கண்ணீர் துளிகள் ...!


பெண்ணே உன் கண்ணீர்
துளிகளை மண்ணில்
விதைக்கும்போது உன்னில்
உள்ள உறவுகளை விண்ணில்
விளக்கேற்றி பார்

உன் கண்ணில் மீண்டும்
காவியமாய் ஓவியம்
படைக்கும் இந்த மண்ணில்

அப்போது
விதையாகும் வைரங்களை
தோல்வி என்னும் உளிகளால்
சிதைத்து சிதைத்து பார்

மீண்டும்
அழகிய சிலையாய் ஒளிரும்
வெற்றியில் உனது விழிகளும்
மொழிகள் பேசும்

உயிர் கொண்ட பதுமையின்
உறவுகள் நாளைய
உலகு கண்ட மணிகளாய் மாலை
சூடும் இந்த மண்ணில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

மின்மினிக் கனவுகள்

மூவடி மின்மினி துளிப்பா நூற்றாண்டு படைப்பிலக்கிய விருதிற்கு "மின்மினிக் கனவுகள்" தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு...