12 டா ? - 1 னா ?

வணக்கம் இன்று நம்மை வாட்டி வதைக்கும் மின்சாரத்தை பத்தி புதுமையில் பழமை என்ற கோணத்தில் சுருக்கமாக எழுதிகிறேன்.

நாம் ஒரு யூனிட் மின்சாரம் சேமித்தால் ஒரு யூனிட் உற்பத்திக்கு சமம்
அப்படி என்றால் இன்றைய சூழலில் தினமும் இரண்டு மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை.

அப்படி என்றால் எவ்வளவு மின்சாரம் நம்மளால் சேமிக்க முடியும் ?
இருந்தும் மின்சாராப் பற்றாக்குறை வருவது ஏன் ?
அன்றைய காலத்தில் மக்கள் வீட்டுக்கு பத்து பன்னிரண்டு குழந்தைகள் வரை பெற்றார்கள் இந்தக்காலத்தி வீட்டுக்கு ஒன்று மிஞ்சினால் இரண்டு அவ்வளவு தான் இருந்தும் மின்சாரத் தேவை அதிகம் வரக் காரணம் என்ன ?

மக்கள் தொகை தான் என்று கூறலாம் இருந்தும் நான் கூற வருவது அது இல்லை அன்று மக்கள் இரவு நேரங்களில் மட்டும் வீட்டுக்கு ஒன்று அல்லது  இரண்டு என்ற கணக்கில் விளக்கை பயன் படுத்தினார்கள்.

எல்லோர் வீட்டிலும் ரேடியோ இருக்க வாய்ப்பில்லை சில வீடுகளில் தான் டிவி மின்விசிறி இருந்திருக்கும் அப்போது வீட்டுக்கு பத்து பிள்ளைகள் இருந்தாலும் அவர்களின் பயன் அளவு குறைவு .

அப்படியே டிவி பார்க்க வேண்டும் என்றால் பஞ்சாயத்து டிவி தான் கிராம மக்கள் அனைவரும் கூடி உக்காந்து பார்ப்பார்கள் என்றாவது விழாக்கள் வந்தால் ரேடியோ திரைப்படம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இப்படி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவார்கள்

இப்படியே போக போக விஞ்ஞானம் வளர்ந்தது வீட்டுக்கு வீடு டிவி மின்விசிறி ,ரேடியோ, குளிர்சாதனப் பெட்டி, வாசிங்மிசின்,இஸ்திரி பெட்டி ,  AC என்று பயன்பாட்டுப் பொருட்கள் அதிகரித்தது ,பயன் பெரும் எண்ணிக்கை குறைந்தது.

எதற்கெடுத்தாலும் முன்னிலை வகிப்பது மின்சாரம் தான் கொஞ்சம் நேரம் மின்சாரம் இல்லை என்றால் மக்கள் மனம் கொந்தளிக்கிறது.அதற்கும் விஞ்ஞானம் விட்டு வைக்கவில்லை Generators ,UPS என்று மின்சாரத்தை சேமிக்க வழி கண்டுபிடித்து விட்டது.அது மட்டுமா பகலைக் கூட இரவாக்க முடியும் இரவைக் கூட பகலாக்க முடியும்.

அப்படி என்றால் எப்படி மின்சாரத்தை நம்மால் சேமிக்க முடியும் கூறுங்கள் முடியவே முடியாது ! இதில் வேடிக்கை என்றால் அன்றைய காலம் போல் வீட்டுக்கு பத்து பன்னிரண்டு பெற்றால் நம் நிலை எங்கே ? இனிவரும் காலங்களில் இந்த ஒன்றும் இல்லாமல் போகலாம் ?சிந்தியுங்கள்

அதைவிட்டுவிட்டு அடுத்தவர் மீது குறை கூறுவதும் குற்றம் சாட்டு வதையுமே வேடிக்கையாக கொண்டுள்ளோம். இதனால் எத்தனைப் போராட்டாம் எத்தனை உயிர்கள் பலி.

கேள்வியின் முடிவுக்கு வருகிறேன் இன்றைய ஒன்றைவிட அன்றைய பன்னிரெண்டே சிறந்தது என்று நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைகிறேர்கள் ?

வாருங்கள் தங்கள் கருத்தை கூறுங்கள். தவறுகள் இருப்பின் தயங்காமல் சுட்டி காட்டுங்கள்.

அன்புடன்
ஹிசாலி.
நன்றி!!!2 comments:

 1. நல்ல கருத்துக்கள்... இது பரவாயில்லை... வரும் காலங்களில் குடிக்கும் நீரே பிரச்சனை ஆகப் போகிறது... என்ன செய்யப் போகிறோம்...? ...ம்...

  வாழ்க்கையே இரு கோடுகள் தத்துவம் தான்...!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா.

   நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் இந்த தண்ணீர் பிரச்சனையை கூட மாற்று கோணத்தில் எழுதலாம் என்று கற்பனை செய்து கொண்டிருக்கிறேன் அண்ணா

   வாழ்க்கையே இரு கோடுகள் தத்துவம் தான்...! -> அழகான தத்துவம் நன்றிகள்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...