சாதலே இல்லா காதல்...!


சுமையென நினைக்காமல்
சுகமென சுமந்த
தாயின் காதல்
தாய்ப்பாலில் முடிகிறது

அழகை நினைக்காமல்
அன்பை பகிர்ந்த
தந்தையின் காதல்
முதலெழுத்தில் முடிகிறது

மழலை மணியோசையில்
மனதை களவாடிய
சுற்றத்தின் காதல்
முத்தத்தில் முடிகிறது

கனவாய் இல்லாமல்
காதலாய் மலர்ந்த
பெண்மையின் காதல்
பள்ளியில் முடிகிறது

இடைப்பட்ட இன்பத்தில்
இருகைப் பற்ற தொடரும்
கல்லூரி காதல்
கண்ணீரில் முடிகிறது

பிறவிப் பயனை
பின்னோக்கும்
காலத்தின் காதல்
கடமையில் முடிகிறது

மீண்டும்
தாய்மையின் தாலாட்டில்
சாதலே இல்லா காதலாய்
காதல் பிறக்கிறது...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...