உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுத நினைத்த காதல் கடிதம்.

எழுது கோலை இதயக் கோலாகக் கொண்டு எழுதுகிறேன் முதல் காதல் 

கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இருந்தும் எழுதுகிறேன் ....

முரட்டுக் காதலிக்கு திருட்டுக் காதலன் எழுதும் மடல் நாம் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை அனால் பேசியிருக்கிறோம் அந்தப் பேச்சிலே இவ்வளவு ஆசைகள் இருந்தால் உன் மூச்சில் எவ்வளவு அன்பு இருக்கும் என்று காதலிக்க தொடங்கினேன் அன்று முதல் இன்று வரை நீ எப்படி எல்லாம் என்னுடன் நடை பெயர்க்க வேண்டும் என்று ஓரு சிறு கற்பனை செய்திருக்கிறேன் பார் 

அன்பே ஆருயிரே அதிகாலைத் தேநீரில் சுவை ஊட்டவா ? 

அன்ன பசிக்கு வண்ண ருசிக்  கூட்டவா ...?

எண்ணங்கள் யாவும் பொன் மஞ்சங்கள் பேசும் பொழுதாக்க வா ! 

இரவு தாரகைக்கு இமைகளைக் கடன் கொடுத்துக் கனவைத் தாலாட்டவா ...?

அப்பப்போ ரசிக்கும் பாடலுக்கு நிழலாக வா !

சுவாசிக்கும் காற்றுக்குப் பூஜிக்கும் முதலாக வா !

பேசும் வார்த்தைக்குப் பிழையாக வா !

பேராசைத் தருணத்தில் ஓராசைக் கூறும் அறிவாக வா !

அவ்வப் போது கோபம் கொண்டால் யாகம் செய்யும் மெழுகாக வா !

பெண்ணே என் முன்னே இன்னொரு தாயா வா !

தவழுகிறேன் குழந்தையாய் வாரி அணைத்துக் கொள் 

வாழும் நாளெல்லாம் இறக்கி வைக்காமல் இமை போல் வழிகாட்டுவேன்  

நாம் வந்தப்  பாதை முடியும் வரை. 

வெறும் முற்றுப் புள்ளியாக இல்லை முடிவில்லாப் புள்ளிகள் கோர்க்க 

சம்மதம் என்றால் சொல் 
சகல விதத்திலும் சமர்ப்பணம் செய்கிறேன் இதோ ... 

முடிகள் கோர்த்துப் படிகள் செதுக்கும் பருவமாய் 
அடிகள் பதிக்கும் சுவடுகள் பூசும் விபூதியாய் 
உதிர்ந்த மலரில் உருவம் செதுக்கும் சருகாய் 
மடித்த உடையில் படுத்துக்கிடக்கும் பட்சியாய் 
நகங்கள் சேர்த்து யுகங்கள் முடிக்கும் ஆலாபனையாய் இல்லாமல் 

அதிர்ஷ்டத்தில் ராமனாய் 
பொறுமையில் வசிஷ்டராய் 
மழலையில் கண்ணனாய் 
பாரே போற்றும் பாரதிக்குக் கண்ணம்மா  வாக ஈருலகை  அழைத்து 
இருகரம் பற்றிட வாராயோ ?

என்று கவிதையில் சொன்னாலும் இளமையில் துள்ளும் கற்பனையையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 

நீ சாலையில் வருவதற்கு முன்  உன் நிற ஆடையைக் கண்டு என் நிற ஆடையாக மாற்றிக்கொள்ளும் மறைமுக காதலை விரும்புகிறேன் 

ஒவ்வொரு அழைப்பிலும் உன் குரல் கேட்காதா என ஏங்கும் தவிப்பை தேடுகிறேன் 

கடைதனிலே குவிந்திருக்கும் பூக்களை கண்டால் உனக்காக தவமிருப்பதாக கற்பனை செய்கிறேன் 

சம்பள நாளன்று உனக்கென்று ஓர் புடவை வாங்கச் சொல்லி ஜவுளிக்கடை பொம்மைகள் கூட என்னை கேலி செய்வதாக புன்னகை செய்கிறேன் 

ஐஸ் கிரீம் கடையில் இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் அழகிய தருணத்தை நோக்கி தவமிருக்க எண்ணுகிறேன் 

மழையில் குடையாக மனதில் சிலையாக நட்புடன் நடக்க ஆசைப்படுகிறேன் 

கடற்கரையில் ஒன்றாக அமர்ந்து சிற்றுண்டிகள் சுவைத்துக் கொண்டே அலைகளை ரசிக்க விரும்புகிறேன்

