ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் !பனித்துளியாக மாறினேன்
என்னவள்
இதழ் விரிகையில் ...!
மின்னஞ்சல் தாக்கி
உயிரிழக்கவில்லை
கூகுள் ...!
வான் விழியில்
வர்ண ஜாலங்கள்
வாங்க மறுக்கும் குடை ...!
குளிரில் தவிக்கும் நதிக்கு
வெளிச்சம் கொடுக்கிறது
நிலவின் அரவணைப்பு …!
அழிவென்று தெரிந்தும்
ஆசை கொள்கிறது
அகிலம் ...!
ஆடும் கிளைகளை பார்த்து
ஓடுகிறது
சூரியன் ...!
தட்சணைச் சோற்றை தின்று
கொழுத்து திரிகிறது
கோயில் எறும்பு ...!
கிள்ளி எறிந்த கீரையில்
நிரம்பிக்கிடக்கிறது
அல்ல முடியாத நீர் சத்து ...!
கடவுளின் பெயரைச் சொல்லி
சாமிக்கு தாலி கட்டினார்
ஆசாமி ...!
மும்மதப் பிராத்தனை
சம்மதம் தந்தாள்
முதிர் கன்னி ...!
குறுகிய இரவு
நீண்டுகொண்டே போகிறது
காதலியின் ஏக்கம் ...!
சித்தர் மலை
தவமிருக்கும்
கஞ்சாசெடிகள் …!
அக்கினிப் பரிச்சை
வலம் வருகிறது
காற்று ...!
விரல் நுனி
திரும்பிப் பார்த்தேன்
இனித்தது வாழ்க்கை ..!

3 comments:

 1. வணக்கம்
  அருமையாக உள்ளது இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...