Showing posts with label தமிழ் மொழிக் கவிதை. Show all posts
Showing posts with label தமிழ் மொழிக் கவிதை. Show all posts

எங்கள் தாய்மொழி !

செம்மொழியான தமிழ் மொழி எங்கும் 
செழித்து வளரும் முதல் மொழி 
அகரம் படைத்த அடைமொழி -எங்கள் 
அகிலம் போற்றும் ஒரே மொழி - அது எங்கள் தாய்மொழி

ஓவியனின் மொழியை உதிரத்தில் படைத்தான்  
காவியனின் மொழியை கற்பனையில் வளர்த்தான் 
வியர்வையின் மொழியை பசியில் மறைத்தான் 
விதியின் மொழியை எதனில் வைத்தானோ !

அறிவின் மொழியை ஞானத்தில் புதைத்தான் 
அன்பின் மொழியை இறக்கத்தில் அணைத்தான் 
உறவின் மொழியை ஜாதியில் திணித்தான் 
உள்ளத்தின் மொழியை எதனில் வைத்தானோ !

பிறப்பின் மொழியை அழுகையில் இணைத்தான்  
பிரிவின் மொழியை நொடியில் மறைத்தான் 
கனவின் மொழியை விடியலில் முடித்தான் 
கடலின் மொழியை எதனில் வைத்தானோ !

ஒழுக்கத்தின் மொழியை கல்வியில் விதைத்தான் 
அறத்தின் மொழியை ஆழியில் மடித்தான் 
இயற்கையின் மொழியை பசுமையில் ரசித்தான் 
ஏழ்மையின் மொழியை எதனில் வைத்தானோ 

தேவனின் மொழியை மௌனத்தில் உரைத்தான் 
தேகத்தின் மொழியை காதலில் இசைத்தான் 
யாக த்தின் மொழியை நீதியில் எரித்தான் 
யார் மொழியின் இறப்பை எதனில் வைத்தானோ ! 

பாவேந்தர் பாரதிதாசன் 125ஆவது பிறந்தநாள் விழா

Related image


கவியோடு பிறந்த தமிழமுதே -எங்கள் 
செவியோடு இனிக்கும் நின் புகழினிதே !
கனவோடு சிதைந்தோர் மனமதிலே -உன் 
கழைக்கூத்தியின் காதல்பேசும் நூலினிதே !
அமிழெது விஷமெதுவென ஏற்றப்பாட்டு -ஒன்றே 
இளைஞர் இலக்கியமென்று வாழ்தலினிதே !
கனமதில் காதல்கொள்ளும் மனங்களிலே -நல் 
இன்பக் கடலினில் மூழ்கிடும் தேனிதே !
தலைமையோடு புகழோங்கும் மலரினிலே -நாளும் 
தலைமலை கண்ட  தேவரினிதே !
திகழொடு தாழ்ந்தோர் மணந்தனிலே -எங்கும் 
தித்திக்கும் சுடர்முத்த நல் தீர்ப்பினிதே!
கற்கண்டு சுவைமனக்கும் காதல் நினைவினில் -நற் 
கருணை பேசும் கடல்மேற் குமிழினிதே !
கவிதொடுக்கும் கதராடைப் பாட்டுதனிலே -புரட்சி 
காப்பியம்பேசும் தமிழச்சின் கத்தினிதே !
மயிலமுது குயிலின் இருண்ட வீடுதனிலே - நல்கும் 
முல்லைக்காடு இசைக்கும் அழகின்சிரிப்பினிதே 
மானுடம் போற்று குறிஞ்சித்திட்டுதனிலே -புதுவை  
மக்கட்பேறு போற்றும் குடும்பவிளக்கினிதே !

உலக தமிழ் மொழி தினம்

வாய் மொழியில் பிறந்த தாய் மொழியே 
தமிழ் மொழியே தா மொழியே தந்தை தாவும் வாழ்வழியே 
கோ மொழியே கோயில் பேசும் நான் மொழியே 
நன்நூல் தரித்த வான் மொழியே இவ்வையகம் போற்றும் 
தேன் மொழியே நிம் உலகமதில் உயிர் வாழ வாழ்மொழியே 
வணங்குகிறேன் கவி வழியே வாழ்த்துங்கள் செம்மொழியே!

                                                                                                                       -21.2.2017

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து !