பிடித்த சினிமாவிற்கு சென்று அடுத்தடுத்த சீட்டில் அமர்ந்து யாரெனத் தெரியாத உன் குறும்புத்தனத்தை ரசிக்க எண்ணுகிறேன்

பிரிவைக் கூட பரிவாய் மாற்றும் பதுமையே இன்று முதல் இரவை பகலாகவும் பகலை உனதாகவும்  மாற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன் இதோ  இன்றையக் கலிகாலத்தில்  தொட்டுப் பழகாமல் எட்டி நிற்கும்  அன்பு காதலனாக  சம்மதம் என்று சொல்வாயா என் முரட்டுக் காதலியே! 

இப்படிக்கு,
உன் பதிலை எதிர் பார்த்து காத்திருக்கு
திருட்டுக் காதலன் .

(இது போட்டிக்காக எழுதப் பட்டது வெறும் கற்பனை தான் மற்றவர்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் இந்த லிங்கை http://www.seenuguru.com/2013/06/contest-info.html சொடுக்கவும் நன்றிகள் )

64 comments:

 1. வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies

  1. ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் அண்ணா வெற்றிக்காக இந்த கடிதத்தை எழுதவில்லை முயற்சி செய்தேன் கவிதை போல் தான் வருகிறதே தவிர கடிதம் போல் வரவில்லை என்று நினைக்கிறன்.

   மிக்க மிக்க ரெம்ப ரெம்ப நன்றிகள் அண்ணா ,

   Delete
  2. மிக்க நன்றி ஹிசாலீ

   Delete
 2. கவிதை போல் வரவில்லை
  கவிதையாகத்தான் வந்திருக்கிறது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆம் அண்ணா முன்ன பின்ன கடிதம் எழுதியிருந்தால் தானே எழுத வருவதற்கு எதோ முயற்சித்தேன் பார்க்கலாம் வாழ்த்துக்கு நன்றிகள் அண்ணா

   Delete
 3. கலக்கிட்டீங்க ஹிஷாலீ... அருமை

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப ரெம்ப நன்றிகள் அக்கா !

   Delete
  2. labels திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி என்று சேர்த்து விடு தங்காய்! :)

   Delete
  3. பாருங்கள் அக்கா மாற்றிவிட்டேன்

   Delete
  4. ஹா ஹா ஹா மிக்க நன்றி கிரேஸ்

   Delete
  5. :) நல்லது வாழ்த்துகள் ஹிசாலீ!
   மகிழ்ச்சி சீனு!

   Delete
 4. கவித கவித கவித...அத்தனையும் மனப்பாடம் செய்ய தகுதியானவை..அருமை சகோ..

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கும் அன்பு நன்றிகள் பல தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள்

   Delete
  2. அண்ணன் சதீஸின் தீவிரவாதம் இங்கும் தொடர்கிறதா...! உங்கள் பின்னூட்டத்தை மனபாடம் செய்து கொண்டோம்... சங்கம் கவனித்துக் கொள்ளும் :-)

   Delete
  3. அப்படியா மிக்க நன்றிகள் சீனு ...

   Delete
 5. காதல் பொங்குகிறது கடிதத்தில், நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இது முதல் கடிதம் தான் அதுவும் ஒரு கற்பனைக் கடிதம் தான் இப்படியும் எழுத முடியும் என்று எனக்கு உணர்த்தியது சீனு அவர்கள் தான் ஆக அனைவரின் பாராட்டுக்களும் அவரையே சாரும்

   மறந்துட்டேன் தங்கள் முதல் வருகைக்கு அன்பு நன்றிகள் பல தொடர்ந்து வருங்கள் கருத்தை தாருங்கள்

   Delete
 6. அழகான கடிதம். பல இடங்களில் சொக்க வைக்கும் உணர்வு வெளிப்பாடு.
  வாழ்த்துக்கள்.

  'முரட்டுக்காதலி, திருட்டுக்காதலன்'னா என்னங்க?

