Showing posts with label போட்டிகள். Show all posts
Showing posts with label போட்டிகள். Show all posts

சனியன் ...!

 

எல்லா போர்க்களத்தில்
ஒரு உத்தமன்
மரணிக்கிறான்

எல்லா சூதாட்டத்தில்
ஒரு சனியன்
பகடைக்காயாக
உருட்டப்படுகின்றான் ...!

உடையாத_நீர்க்குமிழி

Image result for நீர்க்குமிழிகள்

கங்கா புத்திரன் நினைவு பரிசுப்போட்டி: 

உடைந்தது கன்னிக்குடம் 
உடையாத நீர்க்குமிழி 
குழந்தை ....
சீம்பால் குடிக்கும் சிசுவின் 
பசிக்கு தாயின் மறு பிறவி ...
அழியா அட்சைய பாத்திரம் !
தாலாட்டு பாடும் தாயின் 
தியாகத்தில் பிறக்கும் 
தந்தையின் முதலெழுத்து ...
அள்ள அள்ள குறையாத 
அறிவு பெட்டகம் !
புது குமிழி சூட்டில் 
மழைத்துளியாய் சிரிக்கும் 
மருமகள்... தலைமுறை 
பொக்கிஷத்தின் தாய்மடி !
பேரனோ பேத்தியோ வென 
ஏங்கும் பெற்றோருக்கு 
தாத்தா பாட்டியின் சொத்து ...
உடைந்த மனதை ஊக்குவிக்கும் 
தியாகத்தின் முடிவுரை !
தளர்ந்த தாய் தந்தைக்கு 
வளர்ந்து ஆளாகும் 
மகனின் கைப்பிடிப்பு 
கடைசி யாத்திரையின் நெய்ப்பந்தம் !
மண்ணில் மக்கும் உடலும் 
சொக்கும் அழகும் என்றுமே 
உடையும் நீர்குமிழியென 
உணர்ந்தவனுக்கில்லை இவ்வுலகம் !

கடைப்பிடிப்பீர் இளைய சமூகமே ...!



பொழுது விடியும் முன்னெழுக  
    புழுதிப் பறக்க ஓடிடுக 
குளிர்ந்த நீரில் குளித்திடுக 
    குல தெய்வத்தை வணங்கிடுக 
காலை உணவு புசித்திடுக 
    கடமை யாற்றப் புறப்படுக 
அறிவு சிறக்கப் படித்திடுக 
    ஆசிரியரை என்றும் மதித்திடுக 
கண்ணீர் துடைக்கப் பழகிடுக 
    கனிதரும் மரமாய் வளர்ந்திடுக 
காந்தி வழி நடந்திடுக 
    கர்ணன் புகழ் பாடிடுக  
காலம் தவறாது உழைத்திடுக 
    கருப்புப் பணத்தை ஒழித்திடுக 
பாவங்கள் செய்வதை நிருத்திடுக 
   பாரதி தமிழை போற்றிடுக  
ஆபத்து காலத்தில் உதவிடுக 
    அப்துல்கலாம் கனவை நிஜமாக்கிடுக 
அகிலம் செழிக்க மரம்நடுக  
    அத்திமரம் போல் இனித்திடுக 
ஏளனம் செய்வதை மறந்திடுக 
    ஏழைக்கு உதவ நினைத்திடுக 
சாலை விதியின் துணையோடு 
    சமூக நலன் காத்திடுக !

குறிப்பு : -
இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 -தமிழ் இணைய
கல்விகல்வி கழகம் இணைந்து "மின்தமிழ் இலக்கிய
 போட்டிகள் 2015 க்காக எழுதப்பட்டது!
வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த
எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு...
இவை என் சொந்த படைப்புதான் என்றும் இதற்கு முன்
எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்
இப்படிக்கு
ஹிஷாலீ .

முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!



