குற்றமெல்லாம் பச்சோந்தியாச்சி
கோவிலெல்லாம் கொலைவெறி சாக்கடையாச்சி
அடகு கடை அந்நியருக்காச்சி இங்கே
ஆணவமே எதிர்கட்சியாச்சி
பொறாமை போரில் ஏழை உயிர்போச்சி
கோர்ட்டும் வாசாலும் வீடாகிப்போச்சி
சமாதானப் பேச்செல்லாம் ஊழலாச்சி
சாதிமதச் சண்டையெல்லாம் கடையடைப்பாச்சி
கஜானாக் கணக்கெல்லாம் கருப்பு நோட்டாச்சி
காரு பங்களாவெல்லாம் ஈசி தூசியாச்சி
சொகுசு வாழ்க்கை சொரம்போச்சி
பலர் ஜெயில் வாழ்க்கை பிக்னிக்காச்சி
கைநாட்டேல்லாம் காகிதமாச்சி
கலிகாலம் கண்களெல்லாம் கருப்பாச்சி
வரிப் பணமெல்லாம் வயதாச்சி
வாரிசுகள் இங்கே வாழ வழி வகுத்தாச்சி
விலைவாசி எல்லாம் விந்தையாச்சி
வீண் பேச்சே அரசியலின் விவாதமாச்சி
ஆளுக்கொரு சேனலாச்சி இங்கே
அகப்பட்டு விட்டோம் பல காலமாச்சி
சாட்சியே இல்லா ஆட்சியாச்சி
அதில் சாவதே தொண்டர் மூச்சியாச்சி
கண்முழிச்சி பாத்தா எல்லாம் கனவாச்சி
இங்கே காலமும் வெகு சுலபமாச்சி
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...