மழை - ஹைக்கூ

மழை விட்ட நேரம் 
பசி தீர்த்தது 
மழலை...!
யாசித்தது மழை 
நேசித்தது காற்று 
யோசித்தது இயற்கை ...!
கார் மேகம் 
கற்பக தரு 
மழை...! 
நிர்வாண தூறல் 
நிலத்தின் போர்வை 
ஏக்கத்தில் நிலா 
மழை நின்றதும் 
தேங்கிய நீரில் 
முகம் பார்த்தது வானம்
பென்சிலின்
முதல் தாய் 
மழை...!
கொடுக்குற தெய்வம்
கூரையைப் பிய்த்தது...
நிவாரண நிதி
மழைக்குளியல்
மலர்களுக்கும் கொண்டாட்டம் 
வண்டுகளுக்கு திண்டாட்டம் 
மழையை 
தீண்டுவதில்லை 
வானவில்ஆயுதம்...
பச்சை நாற்று
மழைத்துளி கண்ணாடி
இச்சை மனிதன் 
காயிந்த மண்ணில் 
கக்கியது வானம் 
அமுத மழை 
காதலர் கல்வெட்டை 
அழிக்க முயன்றது மழை 
வெற்றியில் பாசி
மின்னல் குத்தி 
கொப்புளங்கள்
குளத்தில் மழை
மழை ஓய்ந்த நேரம்
மலரை கொய்தது 
மண் வாசனை 
விட்டது மழை 
மரக்கிளையில் 
வானத்தின் கவிதை 
ஜூன் மழை 
ஜான் வயிறு 
ஆண்டவன் கணக்கு 
ஏணி இல்லாமல் 
இறங்கியது மழை 
தன்னம்பிக்கை
மின்னல் வெட்டியது 
விழு மழையின் 
அமைதியென்னே...!
கதறியது மழைத்துளி 
காதலர்களின் இறுக்கத்தில் 
காமம் சுதந்திரமானதால் 
மழை ஆரம்பம் 
மருகியது மனம்
விற்ற நிலம்...!
மழைக்காலங்களில்
சுத்தமானது 
மாசடைந்த ஆறு ஏரி 
குடைக்கு வெளியே மழை 
சாலையோரப் பூக்கள் 
கப்பல் கவிந்தது 
மழையை ரசித்தபடியே நடந்தவன் 
சற்றேன மறைந்தான் 
சாலையில் மரணக்குழி 
அடை மழை 
அலுவலகம் விட்டுச் சென்றவன் 
காலை செய்தியில் கண்ணுறங்கினான் 

2 comments:

  1. Supper i like your poem and i love it .....so please write so many poem

    ReplyDelete
  2. ok ok i ll do it brother thanks

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...