கணினிக்கேது
கட்டுப்பாடு
கண்ணகி பிறந்த
மண்ணில் கலவிக்கு
வேண்டும் கட்டுப்பாடு
அலைவரிசையில்
புலன் பெயரும்
அண்ணன் தங்கை
காதலுக்கு
வேண்டும் கட்டுப்பாடு
எளியவர் பயணத்தில்
வலியவர் கொள்ளும்
சில்மிஷத்திற்கு
வேண்டும் கட்டுப்பாடு
காக்கைக்கும்
தன் குஞ்சு
தாய் குஞ்சு
என உணர்த்தும்
அப்பாக்களுக்கு
வேண்டும் காட்ப்டுபாடு
ஏழைகளின்
கோமணத்தை
களைந்து
சாசனத்தில்
தோள் கொடுக்கும்
அரசியலுக்கு
வேண்டும் கட்டுப்பாடு
மக்காத நெகிழி 
மதுகுவலையில் 
குடித்து மடியும்
அஸ்தமனங்களின்
ஆண்மைக்கு 
வேண்டும் கட்டுப்பாடு
அங்கத்தை அளக்கும்
தங்கத்தின் மோகத்தை
தணிக்கும் சமூகத்திற்கு
வேண்டும் கட்டுப்பாடு
சர்வமத கூட்டனியில்
ஆதிகம் செலுத்தும்  
ஜாதிகளுக்கு 
வேண்டும் கட்டுப்பாடு
சமுகமே 
நீ பாடு நீ பாடு
தமிழர் பண்பாடு
நீ கூடு வெறும் கூடு
மரணித்தப்பின் எலும்புக்கூடு
இதை புரிந்து 
ஓடு நீ ஓடு
தமிழர் பண்பாட்டை
காக்க ஓடு ...!

குறிப்பு : -
இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 -தமிழ் இணைய கல்விகல்வி கழகம் இணைந்து "மின்தமிழ் இலக்கிய போட்டிகள் 2015 க்காக எழுதப்பட்டது!
வகை (4) புதுகவிதை போட்டிகள்! வளர்ந்து வரும் உலகில் பண்பாட்டின் தேவை!
இவை என் சொந்த படைப்புதான் என்றும் இதற்கு முன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்
இப்படிக்கு
ஹிஷாலீ .

ரூபனின் தீபாவளி கவிதை போட்டி - 2014




வாங்கிய பூக்களை எல்லாம் நீ 

வரும் பாதையில் தூதுவிட்டேன் 

பூ மனம் அறிந்தாவது இந்த 

பூவையை தேடி வருவாய் என்று 

ஓரப்பார்வையில்

ஒதுங்கி நின்று பார்க்கிறேன் 

மல்லு வேட்டி மைனரின் 

அழைகை ரசிக்க ...!


**************************************




நீ கிடைக்க மாட்டாய் 
என தெரிந்தும் 
இனிக்கிறது 
நினைவு 
சுகரர் இல்லை 
உவர்க்கிறது 
கனவு 
பிரஷர் இல்லை 
கசக்கிறது 
பிரிவு 
பி.பி இல்லை 
புளிக்கிறது 
மறதி 
காய்ச்சல் இல்லை 
உரைக்கிறது 
விழிகள் 
ஈரமம் இல்லை 
வெறுக்கிறது 
உதடுகள் 
ஊமையாகவில்லை 
மொத்தத்தில் ...
வைத்தியமாய் நீ இருப்பதால்
பைத்தியமாகவில்லை ...!


என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!





விதை இல்லா விழுதொன்று 
வேரூன்றியது மண்ணில் 
அதற்கு ...
மழையெனப்  பெயரிட்டேன் 

நன்றிக் கடனாக ...

கிளையற்ற தாகம் 
மதமற்ற சேவை 
இனமற்ற பஞ்சம் 
மொழியற்ற பசி 

இவைகளை தாண்டி வாழும் 
காற்றையும் வளர்த்தது 

மனிதா ?
கருணைக்கு இலக்கணமான 
நீ 
என்ன செய்தாய் இந்த பூமிக்கு !

