சொல்ல மறந்த உண்மைகள்... !


வானம் குடை பிடிக்க
பூமி நடை பெயர்க்க
காதல் சுவை கொடுக்க
என் கண் முன் வந்த
கண்ணாளனே...

உன்னை நான் அணுஅணுவாக
அருந்துகிறேன் இதோ...

உணவின் ருசியில் உன் பசி
தீர்க்கிறேன்

உடுத்தும் ஆடையில்
உன் உருவம் கோர்க்கிறேன்

அணியும் அணிகலன்களில் அளவில்லா
ஆசையை சொடுக்குகிறேன்

பேசும் வார்த்தையில் உன்
பொய்யாய் சிரிக்கிறேன்

அழும் போது உன்
ஆன்மாவாய் அடைகிறேன்

உறங்கும் போதும்
விழிக்கும் போதும்
உன் உயிராய் பிறக்கிறேன்
அன்பே ...

இதையெல்லாம் சொல்லும் முன்
சொல்லாமலே போனது என்
காதல்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...