Showing posts with label சருகுகள் கவிதைகள். Show all posts
Showing posts with label சருகுகள் கவிதைகள். Show all posts

சருகு(கள்)





சருகுகள் மீண்டும் மலராகாது 
ஆனால் ஓர் நாள் 
விதையாகும் சரித்திரத்தில் 
எத்தனை 

காரிய இருளில் 
கை கோர்க்கும் சருகுகள் 
சலனத் தீயில் சாம்பலாகியது 
எத்தனை 

சருகை தொட்டப் பூக்கள் 
மண உயரத்தில் பூஜித்தாலும் 
மரணம் தீண்டியாதும் சொர்க்கத்தை 
தேடும் கண்ணீர் பூக்கள் எத்தனை 

புங்கமரச்‌ சருகுகளில்
புரண்டு கிடக்கிறது
புன்னகையை இழந்த 
பெண்மையின் விலைகள் எத்தனை 

ஏழைச் சருகுகள். 
ஏலம் போகிறது மண்ணில் 
கண்ணீர் காசுக்கு பண்ணீர் தேடும் 
அரசியல்வாதிகள் எத்தனை 

போன மையில் 
மொட்டையான மரங்கள் 
ஆயிரம் கதைகளுடன் 
ஆவியாகும் சருகுகளின் 
ஓவியங்கள் தீட்டும் 
உணர்வுகள் எத்தனை

நொறுங்கும் சருகுகள்
வேள்வியாகி விரதம் கொண்டு 
வெற்றிக்காக போராடும் 
வெள்ளை பூக்களில் 
வேராய் நிற்கும் கன்னிகள் எத்தனை 

முடிவற்ற பாதையிலும் 
தொடர வைத்தது சருகுகள் 
அநாதை என்ற 
முதல் எழுத்தை மாற்றி 
தலை எழுத்து பசுமை பெற 
போராடும் இளம் இதயங்கள் 
எத்தனை 

சருகுகள் கரம்கொண்டு. 
உருவங்கள் செய்யும் காதலருக்கு 
தோல்விக்காகவே நான்னிருக்கிறேன் 
கவிதை என்ற காதலனாய்(காதலியாய்) 
உன்னுடன் பயணிக்க
என்று உலரும் கவிஞர்கள் எத்தனை 


சருகு(கள்)

மனதில் வீசும் கற்றும் 
மறையும் முன் எத்தனை 
சருகுகள் இங்கே 
கண்ணீர் சிந்துகிறது...
தாய் பாலை சுவைத்த நாக்கு 
தமிழ் பாலை சுவைக்கும் போதும் 
மொழிப்பால் கொண்ட தேசத்தில் 
விழிப்பால் பிதுங்க நிற்கும் 
தாய்கள் எத்தனை 
அகர முதல கற்கும் முன் 
ஆங்கிலம் பேசுகிற பிள்ளை 
அகில மோகத்தில் 
ஆல்கஹாலுக்கு அடிமையாகும் 
இளைய சமுதாயம் எத்தனை 
அரும்பு மீசை இரும்புப் பார்வை 
கரும்புபோல் இனிக்கும் காதலில் விழுந்து 
எறும்பாகி துரும்பாகி துளிர் இதயங்கள் 
ஏறுவரிசையில் கூடும் 
காதலர்கள் எத்தனை 
உடைந்த முட்டையாய் நாறும் நாற்றத்தில் 
உலாவரும் இதயங்கள் 
ஒரு மணி காசுக்கு பலமணி வேசியாய் 
பகலிரவு காணாமல் முதலிரவு தேசத்தில் 
முடங்கிக் கிடப்பவை எத்தனை 
அல்லா ஏசு ஹிந்து அகிம்சை வாசிகள் 
தீவிரவாதத்தால் தீயிக்கு இரையாகி 
பேயிக்கும் பெரும் நஷ்டம் என்ற 
பெயரில் துளிர்விடும் 
மதக் கலவரங்கள் எத்தனை...
பாழாப்போன உலகத்தில் 
பணமே பிணமாய் மாறிவரும் போது 
குணமும் கோவிலும் எதற்கு 
இங்கே கொண்டு வந்து குவியுங்கள் 
ஊழல் பணத்தை 
என்று கோசமிடும் கட்சிகள் எத்தனை 
அத்தனையும் ஓர் நாள் சருகாகும் 
இங்கே அமைதி மட்டுமே கேள்வியாகும் 
ஒற்றுமையில்லா தேசத்தில் 
யாவரும் உடலும் ஓர் நாள் சருகாகும் 

சருகு(கள்)




காலத்தின் தண்டனையால் 
காலடி பட்ட சருகுகள்...
ரத்தம் சிந்தாமல் யுத்தம் செய்கிறது 
இன்னொரு பசுமை புரட்சிக்காக...!

வான் மேகம் கண்ணீர் சிந்த 
வறண்ட பூமி துளிர் காண 
புரண்டு புரண்டு புயலாகியது 
புது இன்ப காற்றில்
பொறந்த வீட்டை இழந்த சருகுகள்....

கக்கிய மரங்கள் 
காகிதமாய் பேசும் போது 
மக்கிய இலைகள் உரமாகி 
மரமாக அளவுகள் இல்லை 
இருந்தும் நான் ஒரு அதிசயப் பிறவி...!

காயிந்த சருகில் ஸ்வரமாகிறேன் 
கவிதை வடிவில் உயிர் வாழ்கிறேன் 
முடிந்த பொழுதிலும் 
முன்னேறிச் செல்ல விறகாகிறேன் 
பசியின் உயிராகிறேன்

எறும்புக்கு படகாகி
எதிரிக்கும் நன்மையாகி
காக்கைக்கு வீடாகி
காற்றிலே பறக்கும் 
பட்டத்திற்கு பாடமாகி
பலுனுக்கும் பாதையாகிறேன் 

முட்டாள் தேசத்தில் 
கொட்டாவி விட்டும் 
கெட்டாவி படத்தில் 
சிலிர்க்கும் கொடியாகி
சில்லென்ற காட்டில் குளிர்காயும்
காதலருக்கு தீயாகிறேன் ...

நானாகும் தருணத்தில் 
இறந்த காலமாகிறேன் 
இதயம் உள்ள கடவுளுக்கு 
இலைகலாகிறேன் என்றும் 
இலைகலாகிறேன்...! 


mhishavideo - 145