ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!

கலையும் மேகத்தைக்  கண்டு 
கலங்கவில்லை வானம் 
கைதட்டும் நட்ச்சத்திரங்கள் ...!
நட்சத்திரப் போர் வீர்கள்
நிலா ராணி 
சூரியன் பரிசு ...!
இறுதி அலையை 
எண்ண முயன்று 
தோற்றது காற்று ...!
பைத்தியம் போல் 
சிரிக்கிறது அலைகள் 
கரையில் மனிதர்கள் ...!
சகுனத்தடை 
மிஞ்சியது வசதி வாய்ப்பு 
சுடுகாட்டில் வீடு  ...!

18 comments:

 1. அனைத்தும் அருமை... முக்கியமாக :

  பரிசு.. காற்று..

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றிகள் அண்ணா !

   Delete
 2. அனைத்தும் அருமை தான்.

  இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்தது முதல் ஹைக்கூ

  //கலையும் மேகத்தைக் கண்டு
  கலங்கவில்லை வானம்
  கைதட்டும் நட்ச்சத்திரங்கள் ...!//

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் ஐயா !

   Delete
 3. [களையும் = தவறு;

  கலையும் = சரி.

  திருத்திவிடுங்கோ ப்ளீஸ்]

  ReplyDelete
  Replies
  1. திருத்திவிட்டேன் ஐயா தவறை தெளிவு படுத்தியமைக்கு நன்றிகள் ஐயா

   Delete
 4. ரசிக்கவைத்த ஹைக்கூ துளிகள்..!பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ரெம்ப நன்றிகள் அக்கா !

   Delete
 5. ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் அருமை! சிறப்பான படைப்புக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் அன்பு கருத்திற்கு மிக்க நன்றிகள் அண்ணா !

   Delete
 6. ஹைக்கூ அனைத்தும் ரசித்தேன்...!

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் கருத்திற்கு அன்பு நன்றிகள் பல
   தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் !

   Delete
 7. அத்தனையும் அருமை! மிகவும் ரசித்தேன் சகோ...

  உங்கள் திறமைக்கு இணையில்லை... வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பதிவு குறித்த கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் அக்கா

   Delete
 8. சகுனத்தடை
  மிஞ்சியது வசதி வாய்ப்பு
  சுடுகாட்டில் வீடு ...!
  உவ்வொரு ஊரிலும்
  காணக் கிடைக்கும் காட்சி
  அருமை சகோ.
  அனைத்துமே அருமை

  ReplyDelete
  Replies
  1. ஆம் அண்ணா அன்று சுடுகாடு என்று தனித்திருந்த காலம் போய் அருகிலே வீடுகள் வந்துவிட்டது அந்த காட்சி தான் இங்கு ஹைக்கூவாக உதித்தது அண்ணா மிக்க நன்றிகள் பல

   Delete
 9. அனைத்தும் அருமை ஹிஷாலீ

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அக்கா !

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உயிர்த்திசை

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான்  விடியலை தந்தவள் நீயல்லவோ  தாயே  படைத்தவன் துணையில் எனை வளர்க்க  பத்துப்பா...