கோடிகள் குவித்திடுமோ குதூகலம்..?


இருவரும் ஆனந்தமாய் வாழ
கோடிகள் ஏதும் தேவையில்லை...
நீ கொஞ்சம் சிரித்தாலே போதும்...
என்றவன் ....

நாடோடியாக நாடு தாண்டி வாழ்கிறான்
என் புன்னகையை மறந்து
பொன் நகை சேர்க்க
என் கை சுவையை மறந்து
கால் வயிற்றில் பணம் சேர்க்க

இதோ அவன் சொல்லும் பாடம்
அகதிகள் இரவுக்கு
ஆயிரம் பொற்காசுகள்
உன் அன்பின் அரவணைப்பிற்கு
நூறாயிரம் பொற்காசுகள்
இறுதியில் வருவேன்

என் இதயமானவளே என்
இளமையை மறந்து
இளைப்பாறும் முதியவனாய்
அன்று திரும்பி பார்க்கிறேன்

நான் விட்டுச் சென்ற
கோடான கோடி இன்பங்களை
கோட்டை விட்டவனாய்
கண்ணீர் கனவுகளில்
காகிதத்தை பார்த்தபடியே

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 42

நீ எனக்கில்லையென்ற போதும் எப்படி முடிச்சுப் போட்டது அந்த ஒருதலைக் காதல்