எழவு காத்த கிளி !

Image may contain: one or more people, grass, outdoor and nature

ஆதி மனிதன் விவசாயத்தை 
பாதி விவசாயமாக மாற்றிய 
விஞ்ஞாத்தை எடுத்துக் கொண்டு 
அடுத்த வேளை பசிக்காக 
கொடுத்த வேலை போதுமென்று 
ஓடிக்கொண்டிருக்கிறோம் ....

உடுத்த உடை இருக்க இடம் 
கொடுத்தவரெல்லாம் உரிமை 
கொண்டாடி உயர்ந்து நிற்பதைக் கண்டு 
பெருமை பேசி திரிகிறோம்

ஊருக்கே படியளந்த 
விவசாயி மட்டும் சிறுமை பட்ட 
வெளுத்துக் கட்டிய கோமணமும் 
பழுத்து தொங்கிய தோலுமாய் 
உயிர் கொடுத்த மண்ணிற்கு உரமானன்

ஆடு புல்லை மறந்தது 
அறிவாளி தாய் நாட்டை இழந்தான் 
மூடன் அரசியல்வாதியானான் 
மாடு ஜல்லிக்கட்டுக்கு போராடுது 
மக்கள் சின்னம்மாவை சீராட்டுது 

கொலை கொள்ளையில்
சுற்றி வருகிறது நாளிதழ் 
சிலை கடத்தலில் 
சின்னா பின்னமாகுது கோயில் 
அல்வா கொடுக்குது சினிமா 
ஆண்டவன் கொடுக்கிறது இனிமா

அடிச்சு பேஞ்ச மழையில 
புடிச்ச வேரும் பொளந்துருச்சி 
வேற பொழப்ப தேடி போகாம 
மரத்தை வைக்க கிளம்பியாச்சு 
பணத்த வச்ச முதலையெல்லாம் 
பக்குவம மாத்தியாச்சு பழசு இப்போ புதுசாச்சு 
ஏர் பூட்டியவன் கதை மட்டும் 
எழவு காத்த கிளியாச்சு

2 comments:

  1. "அடிச்சு பேஞ்ச மழையில
    புடிச்ச வேரும் பொளந்துருச்சி
    வேற பொழப்ப தேடி போகாம
    மரத்தை வைக்க கிளம்பியாச்சு
    பணத்த வச்ச முதலையெல்லாம்
    பக்குவம மாத்தியாச்சு பழசு இப்போ புதுசாச்சு
    ஏர் பூட்டியவன் கதை மட்டும்
    எழவு காத்த கிளியாச்சு" என்ற வரிகள்
    பலவற்றைச் சிந்திக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      மேலும் விவசாயி கதை என்பதை விவசாயி வாழ்க்கை என்று மாற்ற நினைக்கிறன் நீங்கள் கூற விரும்புவது என்ன அண்ணா ?

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145