Showing posts with label பெண்ணியக் கவிதை. Show all posts
Showing posts with label பெண்ணியக் கவிதை. Show all posts

ஆண்ணாதிக்க திமிரு ...!

 ஹிஷாலி

ஒரு பெண்ணை
மணந்த பின்பு
அவளிடமே
இன்னொரு பெண்ணை
மணப்பேன் என்பது
 உன் வளர்ப்பின் திமிரு

அதோடு கிடைக்கும்
பெண்ணை எல்லாம்
சுவைப்பேன் என்பது
ஆண்ணாதிக்க திமிரு ...!

பெண் -Pen

 Image

பெண் பைத்தியமும்
pen பைத்தியமும் ஆண்"
"மை" உள்ளவரை
அடங்காது ..!

உயிர்த்திசை

Related image

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் 
விடியலை தந்தவள் நீயல்லவோ  தாயே 
படைத்தவன் துணையில் எனை வளர்க்க 
பத்துப்பாத்திரம் துலக்கி கரை சேர்த்தாயே 
உடுத்தும் ஆடை அழகினிலே உன் 
உதிரத்தை மறைத்து வைத்தாயே நான் 
படுத்தும் பாட்டை பொருத்தருளி உன் 
பாதி தூக்கத்தில் அழுது துடித்தாயே 
ஊரார் என்னை கடிந்துகொண்டால் உன் 
உயிர்த்திசை நோக துடித்தாயே இவ் 
உலகத்தில் நானும் வலம் வரவே உன் 
உயிர் மூச்சை பரிசாய் கொடுத்தாயே 
எதை நான் கொடுத்து மீட்டிடுவேன் உன் 
எல்லையில்லா தியாகத்தை என்ற  
எண்ணத்திலே நானும் உயிர் பிழைத்திருக்க உன்
ஜெனனம் கொடுத்து மகிழ்விப்பாயா 
பாலும் தேனும் கலந்தூட்டி என் 
பாவக் கணக்கை முடித்துக்கொள்ள 
பாவி நானும் துடிக்கின்றேன் உன் 
பார்வை இன்றி தவிக்கின்றேன் தாயே !

அள்ளித் தரும் விதி...!



வெள்ளி தோறும் 
அர்ச்சகருக்கு தட்சணை 
அம்பாளுக்கு நெய்விளக்கு 
காலம் கடந்து கண்விழித்தேன் 
அள்ளித் தரும் விதியை 
ஆண்டவனாலும்
வெல்லமுடியாது என்று ...!



முதிர் கன்னி ...!





கரு வளர்ச்சி முதல்

குரு பெயர்ச்சி வரை 

வாழ்ந்துவிட்டேன் 

பலன் என்னவோ 

முதிர் கன்னி ...!

மடியும் பிஞ்சினம் ...!





ஓர் உயிர் 
மரணித்தும் 

ஓராயிரம் உயிர் 
ஜெனித்தும் 

வாழும் மண்ணில் 
வரலாறு படைக்கிறது 

தாசிகள் திருந்திவிட்டார்கள் 
வேசிகள் குறைந்துவிட்டார்கள் 

ஆனால் வேட்டையாடும் 
மனித நாற்றுக்களால்  

பாசி படியும் பாலியிலில் 
மூழ்கி மடிகிறது பிஞ்சினம் ...!




பெண்ணியம் ...!



பெண்களுக்குப் பெண்களே எதிரி


பெண் + ஞாயம் 
என்ற பொருளிலே 
மறைந்து கிடக்கிறது 
பெண்ணியம் 

தெளிவு படித்தினால் 
திமிரு பிடித்தவள் என்றும் 

விளக்கம் கூறினால் 
வேண்டாதவள் என்றும் 

அடித்து பேசினால் 
அடங்காப் பிடாரி  என்றும் 

பட்டங்களிலே 
பாவியாகும் பெண்கள் 

சட்டம் படித்தால் மட்டுமா 
சமாதனப் புறாக்களை 
பறக்கவிடப் போகிறார்கள்  

ஒரு பாரதி என்ன 
ஓராயிரம் 
பார் + ரதி வந்தாலும் 

பெண்ணிய விலங்கை 
மண்ணியம் 
ஆக்கவே முடியாது 

ஏன் என்றால் 
பெண்ணுக்கு பெண் 
இங்கு எதிரியாகிறாள் ...!



யார் பெரியவர் ...?


விவரம் அறிந்தேன்
என் வீட்டில் தமக்கையை விட
தான் பெரியவள் என்று ....