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகையிலே சொக்க வைக்கும் கருத்தை தந்து மகிழவைத்தேர்கள் அதற்கு நன்றிகள் பல

   மேலும் எல்லோர் போலவும் எழுதாமல் 'முரட்டுக்காதலி, திருட்டுக்காதலன்' என்று கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று தான் இப்படி போட்டேன் நல்ல வரவேற்பு தான் நன்றிகள்

   Delete
 7. கடிதம் கவிதையாக கலக்கல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. கலக்கல் வருகைக்கு என் அன்பு நன்றிகள் பல

   தங்களும் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்

   உங்கள் கடிதங்களையும் படிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

   Delete
 8. அருமை ஹிஷாலீ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அருமையான வருக்கைக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல

   தங்களும் இந்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

   Delete
 9. ரசிக்கும் பாடலுக்கு நிழலாக வா....

  புதிய வரிகளாய் இருந்தது... அருமை,,,

  தொழிற்களம் வாசியுங்கள்

  ReplyDelete
  Replies
  1. ரசிப்போடு வந்து படிப்போடு அழைக்கும் தொழில் களகத்திற்கு வணக்கம்

   தொடர்ந்து வருகிறேன் பதுவுகளை படிக்கிறேன்

   Delete
 10. //பெண்ணே என் முன்னே இன்னொரு தாயாக வா !// வெகுவாய் ரசிக்க வைத்த வரி

  //அடிகள் பதிக்கும் சுவடுகள் பூசும் விபூதியாய் // வித்தியாசமான வார்த்தைகள் கொண்டு கோர்த்த வரிகள் அருமை

  போட்டியில் உற்சாகமாக பங்கு கொண்டதற்கு முதல் நன்றிகள்... காதலையும் கவிதையும் கலந்து எழுதிய உங்கள் கடிதம் காதலின் பல நல்ல தருணங்களை அடக்கியுள்ளது வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. //இன்று பல முதிய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள் //

   ஏனுங்க புதிய நண்பர்கள்ங்குறதுக்கு பதிலா தவறுதலாக தானே முதிய ன்னு போடுருக்குகீங்க ...? ஹி ஹி ...! நானெல்லாம் யூத்தாக்கும் ...!

   Delete
  2. மிக்க நன்றிகள் சீனு இந்தப் பெருமை எல்லாம் உங்களை தான் சேரும், நீங்கள் சொன்னது போல் கொஞ்சம் மாறிப் பார்த்தேன் நல்ல தான் வந்திருக்கு என்று நினைக்கிறேன் மற்றவர்கள் கடிதங்களையும் படிக்க ஆவலாக உள்ளேன். இந்தப் போட்டியால் எனக்கு இன்னும் பல நண்பர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன் ஏன் என்றால இன்று பல புதிய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அண்ணா

   Delete
  3. மிக்க நன்றிகள் ஜீவன்சுப்பு நண்பரே நீங்க யூத் தான் நம்புறேன் உங்கள் வருகைக்கு நன்றிகள் பல நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

   Delete

 11. வணக்கம்!

  காதல் மடல்படித்தேன்! கண்கள் குளிரேந்தும்!
  ஆதலால் நாளும் அளி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கவிதை போல் என்று சிறக்க வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா

   Delete
 12. காதல் வந்ததால் கவிதை வந்ததா ?
  கவிதை வந்ததால் காதல் வந்ததா ?

  அருமை அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. போட்டி வந்ததால் காதல் கடிதம் வந்து அக்கா

   வருக்கைக்கும் பாட்டுக்கு கருத்துக்கும் அன்பு நன்றிகள் பல

   நீங்களும் வெற்றி பெற வாழத்துக்கள்

   Delete
 13. கவி நயம் சொட்ட வரைந்த காதல் மடல் அருமை தோழி... வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் !!!

  ReplyDelete
  Replies
  1. ரசத்துடன் வாழ்த்தியமைக்கு அன்பு நன்றிகள் பல

   தங்களும் வாழ்த்துக்கள் பல

   Delete
 14. வெற்றி பெற வாழ்த்துகள் !!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அருண் !

   Delete
 15. வெற்றி பெற வாழ்த்துகள் Hi!!!

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

   தொடர்ந்து வாருங்கள் ...

   Delete
 16. திருட்டுக் காதலன் எழுதிய
  பகிரங்க கவிதை மடல்...!!))

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஹிஷாலீ.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அக்கா

   நீங்களே கவிதை என்று சொல்லி விட்டீர்கள் பார்க்கலாம் ...

   Delete
 17. //எழுது கோலை இதயக் கோலாகக் கொண்டு எழுதுகிறேன்// அட...முதல் பாலிலே சிக்ஸரா..!!!

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் அழகான சிக்ஸர் கருத்துக்கும் அன்பு நன்றிகள் பல

   மேலும் இதெல்லாம் எல்லாம் ஒரு கற்பனை தான் ...

