பூவின் ஆராதனை...!


ஆயிரம் பூக்கள் பூத்தாலும் அதில்
இறுதிப்பூவாய் நானிருப்பேன் - என்றும்
இதயமற்ற மனிதருக்கும் நான்
உதயம் உற்ற பூவிரிப்பேன் - நாளைய

வாழ்வை தேடும் வியாபாரிகளுக்கு
வாரி வழங்கும் வள்ளலாய் வாழவைப்பேன்
நேற்று என்று நினைப்போரை
இன்றே நன்று என்று உணரவைப்பேன்

மாவிலைத் தோரணத்தில் மலர் மாலை
சூடி மகிழவைப்பேன் என்றும்
மஞ்சள் குங்குமம் நிலைத்திருக்க
மங்கையரின் அங்கத்தில் அணிவகுப்பேன்

சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு
சிங்காரமாய் விளையாட சங்கம் வகிப்பேன்
சீர்சனத்தி பழங்களிலே
பேர் உசத்தியாய் சிவந்திருப்பேன்

காலமெல்லாம் காத்திருப்பேன் என்
கருணை வடிவான இறைவனுக்கு
வண்டிற்கு பசி தீர்ப்பேன்
என் வண்ணத்தில் வட்டமிடும்
வண்ணத்துப் பூச்சுக்கு காவலிருப்பேன்

பூவெல்லாம் ஒன்று கூடும் போர்க்களத்தில்
பொல்லாத பூக்களாய் சாகடிப்பேன்
வளரும் கவிஞருக்கு கவி கொடுப்பேன்
வாழ்ந்து கெட்டு போகும் போது
வாக்கரிசியாய் சேர்ந்து நடப்பேன்

எங்கு சென்று வந்தாலும் இறுதியில்
மண் சென்று மக்கியிருப்பேன்
மறு ஜென்மம் நிறைவேற விதையாய்
வித்தேடுப்பேன் பூ விதையாய் வித்தேடுப்பேன்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...