கிராமத்து காதல்....!


செண்பகப்பூ கண்ணழகி
செஞ்சி வச்ச தேரழகி

வஞ்சிப்பூ வாயழகி
வாழைத் தண்டு காலழகி

ஒய்யார நடையழகி
ஒல்லி குச்சி பேரழகி

உன்மருதாணி வெக்கத்தில
மாமேன் வாரேன் பக்கத்தில

மஞ்ச தாலி தரட்டா
மாமேன் மஞ்சத்துல இடம் தரட்டா

களவாணி பேச்சழகா
கன்னக்குழி சிரிப்பழகா

முறுக்கு மீசையாலே என்
முந்தாணிய இழுக்குரையே

சீமத்துர ராமன் போல
சீர்வரிசை பூட்டி வந்து

ஊரறிய பந்தல் போட்டு
ஒண்ண சேர மேடை போட்டா

தைமாசம் காத்திருக்கேன்
தளதளனு பூத்திருப்பேன்

தாய் மாமன் தங்கத்துக்கு
தலைமுறையை பெத்தெடுக்க ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145