மாநா புலவர்கள் மறையுமென்று சூளுரைக்க 
சாநா பலகையில் சமதர்ம வள்ளுவனை 
வாரி எடுத்துக் கொண்டு வஞ்சகசம்பு பொன்தாமரை 
குளத்தில்தள்ளி மெய்யுரைத்த பொய்யாமொழியும் நீயே 
கனியமுது மொழியால் வையம் ஆண்டுவான் 
கடல்தாண்டி ஆற்றவும் தொடுத்த வள்ளுவமாலை 
சூடாத வாயுமில்லை சுமக்காத ஊர்தியுமில்லையென 
சுற்றி திரியும் ஈரடி தந்த வாமனனும் நீயே 
உன்குறள் அளந்து உருவம் தரித்துத்  
தென்குமரி கங்கையில் தன்கடம் நனைய 
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 
வான்புகழ் வாயுறை வாழ்த்தும் பொதுமறையும் நீயே  
சமணனா கிறிஸ்துவனா பௌத்தனா என்றெல்லாம் 
சாதிபார்க்கும் பாதகர்முன் பாலினம் இரண்டெனப் 
பாரில் நிரந்தரமென நகைசெய்யும் உத்தர வேதம் 
பதினென்கீழ்கணக்கு மடுவில் சுரக்கும் முப்பாலும் நீயே 
காதல் மணக்கக் கலவியின்பம் வகுத்து 
ஓரறிவுமுதல் ஆறறிவுவரை அறம் பெருக்கி 
கூட்டுப் பொருள்தன்னை கூடிவாழ் இன்பமுடன் 
கழித்தெழுங்கும் சமூக சீர்த்திருத்த அறிஞரும் நீயே 
மரபுடைத்த இலக்கண மதுதனை உண்டு 
மாற்றங்கள் படைக்கும் பாட்டுடைத் தலைவனுக்கும் 
புதுகவி படைக்கும் புலவனுக்கும் உன் ஏடே 
புதுவாழ்வு அளிக்கும் தெய்வ நூல் திருக்குறள் !

வள்ளுவனே ...!



மயிலையில் உதித்த ஆதவனே என்றும் 
மாணவர் போற்றும் தேவனே !

வான் புகழ் பொழிந்த வள்ளுவனே என்றும் 
வையகம் போற்றும் முதல்வனே !

தேன் மலர் கசிந்த தமிழனே என்றும் 
தேவலோகம் போற்றும் புலவனே !

முப்பால் சுரந்த மூலவனே என்றும் 
மூவுலகம் போற்றும் நாயனானே !

ஈரடி யளந்த வாமனனே என்றும் 
ஈகை போற்றும் திருகவிஞனே !

தமிழே தமிழே ...!




காதின்றி குரலில்லை தமிழே - எங்கும் 
காணொளியில் வாழ்கின்ற தமிழே 

பந்தமில்லை பாசமில்லை தமிழே - எங்கள் 
பாரினிலே பழமை வாய்ந்த தமிழே 

அவ்வை மொழி அடுக்கு மொழித் தமிழே - எங்கள் 
ஆயுசுக்கும் அறிவூட்டும்  தமிழே 

செப்பு மொழி சேவை மொழித் தமிழே - எங்கள் 
சிரசினில் நாட்டியமாடுகின்ற தமிழே 

வயதுமில்லை வாரிசுமில்லை தமிழே - எங்கும் 
வாழ்வாங்கு வாழுகின்ற தமிழே 

இனிய தமிழ் இனி ...!


வல்லிய தமிழை சொல்லிய நடையில்
வாழ்ந்து காட்டிடுவோம் ..
நாளையப் பள்ளியில் பயிலும் கல்வியில்
எல்லாம் தமிழை புகுத்திடுவோம் ...!

அந்நிய மொழியிலும் புண்ணிய தமிழை
ஊட்டி வளர்த்திடுவோம் ...
நாவில் அறநெறி குறளை அமிழ்தமென்றே
போற்றி பாடி புகுத்திடுவோம் ...!

பண் கலாச்சார ஒழுகும் பழம்பெரும்தமிழை
நம் பாரில் இசைத்திடுவோம்
நாளைய பட்டங்கள் ஆளும் சட்டங்களிலும்
தமிழ் நீதியை புகுத்திடுவோம் ...!

சத்தமில்லா சங்கத் தமிழை எங்கும்
சாதனை படைத்திடுவோம் ..
நாவில் யாப்பு அணிகள் இலக்கணம் கோர்த்து
காப்பியம் புகுத்திடுவோம் ...!

முத்தமிழ் ஓசையில் முகிழ்ந்திடும் நாதத்தில்
வாழ்ந்து வீழ்ந்திடுவோம் ...
நாளை மூவுலகும் தமிழ் மொழிப் பயின்று
புதுச்சரித்திரம் புகுத்திடுவோம் ...!

ஓடி விளையாடு பாப்பா...!