பள்ளி சென்றேன்
சக மாணவர்களை விட
நான் தான் உயர்ந்தவள் என்று

தோழியாய் மாறினேன்
என் துணையானவளிடம்
என் தோல்வியை கண்டபோது
வஞ்சம் கொண்டேன் அவளை விட
நான் தான் சிறந்தவள் என்று

காலம் கடந்தது
கல்லூரிக்கு சென்றேன்
என் கண்ணெதிரிலே
உள்ள கயவர்களை கண்டு
கல்வி புகுட்ட போட்டியிட்டேன்
அனைவரையும் விட
நான் பணக்காரி என்று

காதலில் என்னை மறுத்து
என் தோழியை தேர்ந்தெடுத்த போது
அவளை அடியேடு
அழிக்க வேண்டும் என்ற
ஆவல் கொண்டேன்

திருமணக் கைகோர்த்த
சொந்தத்தில் நான் தான்
முதலிடமாய் வாழ
குறுக்கு வழியில்
முயற்சி கொண்டேன்

அண்டை வீட்டின்
அனைவரின் போக்கில்
தானே முன்னுரிமை கொள்ள
பல தீமையும் நன்மையாய்
எண்ணி என் பின்னே
சுற்றிவர ஆசை கொண்டேன்

பிள்ளை பெற்று பேரும் புகழும்
ஈட்ட பெருமிதம் கொண்டேன்
இப்படி எல்லாம் கொண்டேன்
என் தனியொரு மனித
வாழ்க்கையில் இது ஞாயமா ?
என்று வினாவிய போது

ஆட்சிக்கும் அவர் எதிரிக்கும்
நடக்கும் போராட்டத்தின்
விருப்பு வெறுப்பு
சரியே என்று சற்று
சலனப் பட்டேன்

இருந்தும் அது சாத்திய மற்ற
மக்களின் சாதனையில் பூக்கும்
சமரச மேடை இதில் நடிப்புகள்
இல்லை எல்லாம் மாயை ...!

பெண்ணே எழு நீ இடியாக...!


எறும்பாய் கடித்து இறந்தாலும் நீ
கரும்பாய் சுவைக்கும் கயவர்களுக்கு விருந்தாகதே

சிவப்பு சிலிண்டரில் சிதறினாலும் நீ
சிவப்பு விளக்கில் அணைந்து போகாதே

விலை கொடுத்து வாங்கும் இளைஞனுக்கு
உன் அங்கத்தை விடைகொடுத்து தூங்கதே

படையெடு பெண்ணே உன் ......

சிறைப்பட்ட வாழ்க்கையை நீக்கி யாவரும்
சிரம்பற்ற வாழந்து காட்டு

உடை களைந்த நாணலை உன்
உயிர் கலந்த வீரத்தில் பூட்டிக்காட்டு

நவ சமுத்திரத்தின் திறவுகோலாய்
நீ வான் சென்று வையம் வென்று ....

தேன்கொண்ட நிலாவில் நீ தோள்கொண்ட
தமிழச்சியாய் தோன்றி பாழ்கொண்ட
பஞ்சாங்கத்திற்கு பகுத்தறிவு புகுட்டிக்காட்டு

அடுப்பில் வெந்தும் நீ துடுப்பாய் மாறும்
படிப்பை தின்று பாரே உன் பதுமையின்

தாய் மண்ணில் சற்று தலை சாயிக்கிறேன்
கருமத்தை தின்று அதர்மத்தை கொன்று
தர்மத்தை வென்ற பாரதிப் பெண்ணாய் ....!

தர்மம் ஜெயிக்கவில்லை


அன்று 
சிலம்பு ஏந்தியவளும் 
தீ ஏந்தியவளும் 
சிறக்கவில்லை கீதையில்!

இன்று 
சிந்திக்கும் ஆற்றலால் 
சந்திக்கும் 
காதல் கீதையில் 
சிறந்தும் சிறக்காமல் 
வாழ்கிறார்கள்

     என்ன ஒரு வேற்றுமை 
   அன்று நீதி தூங்கியது 
  இன்று அவரவர் நிலைகள் 
ஓங்கியது!

