பூவின் வாசம்...!


ஆடையில்லாமல் மலர்ந்தேன்
அகிலத்தில் ஓர் நாள் வாழ்ந்தேன்

வண்டுக்கும் தேன் தந்து சென்றேன்
வளரும் தமிழுக்கு கவிதந்து மகிழ்ந்தேன்

நிலவுக்கு மணம் தந்து மறைந்தேன்
நீர் காற்றுக்கும் உணவாகி மகிழ்ந்தேன்

மனிதனுக்கு மருந்தாக பிறந்தேன்
மண்ணுக்கு விதையாக மகிழ்ந்தேன்

இறைவனுக்கு மாலையாக முடிந்தேன்
இதயமற்ற பெண்களுக்கு இல்லறத்தில் மகிழ்ந்தேன்

உதிக்கும் சூரியனுக்கு உறவாய் வருகிறேன்
உலகின் இயற்கைக்கு அழகாய் பூக்கிறேன்

என்றும் பூவாய் எதிலும் பூவாய்
வென்று வென்று வாழ்கிறேன்
என் பூவின் வாசத்தில்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 49

நாவால் சுட்டுவிட்டு முத்தத்தால் அணைத்தாலும் மறையவில்லை வடு