நீயும் நிலா தான் ...!இரவில் மட்டும் வருபவள்
நிலவல்ல ?

எண்ணியக் கணமெல்லாம் என்
முன்னே நிற்பவளே
உண்மையான நிலா !

அப்படியென்றால்
நீ வெறும் ஒளியா?
இல்லை இரவின் பலியா ?
சொல்

இல்லையென்றால்
உன் மறு பின்பம் தான்
இந்த வெண் மேகமோ?

என்னைக் காணத் தவித்து
கலங்கிக் கலங்கி
கரையும் நிழலில் ஒளியாக
வந்து என் உயிரை
வாங்கி நிலவாகிறாயோ

பெண்ணே அப்படியென்றால்
நீயும் நிலா தான் !!!2 comments:

 1. அழகான கவிதை... ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் அண்ணா

   அடுத்து வறுமை என்ற தலைப்பில் ஒரு கவிதை பாருங்கள்
   நன்றிகள் பல

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்