  இருந்தும் 
    கற்பு மட்டுமே சிலையானது 
    பெண்ணின் கண்ணீர் மட்டுமே 
  விலையானது 

 எத்தனை சுதந்திரம் வந்தாலும் 
 என்னை மாற்ற 
 இன்னொரு கலியுகம் 
 தான் வேண்டும் 

முள்ளை முள்ளால் தான் 
எடுக்க வேண்டும் என்ற 
பல மொழிக்கேற்ப 

இரவு பகல் கடக்கிறது 
இன்ப துன்பம் பிறக்கிறது 
இறைவன் மட்டும் தூங்கவில்லை 
இன்னும் தர்மம் ஜெயிக்கவில்லை ...!




ஐவிநாடி ....!


ஐயோவென அழுவதை நிறுத்தி
ஐவிநாடி அடையும் சுகத்தை
பறிக்கும் முன்
உன்யுகத்தை முடித்து பார்

பெண்ணே முயற்சி செய்
இன்னொரு
ஐவிநாடியை எதிர்கொள்ளா
தலைமுறையை
தலைக்கவிடா மண்ணாக

நம் தரணியில் பூக்கும்
விலைமாதுவின்
வீர குருதிகள்

விண்ணில் சென்று
மீண்டும் நம் மண்ணில்
விளங்கட்டும் கற்புக்கரசியாக...!

பெண்மையின் இலக்கணம் ...!


பெண்ணே
உன் மண்ணின் மைந்தனாய்
மறையும் மன்னன்

மீண்டும் வாழ
உன் வாழ்க்கையில்
ஆனந்தம் ஒளிவீசட்டும்

அங்கங்கள் யாவும்
தங்கங்கள் ஜொலிக்கட்டும்

மஞ்சள் குங்குமத்துடன்
மனம் நிறைந்த
மண்ணில்

உன் மானம் காத்து
மலர் சூடி
மஞ்சத்தை மறந்து
பிறர் நெஞ்சத்தை
வஞ்சம் கொள்ளாமல்

இறுதிவரை உன்
பிறப்பின் சுகந்திரம்
என்றும் பேர் சொல்லட்டும்
பெண்மையின் இலக்கணமாய்...!

அடிமை பெண்ணாய் ...!


சிரிக்கிறேன் சிற்றின்பமாய்
அழுகிறேன் பேரின்பமாய்
துடைக்க யாரும் இல்லாமல்
தூங்குகிறேன் அனாதையின்
கல்லறையில் அடிமை பெண்ணாய் ...!


வாழ்ந்து வாழ்ந்து வெல்கிறாள் ...!


பொழுதுகள் போனாலும் பழுதுகள்
கண்ட பசுமையில் மீண்டும்
தளிரும் மலராய் பூக்கிறாள்
பெண் .....!

அரை குறை உணவுடன்
அரக்க பறக்க வேலை சென்று

கருக்கு முறுக்கு பண்டங்களுடன்
கண்ணாய் பெற்ற பிள்ளைக்கு

தினம் வாங்கித் தந்த வள்ளலாய்
வாயை கட்டி வயிற்றை கட்டி

வாழ்க்கை என்னும் குட்டையில்
வளைந்து நெளிந்து செல்கிறாள்

இதில் துன்ப மென்னும் காற்றிலே
இன்ப மென்னும் பட்டமாய் - திசையில்லா

தாரமாய் கடவுள் தந்த பிள்ளையை
இத்தரணியில் தலை நிமிர்ந்து நடக்கவே

சட்டங்கள் பெற்ற மண்ணிலே
பல பட்டங்கள் பெற்ற தாயிமையால்...

வாழ்ந்து வாழ்ந்து வெல்கிறாள்
வாசமுள்ள பெண்மையாய் .....!

சொல்லடி நாத்தனாறே ...!


கருவறை தந்தவள் பொதுவுரை
கூறும் அறிவுரைகள் ......

பத்து திங்கள் பொத்தி வைத்து
பவளமணி முத்து போல்

எட்டு திங்கள் பாலுட்டி
எட்டுவைத்த நாட்களில்

பொட்டு வைத்து பூவும் வைத்து
புதுசு புதுசாய் ஆடை போட்டு

கண்ணே மணியே என்று
கண்ணுறங்க தாலாட்டி

தெரு வீதி கடை வீதி
தினம் தினம் சுற்றி வந்து

முதல் மொட்டை மூடி கொடுக்க
மும்மூர்த்தி கோவிலிலே

தாய் மாமன் தங்கத்தில் பூட்ட
தலை வாழை தானத்தில்

தலைமுறை கண்ட சொத்தை
தானமாய் தருவது நாயமா ?

சொல்லடி நாத்தனாறே நீ
சொல்லுவது நீதியாகுமா ....?

மஹா...!


பதினெட்டில் மெட்டியிட்டவள்
இருப்பதில் தாயாகி பின்
குழந்தை மனத்துடன் தன்
குடும்பத்தை ஆளும் அரசியாய் ....

மனதின் துன்பங்களை தன்
மஞ்சள் கயிற்றில் மறைத்து
வயதாகும் முன் தன் வாழ்வை
தொலைக்கிறாள் விதவை பெண்ணாய் .....

இதோ ....
கொடுங்கோல் பேச்சில் தன்
மூச்சை அடக்கி பேச்சில்
ஊமையாய் தாய்மையை காக்க
கண்ணீர் முகத்துடன் ......

கைதியாய் மாறி அகிம்சை வழியில்
இம்சை வலியை தாங்கும்
தரங்கெட்ட பெண்ணாய் இல்லாமல்
தன் தமிழ் மண்ணில் வீர நடை
போடுகிறாள் இதோ இந்த மஹா .....!

விடுதலை பெண்மணிகள் ....!


விடுதலைப் பெண்களில்
நம் வேலுநாச்சியார்
சிவகங்கை சீமாட்டியாய்
கணவனை கொன்ற
கயவர்களை வீழ்க்க
அரியணைஏறி ஆயுதம் ஏந்திய
வீர பெண்ணாய் ஆங்கிலேயரை
கொன்று வென்றாள்
அது மட்டுமே ......!

அஞ்சா நெஞ்சமும்
அகிம்சை மொழியும்
கலந்த கருவில்
பிள்ளை பேர் பெற்ற பின்னும்
வெள்ளையனே வெளியேறு
இயக்கத்தில் சொத்தை
விற்றும் தன் பெற்ற பிள்ளையும்
கணிக்கையாக்கினாள் சிறையில்
பூத்த அஞ்சலையம்மாள்....!

சீரும் சிறப்பும் கொண்ட
அம்புஜத்தம்மாள் .....
பல மொழி பயின்றும்
பகட்டு காட்டாமல்
பெண்ணடிமை குரளுக்கு
பேர் சொல்லும் பெண்ணாய்
சிறைப்பட்ட வாழ்க்கையை
உயிர் தொட்ட தமிழுக்காக
சுதந்திர தாயானாள் அதில்
சுட்ட வலிகளை
நான் கண்ட பாரதம் என்ற
நூலுக்கு விருதும் பெற்றார்
தமிழ் புகழும் பெற்றார் ...!

பெண்ணே ......
உனது பிறப்பு புனிதமானாலும்
உனது இறப்பு புன்னியமாகட்டும்...!


விதவையின் அழுகுரல் ...!

முள்ளாய் குத்தும் 
நள்ளிரவில் 
கல்லாய் துடிக்கும் இதயம் 
சொல்லாய் பேசாமல் 

கண்ணீர் சிந்துகிறது 
காலம் கடந்த 
கனவுகளை எண்ணி 

நினைவுகளாய் 
நீந்தும் காமக் கோயிலின் 
கல்லறை பூக்களாய் 

தேகம் வாடி 
மோகம் தேடி 
யாகமாய் சாகிறது 
இளைய வெண் புற...!

பெண் என்பவள் யார் ...?


ஒரு மர நிழலாய்
வளர்ந்த மனதில்
மறு மர கிளையாய்
என்னில் நுழைந்ததால்

இலை மரக் காயாய்
பூக்கும் காதலில்
தொடர் மரக் கிளையாய்
பூக்கிறாள்

காயாகி,கனியாகி பின்
விதையாகி மீண்டும்
பெண்ணாகிறாள்
பல யுகங்கள் படைக்க ...!

கண்ணீர் துளிகள் ...!


பெண்ணே உன் கண்ணீர்
துளிகளை மண்ணில்
விதைக்கும்போது உன்னில்
உள்ள உறவுகளை விண்ணில்
விளக்கேற்றி பார்

உன் கண்ணில் மீண்டும்
காவியமாய் ஓவியம்
படைக்கும் இந்த மண்ணில்

அப்போது
விதையாகும் வைரங்களை
தோல்வி என்னும் உளிகளால்
சிதைத்து சிதைத்து பார்

மீண்டும்
அழகிய சிலையாய் ஒளிரும்
வெற்றியில் உனது விழிகளும்
மொழிகள் பேசும்

உயிர் கொண்ட பதுமையின்
உறவுகள் நாளைய
உலகு கண்ட மணிகளாய் மாலை
சூடும் இந்த மண்ணில் ...!

mhishavideo - 145