இனிய தமிழ் இனி ...!


வல்லிய தமிழை சொல்லிய நடையில்
வாழ்ந்து காட்டிடுவோம் ..
நாளையப் பள்ளியில் பயிலும் கல்வியில்
எல்லாம் தமிழை புகுத்திடுவோம் ...!

அந்நிய மொழியிலும் புண்ணிய தமிழை
ஊட்டி வளர்த்திடுவோம் ...
நாவில் அறநெறி குறளை அமிழ்தமென்றே
போற்றி பாடி புகுத்திடுவோம் ...!

பண் கலாச்சார ஒழுகும் பழம்பெரும்தமிழை
நம் பாரில் இசைத்திடுவோம்
நாளைய பட்டங்கள் ஆளும் சட்டங்களிலும்
தமிழ் நீதியை புகுத்திடுவோம் ...!

சத்தமில்லா சங்கத் தமிழை எங்கும்
சாதனை படைத்திடுவோம் ..
நாவில் யாப்பு அணிகள் இலக்கணம் கோர்த்து
காப்பியம் புகுத்திடுவோம் ...!

முத்தமிழ் ஓசையில் முகிழ்ந்திடும் நாதத்தில்
வாழ்ந்து வீழ்ந்திடுவோம் ...
நாளை மூவுலகும் தமிழ் மொழிப் பயின்று
புதுச்சரித்திரம் புகுத்திடுவோம் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜனவரி - 2018

வேலிக்கு அப்பால்  நெடிது வளர்ந்திருக்கும்  கல்யாண முருங்கை  பாவாடை விரித்தாற் போல்  உதிர்ந்து ...