கிராமத்து கீதம் ....!


சுள்ளி பெறக்க போகையிலே மாமன்
சுண்டி இழுக்குற பார்வையிலே

அள்ளி முடிஞ்ச கூந்தலிலே மாமன்
ஆசையாய் சூடிய மல்லிகையே

கொஞ்சி பேசும் வார்த்தையை போல்
கொலுசும் கொத்தி தின்கிற ஆசையால்

வஞ்சிக் கொடியும் வாய்திறந்து மாமனுக்கு
வாழ்ந்தது மடல் அனுப்புகிறதாம்

எஞ்சி இருக்கும் காலத்திலேயே நான்
கஞ்சி குடிக்க போகையில் உன்

நஞ்சு கொண்ட காதல் பாசம்
என்னை நாயாய் பேயாய் மாற்றுதட

பிஞ்சு மனசு பாரத்தையெல்லாம் நீ
பிச்சிஎறிந்து பொன்தாலி வந்து பூட்டுமாமா

போடு தன்னானே தானா தன்னானே உன்
தங்கத்த கொஞ்சம் உரசி பாருமாமா

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145