Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

ஒரு லட்சியமான உறவு ...!

 


அலட்சியம் செய்யும் 
உறவிலிருந்து தான்
பிறக்கிறது
ஒரு லட்சியமான உறவு ...!

அந்த ஒரு நாள் மட்டுமே ...!

 ஹிஷாலி

ராஜா வீட்டு
ரோஜாவாக இருந்தாலும்
மலர்வதும்
மரணிப்பதும்
அந்த ஒரு நாள் மட்டுமே ...!

கத்தி புத்தி ...!

 hishalee

எந்த விஷயத்தையும்
கத்தியைப் போல்
கையில் எடுத்துக்கொண்டு
திரியாதீர்கள்
அது நம்மை
குத்தி கிழிப்பதுடன்
நம்மைச் சார்ந்தவர்களையும்
குத்தி கிழித்துவிடும் ...!

இயேசு - ஏழை

சிலுவை சுமத்தால் இயேசு 

கலப்பை சுமத்தால் ஏழை 

தத்துவம் ...!



வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு - பாரதியார் 

வள்ளுவ‌னைப் பெற்றதால் பெற்ற‌தே
புக‌ழ் வைய‌க‌ம்  -  பாவேந்தர்

வள்ளுவன் தவிப்பு (பிறப்பு )
வான் புகழுக்கே சிறப்பு    -  ஹிஷாலீ 



பெரியது கொடியது ?

Photo


கல்வி கடல் அளவை விடப் பெரியது 
வறுமை வான் அளவை விடக் கொடியது 
முயற்சி மட்டுமே முற்றுப் புள்ளியைத்  
தடுத்துவிடும் !

மறிக்காதே மரணிக்காதே...!

Photo: http://www.facebook.com/smartherodhanush



மரம் மனிதனின் பாதி 

மறித்து விட்டால் 

மரணம் தான் மீதி 

மறிக்காதே மரணிக்காதே...!

சவப் பேசி ...!





சாலைப் பேசி 

சவப் பேசி 

அதற்கு முன்

சற்று யோசி 

சாதிக்கலாம் நூறு ஆசி ...!

தத்துவம்...!
















மு . மேத்தா அவர்கள் :

நம்பிக்கை நார் மட்டும் நம் கையிலிருந்தால் 
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக் கொள்ளும் !

ஹிஷாலீ :

கனவென்னும் திரைப்படம் மட்டும் நம் கண்ணிலிருந்தால் 
வெற்றிப் பாதை எளிதில் வந்து சிக்கி கொள்ளும் !

















வைரமுத்து அவர்கள் :

சுடும் வரை நெருப்பு! சுற்றும் வரை பூமி !
போராடும் வரை மனிதர் 

ஹிஷாலீ :

சிரிக்கும் வரை நட்பு!சீரும் வரை காதல் 
போராடும் வரை பணம் !



இருவரி பொன் மொழிகள் ...!

உதவி செய்ததை மறந்துவிடு ஆனால்
உதவியால் பதவியைத் தேடுவோரை மறக்காதே

கண்ணகியின் ஒழுக்கம் சிலையாகும் - ராதை
ராமனின் ஒழுக்கம் கீதையாகும் முயலுங்கள்

பயன்தரும் சொல் பாதை மாற்றும் -தவிர்க்கப்
பயன்தரா சொல் பதவியை மாற்றும்

நல்லதோர் பொய் நம்மைக்காக்கும் - இல்லையென்
நம்மையே அது திரும்பித் தாக்கும்

சினத்தை அடக்கினால் சிகரமாய் உயருவாய்
இல்லையென் அச்சினமே உன்னைச் சிதைத்துவிடும்

முன் செயல் ஆராய்ந்து செய்தால் பின் செயல்
முன் செயலில் இழந்த தோல்வியைத் தடுக்கும்

அகத்தில் அழகும் முகத்தில் வெறுப்பும்
மிகை நாடி நல்லவர் தீயவர் தெளியமுடியும்

மலரின் தண்டு நீரால் உயரும்
மனதின் உறுதி பூவாய் மலரும்

முயற்சி உழைப்பின் செல்வம் - முயற்றின்மை
முடைமையின் வறுமையைத் தரும்

தீங்கு செய்தவர் பின் சென்று - தீங்கை
விளக்கி நன்மை செய்தல் சால்பு

காதல் சில தத்துவம்

வெட்ட வெட்ட 
வளரும் நகமல்ல காதல்...

கொட்டக் கொட்டக் 
குனியும் நாணலே காதல்

செருப்பாய் தேய்ந்தாலும் 
நெருப்பாய் வளர்வது தான் காதல்...

வெறுப்பாய் போகாமல் 
பொறுப்பாய் இருப்பது தான் திருமணம் 

சூப்பர் பஞ்ச...!


ஆணின் பேச்சும் 
ஐநா சபையின் பேச்சும் 
உண்மையானதா சரித்திரமே இல்லை

லைப்ரேரினா புக்ஸ் 
கேண்டினா டிப்ஸ் 
காதலித்தால் கிஸ் 
கடைசியில் லைப்பு மிஸ்... 

mhishavideo - 145