திருமணம் - கவிதை


விருந்தோம்பலாய் சிறக்கிறேன்
மருந்தோம்பலைக் காண
வருந்தோம்பலாய் கேட்டனர்
வரதச்சனை

இருந்தோம்பல் இல்லா வீட்டில்
இரு கரம் பிடிக்கும் திருமணம்
கேள்விக்குறியாய் நிற்கிறது
கேளடி பெண்ணே

அருந்தோம்பல் இல்லாவிடில்
ஆருயிர் அவதரித்து இருக்காது
என் அன்னமே அவரவர் வாழ்க்கை
அவரவர் கையில் என்று




ஆண்டவன் உரைத்துவிட்டான்
அடியேன் கேட்கிறேன்
ஆறடி மண்ணில் ஈரடிப் பாதம்
பதிக்க திருமண பந்தமே முடிவானது...!


2 comments:

  1. Replies
    1. முன்னதாக எனது நெஞ்சார்ந்த திருமண வாழ்த்துக்கள்


      நல்வரன் சிறப்பெய்தி அன்பின் விளிம்புகளில்
      சொல்வனச் சீர்பெற்று ஹிஷாலீ புக்ககம் திளைத்து
      தேனென குழவிகள் இரண்டு பெற்று - என்னாளும்
      தெவிட்டா பாவுலகில் பல்கலையாய் பவனிவருக!
      .................அன்புடன் கா.ந.கல்யாணசுந்தரம்

      (என்னை வாழ்த்திய அன்பு உள்ளத்திற்கு அன்பு நன்றிகள் பல ஏன் இதை இங்கே கொண்டு வந்தேன் என்றால் பிற்காலத்தில் நினைவு படுத்தத்தான் )

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145