தேன்னிமைத் தாய் மொழியே எமது
தேகத்தின் வாய் மொழியே
கனியுடன் பால் கலந்து - நல்
கரைபாகுடன் நீர்கலந்துண்ணும் பசிமொழியே
தனித்த மொழிச் சுவையாய் - எங்கும்
தமிழனுக்கு ஈடில்லை பாரினிலே
இதயம் தாங்கும் இசை மொழியே - நீ
இனி ஈன்ற தலைமுறைக்கு பழமொழியே
மலரில் வாழும் மனம் மொழியே -மண்ணில்
மறைந்து வாழும் நிலை மொழியே
நதியில் ஆடும் பெண் மொழியே - உயிரின்
நாணத்தில் ஆடும் இசை மொழியே
குயிலில் பாடும் வான் மொழியே - தமிழ்
குலம் விளங்கும் தாய் மொழியே
தேவாரம் பாடிய தொன்மை மொழியே - திருவாச
கோயில் கொண்ட இறை மொழியே
பிற மொழி கலக்காத தனி மொழியே - பாரில்
பிறப்புக்கும் உயிருக்கும் சுவை மொழியே
சொம்மொழியான தமிழ் மொழியே - இனி
எம்மொழி ஆளும் குரல் மொழியே ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...