| வாடி
வாசலுக்கும் - நெடு வாசலுக்கும் உள்ள ஒற்றுமை இதோ ! |
அன்று வாடி வாசலை மூட
நினைத்தார்கள் எப்படியோ போராடி வென்று விட்டோம் !
|
இப்போது நெடு வாசலுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம் ! சரி .... |
வாடி வாசலை அடைத்து விட்டால் நெடு வாசலை ஈசியாக அடைத்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்கள் ! |
காரணம் சாண எரிவாயு மூலம் கிடைக்கும் மீத்தேன் இல்லாமல் போகும் என்பதே அவர்கள் திட்டம் |
ஆனால் நாம் விழித்துக்
கொண்டோம்
|
எல்லோரும் கூறும்
கூற்றுகள் படி
|
மாடுகள் இருந்தால் எளிதில் கிடைக்கக்கூடிய "மீத்தேன் வாயு "கிடைத்துவிடும் (அதாவது மேலே கூறியபடி மாட்டுச்சாணி மூலம் கிடைக்கு வாயு எந்த பக்க விளைவும் இல்லாதது ) |
அப்புறம் பால் உற்பத்தி அதிகரிக்கும் இதனால் எல்லோரும் மலிவு விலையில் பால் வாங்கி அருந்த முடியும் |
நோய் நொடி இல்லாமல்
வாழமுடியும்
|
இதை மனதில்
வைத்துக்கொண்டு தான் ஒவ்வொன்றாக நம்மிடம் உள்ள இயற்கை வளங்களை முடக்க
நினைத்தார்கள் அந்த கார்ப்ரேட் கம்பேனி காரர்கள்
|
இப்போது கூட நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் இனி எப்போதுமே இருட்டில் தான் வாழ வேண்டும் |
அது மட்டுமின்றி ஒவ்வொரு பொருளுக்கும் நாம் அயல் நாட்டையே நாடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம், வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம் ! |
Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
Labels:
கட்டுரை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தமிழ் மொழி பிறந்து சுமார் 20000 வருடம் ஆகுது
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.
இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,
ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.
இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் "குமரிக்கண்டம்". ஏழுதெங்கநாடு, ஏழுமதுரைநாடு, ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது!!
பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.
தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440 இல் 4449 புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700 இல் 3700 புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"
ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .
இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம இன்றைய மதுரையில் "கி .மு1850 இல் 449 புலவர்கல்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..
இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.
வரலாற்று தேடல் தொடரும்.........!! தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே ! இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம தோழர்களே !
முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் ! நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் ! தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .
நன்றி !
( இதை எனக்கு பகிர்ந்தவர் என் ஆருயிர் அக்கா மஞ்சுபாஷிணி அவர்கள் அதை உங்களுடன் பகிர்வதில் நான் மிக்க மகிழ்ச்சிக் கொள்கிறேன் )
Labels:
கட்டுரை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தீபாவளி ஒரு புதிய கோணத்தில் !
"விசேசம் "
விழாவானது உலகில்
சொர்க்கத்தில் நரகாசுரன் ...!
"விசேசம்" என்பது இறந்து பதினாறாவது நாள் செய்யும் காரியத்தை குறிக்கும்
அப்படி என்றால் நாம் ஏன் தீபாவளியை சந்தோசமாக கொண்டாடுகிறோம் ?சொல்கிறேன்
இன்றைய காலத்தில் யார் வீட்டிலாவது ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு காரியம் செய்ய 16 நாள் விசேசம் வைப்பார்கள் அன்று எண்ணை தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து அவர்களுக்கு பிடித்த பலகாரம் செய்து படையல் போட்டு விளக்கேற்றி வணக்கிய பின் அனைவரும் உண்பார்கள். அப்போது அந்த ஆன்மா சந்தோசத்தில் சொர்கத்தில் சேரும் என்பது நம் முன்னோர்கள் கருத்து !
அதே போல் தான் நாமும் இன்று அந்த நரகாசுரன் இறந்த நாளை தீபாளியாக கொண்டாடி மகிழ்கிறோம் அவன் என்ன நமக்கு சொந்தமா ? இல்லையே பின் ஏன் புதுத்துணி பலகாரம் செய்து கொண்டாடுகிறோம்.
அன்று அந்த நரகாசுரன் மக்கள் அனைவருக்கும் நரகத்தையே வாரி வழங்கினான் அதானால் இறைவன் மக்கள் அனைவரையும் அவன் இறந்த நாளை விழாவாகக் கொண்டாடி வந்தால் அவன் செய்த பாவம் நீங்கி நரகத்திற்கு பதிலாக சொர்கத்தை அடைந்துவிடுவான். அப்போது நரகாசுரனுக்கு மறுபிறவியே கிடையாது என்ற கருத்துக்கு இணங்க நாமும் அந்நாளை தீபாவளி திருநாளாக கொண்டாடுகிறோம்.
