இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்... !


செம்மண் வகுடுகள்
பாலைவனமானத்தால்
விவசாயம் நாவரண்டு
வான் மழையை
வாய் பார்த்து நின்றது
விதைகள்...!

மக்கிய விதைகள்
மண்ணைக் கெடுப்பது போல்
சொக்கிய கண்கள்
சோகத்தில் வான் பார்த்தது
சோறுக்காக...!

எட்டிய துளிகள் எங்கே என்று
எங்கூரு சாமி கேட்க
கக்கிய மழை
காணாமல் உருண்டு ஓடியதால்
எங்கள் கண்ணீர் துளிகள்
கரை சேராமலே பட்ட இமையில்
கடலானது...!

கடலும் ஆவியாகவில்லை
கதிரும் போணியாகவில்லை
ஏணியாகவே நிற்கிறது
ஏர் முனைகள் அதில்
ஏளனமாய் புத்துகட்டி வாழ்கிறது
எறும்பினங்கள் ...!

அரும்பினங்கள் எல்லாமே
அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாம்
வரும் ஆருயிருக்கு விவசாயம்
ஒரு கேள்விக்குறியாம...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145