விழி இழந்தும் ஊமைகளாய்...!


பலரக ஆடை நெய்தவன் - தன்
பழைய ஆடையில் தினமும்
பொழுதை கழிக்கிறான்
ஒரு ஜான் வயிற்றுக்காக

சேற்று மண்ணில் செஞ்சிலுவை
கோலத்தில் ஏர் பிடிக்கும் விவசாயி
வயிற்று பசியில் உலக பசியை
தீர்க்கிறான்

பாதங்கள் இரண்டும் பார்ப்பவர்
கவரும் அழகில் வித விதமான
காலணிகள் தைப்பவன்
தரையில் நடக்கிறான் விதியா
இல்லை சதியா என்று புரியாமல்

ஆபரணங்கள் அழகு சாதனைகள்
உருவாக்கும் உருவங்கள் ஒளி இழந்த
வாழ்க்கையில் எங்கோ ஓர்
ஓரத்தில் உயிர் வாழ்கிறார்கள்
உயிர் காக்கும் உடலை
மண் உண்ணும் காலம் வரை

இதை அறிந்தும் தெரிந்தும்
அமைதியாக வாழும்
மக்களும் அரசாங்கமும்
கண்ணிருந்தும் குருடனாய்
காதிருந்தும் செவிடனாய்

செய் நன்றி மறந்து
தன் சுய நன்றி போற்றி
பெரும் வாழ்வு வாழ்கிறார்கள்
பேரம் பேசும் உலகில்
வெறும் பொய் மனிதர்களாய்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145