இதோ நாட்டின் குமுறல்கள் ...!


சொல்லுவது சுலபமாகும்
அவர்கள் சொன்னபடி
வாழ்வது சொற்ப்பமாகும்

சட்டங்கள் கண்ட நீதிபதிகள்
அவை சமரச மக்களுக்கே
தமக்கில்லை என்பார்கள்

முற்றும் துறந்த முனிவர்களும்
இங்கே முன்னின்று செய்யும்
பாவங்களே அதிகம்

கடகட மடமட வெனஏறும்
விலைகள் விதிக்கு புறம்பாய்
போனது வீண் போட்டியால்

சறுக்கும் நொடியில்
இறக்கும் உயிர்கள்
அன்றே பிறக்கிறது

ஒருவன் மனதில் உயர்வு
மருவன் மனதி தாழ்வு
இரண்டையும் இணைக்கும்
இயந்திரம் தான் இதயம் !

எழுதுகோல் சொல்லும் செய்தியில்
பழுதுகள் ஆயிரம் அங்கே
விழுதுகளாய் பூப்பது ஏமாற்றமே

படைக்கும் இறைவன் கூட
சொகுசு வாகனமும் பவுசு
பதக்கமும் கேப்பதால் தான்
உலகம் மயங்குகிறது பணத்திற்கு

எட்டாத வானம் கூட
கொட்டாவி விட்டதால்
மழையாக பொழிந்து
மண்ணில் விளைகிறது
பொன்னின் வைரங்களாய்


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு