திருமணம் - கட்டுரை

திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை

திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறையப் படங்களிலும் செய்திகளிலும் நேரிலும் கண்டு கழித்துள்ளேன்.அதை ஒரு புதிய கோணத்தில் கட்டுரையாக எழுதுகிறேன் தவறாக இருந்தால் மன்னியுங்கள்.

திருமணம் = மரணத்தின் முடிவுரை தான் இந்தத் திருமணம்

என்னடா ஆரம்பத்திலே அபசகுனமாப் பேசுறேன்னு தவறாக நினைக்க வேண்டாம் விவரமாகக் கூருகிறேன்.

மனிதனின் பிறப்பே திருமணத்தின் முகவரிக்காகத் தான் அப்படி ஒரு தருணம் இல்லாமல் இருந்தால் மரணம் என்ற ஒன்று நம்மை ஆட்டிப்  படைத்திருக்காது. நாமளும் வயதுகள் எண்ணிக்கை இல்லாமல் வாழ்ந்திருப்போம் யோசியுங்கள்

ஒரு குடும்பத்தில் தாய் தந்தை இருவரும் முன் ஜென்மத்தைப் படிக்க முடியுமா ? இல்லை பார்க்க தான் முடியுமா ?

முடியாது இருந்தும் படித்துப் பார்த்து உணரவே பிள்ளைகளாகப் பெற்றெடுக்கிறார்கள் இது தான் நீதி

அப்போது முன் ஜென் கர்மங்கள் பாவங்கள் எல்லாம் அவரவர் குழந்தைகளுக்குப் பரிச்சையாக நிகழ்கிறது .அதே போல் அக்குழந்தை வளர்ந்து படித்து எல்லா விதமானா இன்ப துன்பங்களையும் அனுபவித்துத் திருமணம் ஆகும் தருணத்தில் தன் தாய் தந்தையின் பின் ஜென்மத்தை படிக்கமுடிகிறது இதுவும் ஒரு பட்டாம் பூச்சி வாழ்க்கை போல் தான்

என்னங்க அப்படி என்றால் எத்தனை பேர் திருமணம் ஆகாமல் இறந்து விடுகிறார்கள் அதற்கு என்ன சொல்வது ? என்று கேட்கலாம்

சொல்கிறேன் நமக்கு மட்டுமா மறதி உள்ளது இல்லையே, நம்மைப் படைக்கும் இறைவனுக்கும் அந்த வியாதி உண்டு. அந்த வேளையில் படைத்த உயிர்கள் எல்லாம் இப்படி விபத்தில் முடிகிறது

விவரமாகக் கூறுகிறேன்

புள் பூண்டு கனிகள் காய்கள் இப்படி ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை படைக்கும் போது மறதியாக ஆறறிவு மனிதனை படைத்துவிட்டதால் தன் தவறை திருத்திக்கொள்ளவே இறைவன் ஆகாய விபத்து பூலோக விபத்து
நோயில் மரணம் பேயால் மரணம் என்று தனது கணக்கை நிவர்த்திச் செய்கிறார்

அக்கணக்கு கூட ஒரு பாவத்தின் பலியாகும் அப்பாவம் கண்ணீரால் கழுவப்படும் போது கர்மம் கரைந்து அதர்மம் மெலிந்து ஞாயம் ஜெய்கிறது

ஒகே ஒகே திருமணம் என்ற ஐந்து எழுத்தில் இவ்வளவு காரணங்கள் அடங்குகிறதா என்று ஐயம் தோன்றுகிறதா இப்போது தெளிந்ததா நண்பர்களே

ஒரு சிலர் திருமணம் என்பதும் வேறு எண்ணத்தில் படிக்க வந்திருப்பார்கள்
கவலை வேண்டாம் அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.

நன்றி

வணக்கம் !

16 comments:

 1. நான் உங்க கருத்தோடு முற்றிலும் மாறுபடுகிறேன் ஹிஷாலி...
  திருமணம் என்பது ஒரு பிறப்பின் முடிவுரை அல்ல ...
  ஒரு புதிய உறவின் தொடக்கம், புதிய வாழ்வின் அடித்தளம் ...
  இதற்கு போய் முடிவுரை என்று கூறுவது அர்த்தமற்றது.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்தை நான் எப்போதும் கோபத்துடன் எடுத்துக் கொள்ளவில்லை

   நீங்கள் என்ன இங்கு யார் கருத்துரைத்தாலும் நான் அதை வரமாகத்தான் எடுத்துக்கொள்வேனே தவிர ஆவேசப்பட மாட்டேன்
   என்னை இன்னும் வளர்த்து கொள்ள முயற்சிப்பேன்.

   இதே போல் தவறுகள் இனிமேல் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று தான் நினைப்பேன். நானும் பெரிய எழுத்தாளர் அல்ல ஏதோ நேரம் கிடைக்கும் போது மனதில் தோன்றுவதை எழுதுவேன் மற்றபடி ஒன்றும் இல்லை.

   ஓகே தங்கள் கேட்ட விளக்கத்திற்கு வருகிறேன் என் கோணத்தில் திருமணம் என்பது பிறப்பின் முடிவுரை தான் இன்றைய சூழலில் திருமணம் நடக்காமல் ஒரு பையனோ ஒரு பெண்ணோ இறந்துவிட்டால் அப்படியெவா விட்டுவிடுகிறார்கள் இல்லையே ?

   அதற்கும் திருமண சடங்கு நடத்திய பின் தான் மரண சுடுகாட்டிற்கு அனுப்புகிறார்கள் இல்லை என்று கூறமுடியுமா ?
   முடியாது ஓகே.

   திருமணம் என்பது ஒரு புதிய வாழ்வின் அடித்தளம் தான் அதை நான் மறுக்கவில்லை அதற்கு முதல் காரணம் தன் தலைமுறை இந்த மண்ணில் வாழ வேண்டும் என்பதற்காகவே தானே இல்லையா ?

   கூறுங்கள் அரசானே ! அப்படி ஒரு வாய்ப்புகள் இல்லாவிடி திருமணமும் நட்பை போல் தான் இருந்திருக்கும் . இது தான் உண்மை.

   ஏதோ சொல்ல வேண்டும் என்பதால் தான் சொல்கிறேன் மற்றபடி எனக்கும் தங்கள் மேல் கோபமோ வருத்தமோ கிடையது.

   கவிதையை விட கருத்தை நான் மதிக்கிறேன் நன்றிகள் அரசன்
   இன்னும் அதிகப்படியான கருத்துக்களை தருபடி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
   நன்றிகள்

   Delete
 2. மனிதனின் பிறப்பே திருமணத்தின் முகவரிக்காகத் தான் அப்படி ஒரு தருணம் இல்லாமல் இருந்தால் மரணம் என்ற ஒன்று நம்மை ஆட்டிப் படைத்திருக்காது. //

  மரணம் எப்படி நம்மை ஆட்டிப்படைக்கும் ...
  பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்பது நிச்சயம் தானே ..

  ReplyDelete
  Replies
  1. ஆம் பிறப்பு என்ற வார்த்தை முடிவுறும் தருணம் தான் திருமணம் அந்த திருமணம் நடக்க முதல் காரணம் சந்ததியை பெருக்க

   இன்னொன்று மரணம் என்று ஒன்று இல்லாவிடில் திருமணம் என்ற ஒன்று இருந்திருக்காது என்பது என் கற்பனை தான்

   மரணமே இல்லை என்ற சாமியார்கள் எத்தனை படத்தில் மந்திர தந்திரங்களுடம் ஆட்டி படைத்திருக்கிறார்கள் நான் பார்த்திருக்கிறேன் நீங்கள் பார்த்தேர்களா என்று எனக்கு தெரியாது .

   //மரணம் எப்படி நம்மை ஆட்டிப்படைக்கும் ...
   பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்பது நிச்சயம் தானே ..//

   மரணமில்லாமல் வாழலாம் என்ற நிலை வந்தால் தெரியும் வருடங்கள் வேண்டாம் வயதுகள் வேண்டாம் நோயிகள் வேண்டாம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இதை தான் சுருங்க கூறினேன்.

   Delete
 3. ஒரு குடும்பத்தில் தாய் தந்தை இருவரும் முன் ஜென்மத்தைப் படிக்க முடியுமா ? இல்லை பார்க்க தான் முடியுமா ?
  //

  உங்கள் கூற்று படி சொல்லவேண்டுமெனில், தாய், தந்தையரின் - பெற்றோர்கள் முன் ஜென்மத்தை அறிந்தவர்களா ?

  ReplyDelete
  Replies
  1. முடியாது என்பதே என் கருத்து அதை தான் தன் குழந்தைகள் வழியாக உணருக்கிறார்கள்

   எ.கா : போன ஜென்மத்து பலன் ,பாவம் இப்படி பெற்றோர்கள் சொல்வதை நீங்கள் கேட்கவில்லையே ?

   Delete
 4. சொல்கிறேன் நமக்கு மட்டுமா மறதி உள்ளது இல்லையே, நம்மைப் படைக்கும் இறைவனுக்கும் அந்த வியாதி உண்டு. அந்த வேளையில் படைத்த உயிர்கள் எல்லாம் இப்படி விபத்தில் முடிகிறது//

  இது வேடிக்கையாக இருக்கிறது, இறைவனுக்கு நியாபக மறதியா ?

  ReplyDelete
  Replies
  1. ஏன் நீங்கள் புராணக் கதையில் படிக்கவில்லையா ? உதாரணத்திருக்கு சிவனே தான் கொடுத்த வரத்தை மறந்து தன் கையை தலையில் வைத்து இந்த பூமியே இருட்டானது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் போதுமா நண்பரே

   Delete
 5. மறதியாக ஆறறிவு மனிதனை படைத்துவிட்டதால் தன் தவறை திருத்திக்கொள்ளவே இறைவன் ஆகாய விபத்து பூலோக விபத்து
  நோயில் மரணம் பேயால் மரணம் என்று தனது கணக்கை நிவர்த்திச் செய்கிறார்//

  இதிலும் நான் முற்றிலும் மாறுபடுகிறேன் ஹிசாலி ...

  ReplyDelete
  Replies
  1. ஓகே உங்கள் கோணத்தில் இது மாறுபடலாம் என் கோணத்தில் இவை சரி தான் என்று நினைக்கிறேன் போன கூற்றில் சிவனை பற்றி கூறினேன் அங்கேயே மறதி என்ற ஒன்று உண்டு என்று உணர்ந்திருப்பேர்கள் இன்னும் விளக்க வேண்டுமா அரசே !

   Delete
 6. நான் உங்களின் பதிவில் குற்றம் காண இதையெல்லாம் நான் மேற் கோடிடவில்லை, இப்பதிவை நீங்களே ஒருமுறை தெளிந்த மனதுடன் படித்து பாருங்கள், உங்களுக்கே புரியும் இதன் பிழைகளை! தரமான கவிதைகள் வழங்கிய உங்களிடம் நான் தரமான கட்டுரை எதிர்பார்த்தேன், எதிர் நோக்குகிறேன்! ஏதோ அவசரத்தில் எழுத பட்ட கட்டுரையாக முழுமை அடையாமல் உள்ளது போல் என் சிற்றறிவுக்கு விளங்குகிறது, கொஞ்சம் கவனியுங்கள்! வருத்தம் இருப்பின் மன்னிக்க

  ReplyDelete
  Replies
  1. நிஜம் தான் அவசரத்தில் எழுதியது தான் கருத்து சிறுமையாக இருக்க வேண்டுமே என்று தான் எழுதினேன் மற்றபடி நான் கட்டுரை எழுத இப்போது தான் ஆரம்பிக்கிறேன் அதில் இருக்கும் நெளிவு சுழிவுகள் எல்லாம் எனக்கு தெரியாது போக போக புலப்படும் என்று நினைக்கிறேன் சுருங்க கூறினால்
   உங்களை போல் சம்பவான்கள் கூறும் அறிவுரையில் என் கருத்தை சிறம்பட எழுத முடியும் என்று நினைக்கிறேன்.

   மன்னிப்பு என்ற வார்த்தை வேண்டாம் தமிழ் சுதந்திர உலகம் இங்கே தவறுகள் திருத்தப்படலாம் என்று நினைக்கிறேன் தங்கள் வாதம் எப்படியோ !

   மீண்டும் சொல்கிறேன் மன்னிப்பு என்ற வார்த்தை வேண்டாம் என்று ஆசைப்படுகிறேன்

   நன்றிகள் அரசன் !

   Delete
 7. Anonymous9:22:00 PM

  புதிய கோணத்தில்...நன்று...

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு என் அன்பு நன்றிகள் பல மேலும் தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல

   Delete
 8. வித்தியாசமான விளக்கம்....

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...