ஓடி விளையாடு பாப்பா நீ
ஒய்ந்திருக்க லாகாது பாப்பா

பாடி விளையாடு பாப்பா - தமிழ்
பண்பாட்டை மறவாதே பாப்பா

காலை எழுந்தவுடன் காப்பி - பின்பு
கடவுளை தொழுதிடு பாப்பா

நேரம் முடியும் முன்னே பள்ளி - எவர்
நெஞ்சத்தை புண்படுத்தாதே பாப்பா

மாலை முடிந்ததும் கணினி - அதில்
விஞ்ஞானத்தை கற்றுக் கொள்ளு பாப்பா

காணும் உயிர்களிடம் அன்பு - அங்கும்
கடவுள் நிறைந்திருப்பதை நம்பு

தாய் தமிழ் மொழி ...!


தேன்னிமைத் தாய் மொழியே எமது
தேகத்தின் வாய் மொழியே

கனியுடன் பால் கலந்து - நல்
கரைபாகுடன் நீர்கலந்துண்ணும் பசிமொழியே

தனித்த மொழிச் சுவையாய் - எங்கும்
தமிழனுக்கு ஈடில்லை பாரினிலே

இதயம் தாங்கும் இசை மொழியே - நீ
இனி ஈன்ற தலைமுறைக்கு பழமொழியே

மலரில் வாழும் மனம் மொழியே -மண்ணில்
மறைந்து வாழும் நிலை மொழியே

நதியில் ஆடும் பெண் மொழியே - உயிரின்
நாணத்தில் ஆடும் இசை மொழியே

குயிலில் பாடும் வான் மொழியே - தமிழ்
குலம் விளங்கும் தாய் மொழியே

தேவாரம் பாடிய தொன்மை மொழியே - திருவாச
கோயில் கொண்ட இறை மொழியே

பிற மொழி கலக்காத தனி மொழியே - பாரில்
பிறப்புக்கும் உயிருக்கும் சுவை மொழியே

சொம்மொழியான தமிழ் மொழியே - இனி
எம்மொழி ஆளும் குரல் மொழியே ...!

தமிழ் கணக்கு ....!


பல மொழி கண்கள் பேசும்
பாரில் நம் ஒரு மொழிப்
பார்வையிலே

நம் பூமி தாய் தாங்கி
நிற்கும் பதமான பாசத்தில்
பறை சாற்றும் நாவில்

பகாப்பதமாய் பிரிக்காத தமிழ்
தாய் தந்தை இரண்டின்முதல்
ஆறுபத அறிவு திறனாய்
சேருமிடத்தில்

கூட்டு மதீப்பீட்டால் கோடான
கோடி எண்ணில் கணக்கையும்
காலத் தமிழாய் மாற்றிய
அறிவு பெட்டகமே நம் தமிழ்மொழி ...!

முதல் மொழி ...!


முதலழுகை பிரசவத்தில்
மும்மொழி அழு குரல்
எம்மொழி தாய்மொழியிலும்
நம் மொழி முதல் மொழியே

விலங்குகள் பறவைகளும்
இசைக்கும் நாதத்தில்
எத்தேச மொழியிலும்
முதல் மொழியே
நம் தமிழ் மொழி

நிறங்கள் மாறிய மண்ணில்
கொட்டும் மழையின்
ஓசை
நம் தமிழ் மொழியே

தாய் நாட்டு பாடல் ...!


வள்ளுவன் தந்த வளம் நாடு
வான் புகழ் கொண்ட பழம் நாடு

எண்ணிய குறளடி பாடிய நாடு
ஏழ்கடல் புகுத்திய திரு நாடு

பெண்ணியர் ஆண்ட புண்ணிய நாடு
பேர் புகலும் கண்ட பாரதி நாடு

அந்நியர் ஆளும் அகிம்சை நாடு
ஆறும்‌ ஐந்து அடங்கிய அற்புத நாடு

பொன்னும் பொருளும் செழிக்கும் நாடு
போதனை புகட்டும் நல் பொன்னாடு

தீதும் தாரா திவ்விய நாடு
தீயவர் யாவருக்கும் நன்மை புகட்டும் நாடு

வாழ்தல் வேண்டி வருவோருக்கு வருகை நாடு
வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இந்திய நாடு

நம் தாய் நாடே தலை சிறந்த தமிழ் நாடு ...!

தமிழ் மொழி சிறப்பு ...!


உயிர் நாவில் உருவான
உலகமொழி
நம் செம்மொழியான
தமிழ் மொழியே

மென்மையும் தொன்மையும்
கலந்த தாய் மொழியே
நீ தானே தனித்து தவழும்
தூய மழலை தேன் மொழியே

இலக்கண செம்மையில்
வரம்பே இல்லா
வாய் மொழியே

மும்மை சங்கத்தில்
முறை சாற்றும்
இயற்கை மொழியே

இலக்கண பொருளின்
அணிச்சிறப்பாய் அளவெடுத்த
செய்யுள் மொழியே
நம் தாய் மொழியாம் ...!

நம் தமிழ் திரு தாய் நாடு ...!


