இருவரி பொன் மொழிகள் ...!

உதவி செய்ததை மறந்துவிடு ஆனால்
உதவியால் பதவியைத் தேடுவோரை மறக்காதே

கண்ணகியின் ஒழுக்கம் சிலையாகும் - ராதை
ராமனின் ஒழுக்கம் கீதையாகும் முயலுங்கள்

பயன்தரும் சொல் பாதை மாற்றும் -தவிர்க்கப்
பயன்தரா சொல் பதவியை மாற்றும்

நல்லதோர் பொய் நம்மைக்காக்கும் - இல்லையென்
நம்மையே அது திரும்பித் தாக்கும்

சினத்தை அடக்கினால் சிகரமாய் உயருவாய்
இல்லையென் அச்சினமே உன்னைச் சிதைத்துவிடும்

முன் செயல் ஆராய்ந்து செய்தால் பின் செயல்
முன் செயலில் இழந்த தோல்வியைத் தடுக்கும்

அகத்தில் அழகும் முகத்தில் வெறுப்பும்
மிகை நாடி நல்லவர் தீயவர் தெளியமுடியும்

மலரின் தண்டு நீரால் உயரும்
மனதின் உறுதி பூவாய் மலரும்

முயற்சி உழைப்பின் செல்வம் - முயற்றின்மை
முடைமையின் வறுமையைத் தரும்

தீங்கு செய்தவர் பின் சென்று - தீங்கை
விளக்கி நன்மை செய்தல் சால்பு

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145