கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்துமேகம் கருத்தால் மழை நிதி 

மோதல் படர்ந்தால் துயர் நிதி  

தாகம் நீண்டால் உயிர் நிதி 

தன்னடக்கம் கொண்டால் தலைவன் நிதி 

சோகம் மறைந்தால் இன்ப நிதி 

சொகுசாய் வாழ்ந்தால் நூறு நிதி 

வீரம் கொடுத்தால் வெற்றி நிதி 

விவேகம் சாயிந்தால் தோல்வி நிதி  

விட்டுக் கொடுத்தால் கெடா நிதி 

வாரி வழங்கினால் வள்ளல் நிதி 

வயதை கடந்தால் யோக நிதி 

ஆட்சியை ஆண்டால் கொடை நிதி 

ஆசை புரண்டால் அழிவு நிதி 

கல்வி கடந்தால் அறிவு நிதி 

காதல் வென்றால் மண நிதி 

பசியை மறைத்தால் கடவுள் நிதி 

பணத்தை இழந்தால் பைத்திய நிதி 

புண்ணியம் செய்தால் மோட்ச நிதி 

புலமை பெற்றால்  கவி நிதி 

இப்படி எல்லா நிதியும் கடந்து 

செம்மொழி வளர்த்த கருணா நிதியே  

இவ்வையகம் போற்ற நீர் வாழ்க பல்லாண்டு 

வளர்க நூறாண்டு ...!

4 comments:

 1. கருணா நிதியே உங்களுக்கு ரெம்ப புடிக்கும் போல....! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. எழுத்திற்கு ஏது பிடித்தவர் பிடிக்காதவர் அனைவரும் ஒன்று தான் எனக்கும் அப்படிதான் உங்கள் பிறந்த நாள் அன்று எனக்கு கூறுங்கள் உங்களை பற்றியும் வடிக்கிறேன் .என்னை பொருத்தவரையில் கவிதையின் முன்னாடி அனைவரும் சமமே .!

  வருகைக்கு என் அன்பு நன்றிகள் பல

  ReplyDelete
 3. சிறந்த பதிவு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு என் அன்பு நன்றிகள் பல

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

புரிதலின்றி பிரிதல் ...!

ராமூ சோனா இருவரும் நல்ல நண்பர்கள் ஒரு நாள் சோனாவிற்கு எதோ தெரியத எண்ணில் இருந்து ஒரு குறுந்செய்தி (காதல் என்ற வார்த்தையை உபயோகித்து ...