னை

காதலித்தாய் என்னை
பழைய காதல் வெட்டியதால்
கை பிடிக்க மறுத்தேன் உன்னை

ஆனால் என்
கண்ணில் சோகம்
நம் காதலில் பாவம்

என் தேகம் வாடியது
தென்றலில் நீ சொன்ன
கண்ணீர் துரல்கள் கண்டு

மோகம் கூடியது நீ
மோதும் சுவாச
தீண்டலின் போது

அன்பே
விடை பெற முடியாமல்
அணைக்கிறேன்
ஆருயிராய் பேசும்
அன்பு மூச்சினை

துடிக்கிறேன்
ஒருயிராய் பேசும்
இதயத் துடிப்பினை

என் காதல் உண்மை
நீ
என்னை மறந்தும்
மறவாமல் வந்ததால் ...!

புனிதம் என்று...!


கண்ணீரும் கடல் நீரும்
ஒன்றென உணரும் போது

துன்பத்தின் ஆழத்தை கடந்தால்
இன்பத்தின் நீளம் அருகில்
என்று

கரை சேர்ந்துவிட்டேன்
கங்கையில்
நானும் ஒரு துளி புனிதம் என்று...!

அர்த்தமாகிறது காதல்....!


அர்த்தமாக்கினாள்
என் அன்பை
அவள் மகன் பெற்ற போது

அர்த்தமாக்கினேன்
அவள் அன்பை
என் மகள் பெற்ற போது

அர்த்தமாகின்றோம்
அவளும் நானும்
வாழ்ந்த காதல் நினைவுகள்

எங்கள் குழந்தைகள் உருவில்
மீண்டும் காதலாய்
மலரும் போது...!

கண்ணீர் வரப்பு...!


வயலுக்கு நீர் வார்க்கும்
வரப்புகள் நடுவே
பிரிவுகள் இருப்பின்
உறவுகள் வளர்கிறது இதில்
உலகமும் வாழ்கிறது

அன்பே
நம் பிரிவுகள் நடுவில்
இதயம் துடிப்பதால்
காதலும் வளர்கிறது
கவிதையும் சிரிக்கிறது

இன்பத்தில் பூக்கும்
துன்ப பூக்களாய்
கண்ணீர் வரப்பில் ...!

காதல் பிரமை...!


பிரம்மனின் மொத்த
ஆசைகளும் உன்னுள்
அடங்குமோ ?

அடங்காமல் துடிக்கிறது
காதல்
இன்னொரு பிரம்மனை
உருவாக்க...!

கடை கண் பார்வை...!


சுகம் சொர்க்கம் எல்லாம்
பெண்ணிடம் உள்ளது
என்பார்கள்...

நானோ கண்ணிடம் உள்ளது
என்றேன் ஏன் தெரியுமா ?

பாதாளமும் வேதாளமாய்
மாறிவிடும்

காதலியின் கடை கண் பார்வை
பட்டுவிட்டால்...!

இரு கண்கள் முத்தம்...!


என்னவள் கை தொட்ட
தண்ணீர் பாத்திரம்

முத்தத்தில் முத்தமிட்ட
சத்தம் கேட்டு
வெளியில் வந்தேன்

எதிரே
அவள் முகம் பார்த்த
வெக்கத்தில்

என் இதயம் முத்தமிட்டது
இருவர் கண்கள் சத்தத்தில்
காதல் முத்தங்கள்...!

குறுங்கவிதைகள்...!


கரைந்த நீரிலும் 
காதலை தேடுகிறேன் 
கண்ணா வருவாயோ 
காதல் தருவாயோ 


உதிர்ந்த மலரிலும் 
உன் முகம் தேடுகிறேன் 
நான் வாடும் முன் 
உன் வாசம் சூடிக்கொள்ள 

காலை சூரியன் 
மாலை தென்றல் 
முடிந்தாலும் முடியவில்லை 
என் அகக் கண்களில் 
உன் முக கனவுகள் 


ஆசை பாசம் அறியும் 
வாயிப்புகள் தந்தாய் 
நீ 
என்னை கண்டுகொள்ளாமல் 
போகும் ஏக்கத்தில் 

யாரு என்று என்னை 
நினைக்கும் போது 
நானே உன் உயிர் 
என்று சொல்ல துடிக்கிறது 
இதழ்கள் 


யாரும் பார்க்கும் முன் 
நான் பார்த்துவிட்டேன் 
உன் இதயத்தின் 
ஆழம் நான் தான் என்று 

சொல்லிப் புரியாத 
ஆசைகள் 
நீ 
தள்ளி சென்ற போது 
தாகமாகிறது 
என் 
தேகத்தில் வியர்வைகளாய்

பேஷன் - 2


ஆங்கிலத்தை
அள்ளி குடித்தவன்
டாலரில்
துள்ளி விளையாடுகிறான்
சுவரொட்டியில்
கண்ணீர் படம்
அவன் தாய்
மாலை விளக்கில்
அவன் நிழல் படம்

பேஷன் - 1


ஆபாசத்தில் சுற்றும் 
அழகிகள் 
திரையில் மட்டுமல்ல
திண்ணையிலும் கூட 
கிராமமும் நரகமானது 
வாழ்க்கையின் பேஷன் 

நானே சிறந்தவள் ...!


காற்றைவிட நான் தான்
சிறந்தவள் ஏன் தெரியுமா ?
எனக்காக உன் மூச்சை
தியாகம் செய்தாயே ....!

அழுக்கு பிறவியான என்னை
அழகு படுத்தி ரசித்தாயே
அன்றே இறந்து பிறந்தேன்
உன் இதயத்தில் நான்
முதலிடம் பெறுவதால்...!

கருவேலங் காட்டில் கால்
பதித்த என்னை
உன் கருவறைக்கு
அன்னையாக்கி காதல்
உறவறைக்கும் உயிர் தந்தாயே

அறியா பள்ளியும்
அணையும் முல்லையும்
வாசம் வீசும்
வாழ்க்கை தோட்டத்திற்கு
வேறாய் தந்தாயே...!

சொல்லிய ஆசைகள் எல்லாம்
சொல்லாமல் சொல்லியும்
அள்ளிய புன்னகையில்
அன்பை தந்து ஆசி தந்து

என்னொரு முகம்
மன்னொரு பூமியில்
தன்னொரு பிறவியாய் மாறி
வன்னொரு நிலவாய்
வழி நடத்தும் மன்னனே
நானே சிறந்தவள்...!

mhishavideo - 21