எங்கே சுதந்திரம்...!


காந்தியின் சுதந்திரம்
காதர் சட்டையில்
காமத்தின் சுதந்திரம்
காந்தி நோட்டில்

சுதந்திரம்
எட்டின் பதினைந்தில்
பறக்கிறது சில நொடி
தேசிய கீதத்தில்

புண்ணியம்
உதிரிப் பூக்களாய்
சிரித்து சில நொடி

பதியம் போடுகிறது
மிதிக்கும் மண்ணில்
அழகிய வாசமாய்

இனிப்புகள் இல்லை
ஏழைகளுக்கு
எதிரியும் இனிப்புகள்
வழங்குகிறான்

தினப்பத்திரிக்கைக்கு
தினம் தினம்
ஒரு விருந்தாளியாய்

எல்லாம் சுதந்திரமாய்
உள்ளது ஆனால் நல்
உள்ளமில்லா
சுதந்திரம் ஊரில்

எல்லையில்லா மந்திரமாய்
வந்தே மாதரமாய்
ஜொலிக்கிறது கொடிக்கம்பில் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...