ஒளி காட்டும் வழி !

பேசா தீபம்
பேசும் தீபத்தை
அணைப்பதல்ல தீபாவளி
பசிக்கும் கோயிலில்
பணத்திரியை
தூண்டுவதே தீபாவளி !
கல்லறையை சுருக்கி
கண்ணீரால் களிப்பதல்ல
தீபாவளி
கண்கள் சிரிக்க
காளையர் புசிக்க வருவதே
தீபாவளி
மழையில்லா இடி
மனமில்லா மின்னல்
மலர்வதல்ல தீபாவளி
மண்ணை பொன்னாக்கி
மனித சக்தியை ஒன்றாக்கும்
தீப ஒளியே தீபாவளி
ஓராயிரம் சுவாசங்கள்
ஒசோனை ஓட்டையாக்கி
ஒருக்குலைய வைப்பதல்ல தீபாவளி
ஒன்றே குலம்
ஒருவனே தேவன் என்று
நன்றே செய்யத் தூண்டுவதே தீபாவளி
போட்டி பொறாமையுடன்
பண்பாட்டை  பாழாக்குவதல்ல
தீபாவளி
புத்தாடை போனஸ் பலகாரத்துடன்
புண்ணிய ஆத்மாக்களை
வணங்குவதே தீபாவளி
எண்ணெய் குளியலில்
எண்ணிலடங்கா பாவங்களை
கழுவுவதல்ல தீபாவளி
எதிரியை நண்பனாக்கி
எச்சிலையை தேடும் பசிக்கு
எட்டா புகழை தேட
வழி
காட்டுவதே தீபாவளி

மதுவை குடித்து
மாவட்டம் மாவட்டமெல்லாம்
வன்முறையை வளர்ப்பதல்ல தீபாவளி
மரண வயது நூறாக்கி
மகிழ்ச்சியுடன்
வாழ்ந்து காட்டுவதே
சிறந்த தீபாவளி

உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நீங்கள் எழுத நினைத்த காதல் கடிதம்.

எழுது கோலை இதயக் கோலாகக் கொண்டு எழுதுகிறேன் முதல் காதல் 

கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இருந்தும் எழுதுகிறேன் ....

முரட்டுக் காதலிக்கு திருட்டுக் காதலன் எழுதும் மடல் நாம் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை அனால் பேசியிருக்கிறோம் அந்தப் பேச்சிலே இவ்வளவு ஆசைகள் இருந்தால் உன் மூச்சில் எவ்வளவு அன்பு இருக்கும் என்று காதலிக்க தொடங்கினேன் அன்று முதல் இன்று வரை நீ எப்படி எல்லாம் என்னுடன் நடை பெயர்க்க வேண்டும் என்று ஓரு சிறு கற்பனை செய்திருக்கிறேன் பார் 

அன்பே ஆருயிரே அதிகாலைத் தேநீரில் சுவை ஊட்டவா ? 

அன்ன பசிக்கு வண்ண ருசிக்  கூட்டவா ...?

எண்ணங்கள் யாவும் பொன் மஞ்சங்கள் பேசும் பொழுதாக்க வா ! 

இரவு தாரகைக்கு இமைகளைக் கடன் கொடுத்துக் கனவைத் தாலாட்டவா ...?

அப்பப்போ ரசிக்கும் பாடலுக்கு நிழலாக வா !

சுவாசிக்கும் காற்றுக்குப் பூஜிக்கும் முதலாக வா !

பேசும் வார்த்தைக்குப் பிழையாக வா !

பேராசைத் தருணத்தில் ஓராசைக் கூறும் அறிவாக வா !

அவ்வப் போது கோபம் கொண்டால் யாகம் செய்யும் மெழுகாக வா !

பெண்ணே என் முன்னே இன்னொரு தாயா வா !

தவழுகிறேன் குழந்தையாய் வாரி அணைத்துக் கொள் 

வாழும் நாளெல்லாம் இறக்கி வைக்காமல் இமை போல் வழிகாட்டுவேன்  

நாம் வந்தப்  பாதை முடியும் வரை. 

வெறும் முற்றுப் புள்ளியாக இல்லை முடிவில்லாப் புள்ளிகள் கோர்க்க 

சம்மதம் என்றால் சொல் 
சகல விதத்திலும் சமர்ப்பணம் செய்கிறேன் இதோ ... 

முடிகள் கோர்த்துப் படிகள் செதுக்கும் பருவமாய் 
அடிகள் பதிக்கும் சுவடுகள் பூசும் விபூதியாய் 
உதிர்ந்த மலரில் உருவம் செதுக்கும் சருகாய் 
மடித்த உடையில் படுத்துக்கிடக்கும் பட்சியாய் 
நகங்கள் சேர்த்து யுகங்கள் முடிக்கும் ஆலாபனையாய் இல்லாமல் 

அதிர்ஷ்டத்தில் ராமனாய் 
பொறுமையில் வசிஷ்டராய் 
மழலையில் கண்ணனாய் 
பாரே போற்றும் பாரதிக்குக் கண்ணம்மா  வாக ஈருலகை  அழைத்து 
இருகரம் பற்றிட வாராயோ ?

என்று கவிதையில் சொன்னாலும் இளமையில் துள்ளும் கற்பனையையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 

நீ சாலையில் வருவதற்கு முன்  உன் நிற ஆடையைக் கண்டு என் நிற ஆடையாக மாற்றிக்கொள்ளும் மறைமுக காதலை விரும்புகிறேன் 

ஒவ்வொரு அழைப்பிலும் உன் குரல் கேட்காதா என ஏங்கும் தவிப்பை தேடுகிறேன் 

கடைதனிலே குவிந்திருக்கும் பூக்களை கண்டால் உனக்காக தவமிருப்பதாக கற்பனை செய்கிறேன் 

சம்பள நாளன்று உனக்கென்று ஓர் புடவை வாங்கச் சொல்லி ஜவுளிக்கடை பொம்மைகள் கூட என்னை கேலி செய்வதாக புன்னகை செய்கிறேன் 

ஐஸ் கிரீம் கடையில் இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் அழகிய தருணத்தை நோக்கி தவமிருக்க எண்ணுகிறேன் 

மழையில் குடையாக மனதில் சிலையாக நட்புடன் நடக்க ஆசைப்படுகிறேன் 

கடற்கரையில் ஒன்றாக அமர்ந்து சிற்றுண்டிகள் சுவைத்துக் கொண்டே அலைகளை ரசிக்க விரும்புகிறேன்

பிடித்த சினிமாவிற்கு சென்று அடுத்தடுத்த சீட்டில் அமர்ந்து யாரெனத் தெரியாத உன் குறும்புத்தனத்தை ரசிக்க எண்ணுகிறேன்

பிரிவைக் கூட பரிவாய் மாற்றும் பதுமையே இன்று முதல் இரவை பகலாகவும் பகலை உனதாகவும்  மாற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன் இதோ  இன்றையக் கலிகாலத்தில்  தொட்டுப் பழகாமல் எட்டி நிற்கும்  அன்பு காதலனாக  சம்மதம் என்று சொல்வாயா என் முரட்டுக் காதலியே! 

இப்படிக்கு,
உன் பதிலை எதிர் பார்த்து காத்திருக்கு
திருட்டுக் காதலன் .





(இது போட்டிக்காக எழுதப் பட்டது வெறும் கற்பனை தான் மற்றவர்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் இந்த லிங்கை http://www.seenuguru.com/2013/06/contest-info.html சொடுக்கவும் நன்றிகள் )

mhishavideo - 145