   நீங்களும் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சையம் !

   Delete
 18. வரிக்கு வரி புகுந்து விளையாடியிருக்கீங்க பாஸ்... நானெல்லாம் என்னத்த எழுதி...என்னத்த போஸ்ட் பன்றது...

  ReplyDelete
  Replies
  1. வரிக்கு வரி பாராட்டும் அன்பு உள்ளத்திற்கு நன்றிகள் பல

   ஒரு வர் எழுதிய பின் அந்த மடலை படித்தால் போதும் அவர்கள் எழுதாத கற்பனைகள் இன்னும் இருக்கும் ஆகவே அதை கூறிக்கோளாக கொண்டு முயற்சியுங்கள் இன்னும் நல்லா வரும்

   நானு முந்திரிக்கொட்டை மாதிரி முந்திட்டேன் ஒரு பத்து பேர் எழுதிய பிறகு எழுதியிருந்த இன்னும் நல்லா வந்திருக்கும் என்று நினைக்கிறன்
   அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது சோ நல்ல எழுதுங்கள்

   நான் தான் கவிதை கொஞ்சம் கடிதம் கொஞ்சம் எழுதியிருக்கேன் நீங்கள் கடிதம்போல் எழுதி வெற்றி பெறுங்கள்

   தொடர்ந்து வாருங்கள் மற்றப் பதிவுகளுக்கும் கருத்தை தாருங்கள்.

   Delete
 19. திருட்டுக் காதலன்! காதலி முரட்டுத் தனமாய் இருப்பதால் பயத்தில், காதலில் திருட்டு வந்து விட்டதோ! ஹா..ஹா..ஹா!

  //மழலையில் கண்ணாய் //

  கண்ணனாய்?

  எதிர்பார்ப்புகள் ரசனை! வாழ்த்துகள் ஹிஷாலீ!

  ReplyDelete
  Replies
  1. ரசனை வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல
   வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் சிரிப்புடன் கேலி செய்ததும் சுவாரசியம் தான் நீங்களும் இப்போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் பல

   Delete
 20. கவிதையே கடிதமாக... சூப்பர்....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் பல ...

   Delete
 21. நல்லா இருக்குங்க. வெற்றி பெற வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் பல ...

   Delete
 22. நான் போட்டில இருந்து விலகிக்கலாம்ன்னு இருக்கேன்

  ReplyDelete
  Replies
  1. ஏங்கா இப்படி சொல்லுறேங்க இதை விட எத்தனை பேர் மிகவும் அழகாக எழுதியிருக்கிறார்கள் அதே போல் நீங்களும் எழுதுங்கள் வெற்றி நிச்சியம்.

   வெற்றி பெற வாழ்த்துக்கள் பல

   Delete
 23. // பேசும் வார்த்தைக்குப் பிழையாக வா !// ஏனுங்க...? புரியலையே .

  கவிதை கடிதம் அழகு ...!

  ReplyDelete
  Replies
  1. காதல் என்பதே ஒரு பிழை தான் அதில் ஊடலும் கூடலும் நிகழ்வதை தான் பிழை என்று கூறினேன் இதில் பல அர்த்தங்கள் உள்ளது அவரவர் கற்பனைக்கு ஏற்ப இப்போது புரிந்ததா ? சொல்லுங்கள் அண்ணா
   நன்றிகள் .

   Delete
 24. உங்கள் காதலன் எப்படி உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று சுவையாக கற்பனை செய்து எழுதியிருக்கிறீர்கள்.

  'தொட்டுப் பேசாது எட்டி நிற்கும் காதலன்..' உங்கள் எதிர்பார்ப்பு புரிகிறது.

  வெற்றி பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் புரிதலுக்கும் அன்பு வாழ்த்துக்கும் நன்றிகள் அம்மா !

   Delete
 25. சிறப்பான படைப்புகள் வெற்றி பெறத் தவறுவதில்லை.. உங்கள் படைப்பு பெற்ற வெற்றி அதை பறைசாற்றும்.. வாழ்த்துகள்..!

  ReplyDelete
 26. போட்டியில் வென்று பரிசு பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. போட்டியில் பரிசு வென்றமைக்கு வாழ்த்துக்கள் சகோ.....

  ReplyDelete
 28. வாழ்த்துகள் பாஸ் ...!

  ReplyDelete
 29. பரிசு பெற்றைமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 31. பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஹிஷாலி!

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145