ஓரின ஈர்ப்பு ...!


என் இதயத்தை
பார்க்க ஆசைப்பட்டேன்
தோழியே ...

உன் இதயம்
என் இதயமாய் துடித்த போது
பார்த்துவிட்டேன்
நட்பின் காதலை...!

**********************************
நீயும் நானும்
சந்தித்ததில்லை
நிறைய சிந்தித்திருக்கிறோம்
கவிதையில்

நாம் சந்திக்கும் வேளையில்
சிந்திக்காமல் நம்மை
சிரிக்க வைத்தது
நம் குழந்தைத் தனம்

**********************************

நீ இருக்கும் இடத்தில்
என்னைப் போல்
அன்பான தோழன்
இருந்துவிட கூடாது என்று
வரம் கேட்கிறேன் கடவுளிடம்
நட்பை மறந்து காதலில்
மூழ்கிவிடக்கூடாது என்று

**********************************
பூக்கும் காலம் அறிந்தேன்
காய்க்கும் காலம் அறிந்தேன்
உதிரும் காலம் அறிந்தேன்
வளரும் காலம் அறிந்தேன்

எந்த காலம் வந்தாலும்
நம் உயிர் காலம் உள்ளவரை
நடப்பு காலம் நடமாடட்டும்
நம் மழலையின் மறுமலர்ச்சியில்

**********************************

கடல் நீரில்
சிறு துளி சேர்ந்தாலும்
சிதைந்துவிடும் சுவை

நம் நட்பில்
ஒரு கண‌ம் அழுதாலும்
பிள‌ந்துவிடும் இதயம்

**********************************
எழுது கோல் சொல்லும்
உனக்கும் எனக்கும்
உள்ள வருத்தங்களை
பக்கம் பக்கமாக
**********************************

நமக்குள்ளும்
காமம் கர்ப்பமாகிறது
ஆண்டுக்கு ஆண்டு

நீ அனுப்பும்
வாழ்த்து மடலில்
தள்ளாடிய வரிகளை
கண்டபோது

**********************************
உன்னை புரியும் முன்
நீ என்னை புரிந்ததால்
வருந்துகிறேன்

வரலாற்றில் நீ வராமல்
நான் வந்த பெருமை
உன்னை சேரும் போது
**********************************

காலை வணக்கமும்
மாலை வணக்கமும்
தொடருவது போல்
தொடருவோம் நம்
நட்பு வணக்கத்தை

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...