இதிலிருந்து என்ன தெரிகிறது!
நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு நாமும் தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை பலி வாங்குவேன் என்பவர்களுக்கு மறு பிறவி கிடைக்காது சோ நாமளும் சந்தோசமாக வாழலாம் ஒகே .
நன்றி !
Labels:
கட்டுரை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
திருமணம் - கட்டுரை

திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை
திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறையப் படங்களிலும் செய்திகளிலும் நேரிலும் கண்டு கழித்துள்ளேன்.அதை ஒரு புதிய கோணத்தில் கட்டுரையாக எழுதுகிறேன் தவறாக இருந்தால் மன்னியுங்கள்.
திருமணம் = மரணத்தின் முடிவுரை தான் இந்தத் திருமணம்
என்னடா ஆரம்பத்திலே அபசகுனமாப் பேசுறேன்னு தவறாக நினைக்க வேண்டாம் விவரமாகக் கூருகிறேன்.
மனிதனின் பிறப்பே திருமணத்தின் முகவரிக்காகத் தான் அப்படி ஒரு தருணம் இல்லாமல் இருந்தால் மரணம் என்ற ஒன்று நம்மை ஆட்டிப் படைத்திருக்காது. நாமளும் வயதுகள் எண்ணிக்கை இல்லாமல் வாழ்ந்திருப்போம் யோசியுங்கள்
ஒரு குடும்பத்தில் தாய் தந்தை இருவரும் முன் ஜென்மத்தைப் படிக்க முடியுமா ? இல்லை பார்க்க தான் முடியுமா ?
முடியாது இருந்தும் படித்துப் பார்த்து உணரவே பிள்ளைகளாகப் பெற்றெடுக்கிறார்கள் இது தான் நீதி
அப்போது முன் ஜென் கர்மங்கள் பாவங்கள் எல்லாம் அவரவர் குழந்தைகளுக்குப் பரிச்சையாக நிகழ்கிறது .அதே போல் அக்குழந்தை வளர்ந்து படித்து எல்லா விதமானா இன்ப துன்பங்களையும் அனுபவித்துத் திருமணம் ஆகும் தருணத்தில் தன் தாய் தந்தையின் பின் ஜென்மத்தை படிக்கமுடிகிறது இதுவும் ஒரு பட்டாம் பூச்சி வாழ்க்கை போல் தான்
என்னங்க அப்படி என்றால் எத்தனை பேர் திருமணம் ஆகாமல் இறந்து விடுகிறார்கள் அதற்கு என்ன சொல்வது ? என்று கேட்கலாம்
சொல்கிறேன் நமக்கு மட்டுமா மறதி உள்ளது இல்லையே, நம்மைப் படைக்கும் இறைவனுக்கும் அந்த வியாதி உண்டு. அந்த வேளையில் படைத்த உயிர்கள் எல்லாம் இப்படி விபத்தில் முடிகிறது
விவரமாகக் கூறுகிறேன்
புள் பூண்டு கனிகள் காய்கள் இப்படி ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை படைக்கும் போது மறதியாக ஆறறிவு மனிதனை படைத்துவிட்டதால் தன் தவறை திருத்திக்கொள்ளவே இறைவன் ஆகாய விபத்து பூலோக விபத்து
நோயில் மரணம் பேயால் மரணம் என்று தனது கணக்கை நிவர்த்திச் செய்கிறார்
அக்கணக்கு கூட ஒரு பாவத்தின் பலியாகும் அப்பாவம் கண்ணீரால் கழுவப்படும் போது கர்மம் கரைந்து அதர்மம் மெலிந்து ஞாயம் ஜெய்கிறது
ஒகே ஒகே திருமணம் என்ற ஐந்து எழுத்தில் இவ்வளவு காரணங்கள் அடங்குகிறதா என்று ஐயம் தோன்றுகிறதா இப்போது தெளிந்ததா நண்பர்களே
ஒரு சிலர் திருமணம் என்பதும் வேறு எண்ணத்தில் படிக்க வந்திருப்பார்கள்
கவலை வேண்டாம் அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.
நன்றி
வணக்கம் !
Labels:
கட்டுரை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பூக்களும் அதன் குணங்களும்...!
நான் தான் உங்கள் பூ பேசுகிறேன்
எனக்கு பூ என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா...?
தெரியாதே...
