![]() திருப்பதி வாசா திருமலை நேசா உன் |
| திருமுகம் காணவே கோவிந்த கோசா |
| திருப்பதி வாசா திருமலை நேசா உன் |
| திருமுகம் காணவே கோவிந்த கோசா |
| மலை ஏழும் சூல்ந்து உன்னை மறைத்தாலும் |
| மனதாற உனை நினைத்த மறு கணமே |
| மலராக நீமலர்ந்து ஒளி தருவாய் கோவிந்த |
| விலை ஏதும் கொடுத்து உன்னை நிறைத்தாலும் |
| விழி மூடி உனை நினைத்த ஒரு கணமே |
| விதியாக நீநடந்து வழி தருவாய் கோவிந்த |
| கடங்காரன் நீயென்று இவ்வுலகம் கடிந்தாலும் |
| கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தாலே |
| கடனில்லா வளம் தந்து காத்திடுவாய் கோவிந்த |
| பசியோடு மலை ஏறும் பக்தருக்கு பரந்தாமா |
| பசியோடு பத்தும் பறந்தோட |
| ருசியோடு நல்அமுது அழிப்பாய் கோவிந்தா |
| ஒரு போதும் உனை மறவா திருநாள் |
| தினம் வேண்டும் கோவிந்தா |
| அருள் தேடும் என் விழிகளுக்கு |
| உன் கருணை மழை வேண்டும் கோவிந்தா |
Showing posts with label பக்திப் பாடல். Show all posts
Showing posts with label பக்திப் பாடல். Show all posts
திருப்பதி - பாடல் !
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கண்ணன் பாட்டு ...!
கண்ணன் திருவடியைக் கண்டுவிட்டேன் - என் |
| எண்ணம் நிறைவேற்ற அருளிடுவாயோ |
| தின்னப் பழம் படைத்து விட்டேன் -என்னை |
| தெகிட்டாத இன்பத்தில் திளைத்திட வைப்பாயோ - கண்ணா ! |
| எள்ளி நகைப்போர் முன்னிலையில் என்னை |
| அமைதி காத்திட நீயருள்வாயோ ! என |
| சொல்லி புலம்பிட வரவில்லை நான் |
| சொல்லாமலே அறிந்திடும் பொருளல்லவோ ! கண்ணா |
| பித்தராய் நானுனை தொடர்ந்தாலும் என்னை |
| பக்தராய் மாற்றிட மனமில்லையோ என |
| கேள்வி கேட்டிட வரவில்லை நான் |
| கேளாமலே கொடுக்கும் மாயவனும் நீயல்லவோ! கண்ணா |
| கல்லுக்கு உயிர் கொடுத்த காவலனே என் |
| சொல்லுக்கு மெய் கொடுக்க வாராயோ |
| எள்ளுக்கும் தண்ணிக்கும் இடைப்பட்ட காலத்தை நீ |
| எழில் பொங்கிடும் மகிழ்வை தாராயோ ! கண்ணா |
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எங்க குல தெய்வமே ...!
![]() குலசாமி திருவிழா இங்கே |
| கூடியிருப்போருக்கு ஓர் விழா |
| வானம் படியா போனவுங்களையும் |
| வந்து சேர்க்கும் சித்திரை திருவிழா |
| மண்ணும் பொண்ணாக |
| மக்கள் பஞ்சம் காணாது |
| நின்னு நிதானமாய் |
| நொருப்பு பந்தம் கைபுடிச்சி |
| வேட்டைக்கு போய் வரும் |
| வீரகுல கருப்பனே .. உனக்கு |
| உண்ணும் படையலிட்டு |
| உருமி மேளம் குலவையிட்டு |
| கைகூப்பி வணங்கிவந்தோம் எங்களை |
| காத்து நிற்கும் கருப்பனே |
| நல்வாக்கு சொல்லுமையா |
| வெள்ளாட்டம் குட்டி அடிச்சு |
| ஓலப்பாயில் சோறு குவிச்சு |
| எல்லைக் காத்த அய்யனாருக்கு |
| எடுத்துவச்சு பரிமாறிட வந்தோம்-உனக்கு |
| உண்ணா விரதமிருந்து |
| ஊருக்கே பந்தியிட்டு |
| ஒண்ணுமண்ணா உக்காந்திருந்து |
| கரகாட்டம் ஒயிலாட்டமென |
| கண்விழிச்சி காத்திருக்கும் மக்களை |
| காக்கும் மாடனே உனக்கு |
| காவு கொடுக்கும் சாமத்துல |
| குறி கேட்க வந்தோமையா எங்கள் |
| குறையெல்லாம் தீர்த்துவையும் |
| எங்க குல தெய்வமே ...! |
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சிவன் பாடல் ...!
![]() முக்கண் வேந்தனே |
| மூவுலகத்தின் தலை மகனே |
| எக்கண் உன்னை போதித்தாலும் |
| இரங்கியருள் புரியும் சிவனே போற்றி |
| நந்திக்கு முதல்வனே |
| நடனத்தின் கலை மகனே |
| சிலையாக உன்னை பாவிப்போருக்கும் |
| சித்தம் தெளியவைக்கும் சிவனே போற்றி |
| சக்தியின் துணைவனே |
| சரித்திரத்தில் சிறந்தவனே |
| முக்தி வேண்டுமென்று கேட்போருக்கு |
| சக்தியளித்திடும் சிவனே போற்றி |
| அனைத்துயிரிலும் சிறந்தவனே |
| யாணை முகத்தின் அப்பனே |
| அரும் பசியாற்றுவோர் நெஞ்சில் |
| அமர்ந்திருக்கும் சிவனே போற்றி |
| மயானத்தின் மாயவனே |
| மந்திரத்தின் மூலவனே |
| எந்திர மயமான உலகத்திலும் |
| மந்திர திருநீறணிந்த சிவனே போற்றி |
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பிள்ளையார் பாடல் ...!
![]() எங்க பிள்ளையாரு இவர் எங்க பிள்ளையாரு |
| பிள்ளை வரம் வேண்டி வந்தவருக்கு தங்கும் பிள்ளையாரு |
| தங்கப் பிள்ளையாரு இவர் தங்கப் பிள்ளையாரு |
| தஞ்சமென்று வருவோருக்கும் அள்ளித்தரும் அன்பு பிள்ளையாரு |
| வெள்ளிப் பிள்ளையாரு இவர் வெள்ளிப் பிள்ளையாரு |
| வேதமற்ற பக்தருக்கும் ஞானம் போதிக்கும் யோகப் பிள்ளையாரு |
| செம்பு பிள்ளையாரு இவர் செம்பு பிள்ளையாரு |
| செஞ்ச வினையெல்லாம் போக்க வந்த செல்லப் பிள்ளையாரு |
| மண்ணு பிள்ளையாரு இவர் களி மண்ணு பிள்ளையாரு |
| கர்ம வினையெல்லாம் கரைய வைக்கும் தொந்தி பிள்ளையாரு |
| வண்ணப் பிள்ளையாரு இவர் வண்ணப் பிள்ளையாரு |
| எங்கும் நிறைந்திருக்கும் எங்கள் பிள்ளையாரு |
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
முருகன் பாடல் ...!
![]()
|
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!