மண் கொண்ட உடலை மிதித்து
நம் கண் கண்ட பூமியில்
கால் பாதிக்கும் குழந்தை தமிழ்
அம்மா

புண்பட்ட நெஞ்சத்தில் புது
புன்னகை பூக்கும் வீர ஒளி
அம்மா

அம்மா என்று சொல்லில்
இந்த அகிலம் ஊர்வதால்

நம் அனைவரும் ஒன்றே என்று
அகிம்சை போற்றும் நொடியில்

ஊரும் தமிழ் உலகை சுற்றியும்
பேசும் தமிழ் நாட்டை சுற்றியும்

வாடா தமிழாய் வான் சென்று
வையம் கண்டு தேன் கொண்ட

தமிழனாய் தென்னாடு கண்டு
பொன்னாடு போற்றும் நம் நாடு
நம் தமிழ் திரு தாய் நாடு ...

தமிழ் நாட்டின் தலைப்பு...!






















தமிழ் நாட்டின் தலைப்பு 
வறுமை 

வாழ்த்து 
நடிகை நடிகர் 

திருக்குறள் 
டேட்டிங் காதல் 

நீதி நெறி 
இரட்டைத் திருமணம் 

செய்யுள் 
ஏழை பணக்காரர் பாகுபாடு 

இலக்கணம் 
தாய் தந்தையை மீறிய ஜனனம் 

துணைப்பாடம் 
போட்டி போட்டு வாழ நினைப்பது 

உரைநடை 
தினப் போப்பரில் 
திருட்டு கொள்ளை கொலை 

பொதுப்பாடல்
முதியவர் விடுதி 

தனிப்பாடல் 
காதல் திருமணம் 

கூட்டுப்பாடல் 
அலுவலக சில்மிசங்கள் 

மனப்பாடம் 
நேற்றைய ஆசைகளை 
இன்றையக் கனவில் ரசிப்பது 

இப்படி புத்தகம் போட்டு 
பார்த்தால்...

புறத்தில் நானூறு கொடுமை 
அகத்தில் நானூறு வன்முறை 

சார்பெழுத்தில் 
அயல் நாடு 

சமூகவியலில் 
உள்நாடு 

கணித்துவிட்டனர் 
கணித மேதைகள் 

கெடுத்துவிட்டனர் 
அறிவியல் போதைகள் 

இறுதியில் 
ஆங்கிலத்தில் சிறைபட்டனர் 

காரணம் 
பொருளாதார 
சிக்கலை சீர் செய்ய 

என்று எழுதிய  
கவிஞரும் அகப்பட்டனர் 

காரணம் தமிழ் ஒரு 
தனிமொழியல்ல 
செம்மொழி...!





கன்னி தமிழ்...!

கன்னி தமிழ் ஈன்றெடுத்த 
கண்ணன் ராசா நான் கண்ணன் ராசா 
என் கனவுகள் நினைவாக்க வந்தேன் 
ரோஜா சென்னை வந்தேன் ரோஜா 

எண்ணு தமிழ் கற்றேடுத்த சங்கத் தமிழானே
இதை எண்ணி எண்ணி மறந்த பின்பும் 
புத்தனானே கண்ணன் புத்தனானே

சூரியன் உதிக்க சந்திரன் துடிக்க 
தென்றாலானே மூச்சின் திங்கலானேன் 

வானவில் உதிக்க வெண்ணிலா துடிக்க 
வாழ்க்கை விடியலின் வெள்ளியானேன் 

வேடந்தாங்கலாய் திரிகிறேன் 
வேர்வையை உண்டு மகிழ்கிறேன் 

வெற்றி கொடிகள் நாட்டவே 
வென்று தணிந்து சாகிறேன் 

என் கண்ணீர் சூட்டில் எரிகிறேன் 
நாளைய காலம் என் கையில் என்று 
நண்றியை தேடி அழைக்கிறேன்

வாழும் காலம் வென்றிடுவேன் 
என் வாழ்க்கை கனவை விழித்திடுவேன்
நாளைய சொல் என் பாடம் 
நம்பிக்கை ஒன்றே நம் பாடம் 

இமையமும் இதயமும் ஒண்ணாகும் 
ஈன்றவர் உள்ளம் ஒளியாகும் 
நண்பர்கள் எல்லாம் தூணாகும் 
நாடும் வீடும் எனதாகும் 

அன்பே கடவுள் உயிராகும் அதில் 
ஆசை உயிரே விதையாகும் 
மண்ணில் மறைந்து பயிராகும் நாளைய 
பசியை போக்கும் உணவாகும் 

இதை எண்ணி எண்ணி வாழ்ந்தாலே 
எறும்பும் கூட சிலையாகும் 
இயற்கை சீற்றம் கூட அமைதியாகும்

mhishavideo - 145