விரும்புகிறேன் ...!


அழகிய பெண்ணே கொஞ்சம்
அறிமுகம் சொல்லேன் உன்
கருவிழி மின்னல் தாக்கி
கலங்கிய இதயம் உன்னை நோக்கி
காதல் வரம் கேட்டு தவிக்கிறது
கை தளம் பற்றிட துடிக்கிறதே

காணுமிடமெல்லாம் உன் முகம் பூப்பதினால்
விரும்புகிறேன் பெண்ணே இரும்பாய் உருகுகிறேன்

நீ செருப்பாய் தழுவும் பாதத்தில்
நான் சருகாய் மாறிட விரும்புகிறேன்

நீ சிரிப்பா சிரிக்கும் நேரத்தில்
நான் இசையாய் பிறந்திட விரும்புகிறேன்

நீ அனலாய் குடிக்கும் தேநீரில்
நான் அறு சுவையாய் நுழைந்திட விரும்புகிறேன்

நீ இரவாய் தூங்கும் தூரத்தில்
நான் கனவாய் வாழ்ந்திட விரும்புகிறேன்

இது காதல் செய்யும் மாயமில்லை
காமம் சொல்லும் பாடமில்லை

நேற்றாய் இன்றாய் நாளையாய்
வாழும் ஊமை மொழியின்
உயிர் ஓவியமே இது உண்மை
காதலின் கலவரமே.....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்