ம்ம் சொல்கிறேன் நான் பூமியிலே பிறந்து பூமியிலே இறப்பதால் எனக்கு பூ என்று பெயர் வைத்தார்கள் நம் முன்னோர்கள்
ஒ அப்படியா... ஒகே மற்ற பூக்களும் அடை மொழி உள்ளதே அது எப்படி வந்தது
அதுவா சொல்கிறேன் கேள்
கனகாம்பரம்: என் இதயம் கனமானது நான் இரண்டு மூன்று நாள் உயிர் வாழ்கிறேன், என் அறிவியற் பெயர் க்ராசோண்ட்ரா இன்ஃபண்டிபிலிபார்மிசு காலம் முழுவதும் பூப்பதால் கனகாம்பரம் என்று பெயர் வந்தது
ரோஜா :ரோமியோ ஜூலியட் மாதிரி காதல் கொள்ளும் இதயங்களுக்கு அழகை கொடுத்து அமைதியை பெறுகிறேன் அதனால் ரோஜா என்று பெயர் வந்தது
முல்லை : பிள்ளை உள்ளம்போல் பேசும் வாசத்தில் மூளை முடுக்கெல்லாம் மூக்கை துளைத்து மணம் வீசுகிறேன் மேலும் பெண்களின் பால் நோயை விடுத்து வாழ்வதால் எனக்கு முல்லை என்று பெயரும்
அல்லி : ஒரு நாள் அழகு ராணி நான் இரவில் மலர்ந்து காலையில் குவிந்திருப்பேன் எண்ணில் 50 வகைகள் இருப்பதால் நான் அள்ளி என்ற பெயர் கொண்டேன்
சாமந்தி: அந்திப் பொழுதில் காதல் கொண்டு சாந்திகொள்ளும் இறைவனுக்கு சந்தன மாலையாய் சூடுவதால் என் பெயர் சாமந்தி
சாமந்தி பூவிலிருந்து கிடைக்கும் பைரித்ரம் பூச்சிக்கொல்லி யாகவும் கிரைசாந்திமம் சினரேரி போலியம் தயாரிக்கப்படுகிறது.
மேலும் வியாபாரிகளுக்கு நான் இலாபம் ஈட்டு தரும் நல் மலராய் பூக்கிறேன்
மல்லி :மயக்கும் இல்லறத்தில் துள்ளி விளையாடி சொல்லி பேசும் காதலில் கள்ளி கள்ளி என்று அணைக்கு அன்பு உள்ளங்களுக்கு ஆசையை தூண்டும் அமிர்த ரசமாய் மேலும் எண்ணை கொண்டு அர்ச்சனை செய்தால். எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுவீர்கள் அதற்க்கு மேலும் நான் உங்களின் குடற்புழுக்களை அழிப்பதற்கும் தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி ஏற்படும் ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல் போன்ற தொல்லைகளிலிருந்து மீளலாம் உதவி செய்கிறேன்
மரிக்கொழுந்து: நாங்கள் வாடினாலும் வாசம் தந்து வாழும் வரை வாசத்துடன் வீழ்கிறோம் அதுமட்டுமா செம்பட்டை முடி நிறம் மாற என் இலைகள் உதவுகிறது. மலைகளையே மணக்க வைப்பதால் மரிக்கொழுந்து என்ற பெயர் கொண்டோம்
குறிஞ்சிப்பூ: பருவப் பெண்கள் போல் நான் பன்னிரெண்டில் பருவமடைந்து உலகின் அதிசய மலராய் காதல் கொண்டு குறிஞ்சி நிலமாய் வளம் கொளிக்கிறேன்.
வேப்பம்பூ: நான் அனைத்து வகையான நோயிகளுக்கும் வேர் முதல் நுனிவரை மருந்தாய் பூப்பதால் என் பெயர் வேப்பம்பூ
எண்ணை பற்றி அறியாதோர் இவ்வுலகில் யாரும் இல்லை.
அரளி பூ: நான் மிக அழகான அற்புத வடிவம் கொண்ட பூ எண்ணை பூஜைக்கும் பயன் படுத்துவார்கள் மேலும் நான் ஆட்களை கொள்ளும் விஷத்தன்மை கொண்டதால் அரளிபூ என்று பெயருடன் வாழ்கிறேன்.
வாழைப்பூ : நான் எண்ணற்ற நார்ச் சத்துக்களை கொண்டும் கொழுப்பு அமிலங்களும் போக்கும் நல் மருந்தாகவும் பழங்களை உருவாக்கும் ஊன்று கோலாய் நிலைத்து நிற்கிறேன்...!
இப்போது அறிந்தாயா நீ நாங்கள் அழகுக்கு பயன் படுகிறோம் மருத்துவ குணங்களுக்கும் பயன்படுகிறோம் மேலும் கவிஞர் களுக்கும் காற்றுக்கும் வானுக்கும் பேர் உதவியாகவும் ஓர் நாள் வாழ்ந்தாலும் உலகையே ஆண்டு வெற்றி பெறுகிறோம். அதே போல் மனிதர்களும் மனிதில் அழகும் ஈகை திறனும் கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை என்றுமே சிறக்கும்.
Labels:
கட்டுரை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தாமரையும் மற்றப் பூக்களும் உரையாடுதல்:
தாமரையும் மற்றப் பூக்களும் பற்றி கட்டுரை என்ற தலைப்பில் உங்கள் ஹிஷாலீ மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் கண் முன்...
மற்றப்பூகள்: தாமரையை பார்த்து நீ எங்களை விடப் பெரியவளோ?
தாமரை : இல்லையே நாம் அனைவரும் ஒன்று தான் சகோதரியே
பூக்களில் பெரியவள் சிறியவள் என்று பாகுபாடில்லையே
மற்றப்பூகள் : அப்படி என்றால் உன்னை மட்டு ஏன் பெண்கள் தலையில் சூடுவதில்லை?
தாமரை: அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சகோதிரிகளே நான் இறைவனுக்காக படைக்கப் பட்டவள் இல்லை பெண்மையின் கற்பை புனிதப் படுத்தும் உவமைக்காக படைக்கப்பட்டவள்
மற்றப்பூகள்: புரியவில்லையே ....?
தாமரை: நீங்கள் அழகு பெண்கள் முதல் சின்னஞ்சிறு குழந்தைகள் வரை தலையில் பூ சூட்டி மகிழும் மென்மை மனம் கொடவர்கள் மேலும் பூஜைக்கும் உங்களை உபயோகிக்கிறார்கள் அதற்கு மேலும் இறந்தபோதும் இன்னும் இறக்காமல் வாழும் பெண் மக்களுக்கு நீங்கள் தியாக உள்ளத்துடன் உதவி புரிகிறேர்கள்,
எல்லா மங்கள காரியங்களுக்கும் உங்களுக்கே முதல் உரிமை கொடுகிறார்கள் அப்படி பாட்ட தியாகம் உள்ளம் கொண்ட உங்களை கண்டு மற்றவர்கள் ஜாதி மதம் இனம் மொழி என வேறுபாடு அறியாமல் யாவரும் ஒன்றே என உணரவேண்டும்
மேலும் இந்த உலகில் மனித உயிர்கள் உங்களை போல் உதிரும் நிலையை கொண்டது .அவரவர் விதி அவரவருக்கே தெரியாது என்பதை புரியும் வகையில் உங்களை கடவுள் படைத்துள்ளார் இதை யாவரும் அறிந்து உணர்வதற்காகவே நீங்கள் காலையில் பூத்து மாலையில் மறைகிறேர்கள்.
நானோ காதல் மோகத்தில் சில பெண்களின் தவறுகளை உணர்த்தவே நான் கடவுளின் திருவடியில் பூஜிக்கிறேன் அதாவது பெண்மையின் கற்பு தன் கணவனின் ஒருவனுக்கே உரியது என்பதை மனதில் நிறுத்தி பெண்கள் தாமைரைபோல் தன் கற்பை காத்து கடவுளாகிய கணவனுக்கே சொந்தமாக்கி வாழவேண்டும்
எப்படி நான் கதிரவனின் காதலில் விரிந்தாலும் கை தொடா வாசத்தில் இறைவனின் திருவடியை அடைந்து என் பெண்மையை காத்து கடவுளுக்கு விருந்தாகிறேன் இதனால் தான் என்னை தேசிய மலராக பெயர் சூட்டி நம் இந்தியப் பெருமையை நிலை நாட்டும் வகையிலும் தமிழ் பெண்களின் கலாச்சாரத்தை பேணி காக்கும் அருவுரைகளை எடுத்துரைக்கவும் மண்ணில் நான் தாமரையாக பிறப்பெடுத்தேன்
தெய்வ மலர்
தேசிய மலர்
தாமரை
என்ற பேருக்கினங்க வாழ்கிறேன் போதுமா ...
மற்றப்பூகள்: ம்ம்ம் இப்போது புரிந்தது நீ கூறுவதும் முற்றிலும் உண்மையே இந்த உண்மையே எங்களுக்கு உணர்த்த காரணமான தமிழ் தோட்டத்திற்கும் மேலும் என்னை போல் உன் பெருமையை அறியாத பெண்களுக்கும் உன் உரையாடல் ஒரு பாடமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்த்தி விடை பெறுகிறேம் நன்றி வணக்கம்.
என் காதல் பள்ளி கொண்டது
இறைவன் சன்னதியில்
தாமரை பூக்கள்
Labels:
கட்டுரை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!

.jpg)

