நீ தான் பூ மகளோ...!


வண்ணத்தின் தயாவளோ இல்லை
வானவில்லின் சேயவளோ நீ
யாரென்று சொல்லும் முன் நானொன்று
சொல்கிறேன் கேள் உன் பேர் பூ மகளோ

இன்பம் துன்பம் அறிந்ததில்லை
இல்வாழ்க்கை புரிந்ததில்லை
ஜதி மத வேதம் பார்க்கா
சமத்துவப் பூ மகளோ

உன்னை யாரும் அடித்ததில்லை
உலகில் யாரும் வெறுத்ததில்லை
கெட்ட பெயர் வைத்து அழைக்காத
ஒற்றைப் பெயர் கொண்ட பூ மகளோ

பந்த பாசம் உறவுமில்லை
பணம் சொத்து ஆசையுமில்லை
கொலைக் குற்றம் செய்யாத
கோவில் தெய்வம் பூஜிக்கும் பூ மகளோ

கருவறை பாரமில்லை
கண்ணீரில் வீழ்ந்ததில்லை
ஆடம்பர வாழ்க்கையாலே
ஆணவத்தில் அழியாத தியாகத்தின் பூ மகளோ

அண்ணன் தம்பி பகையுமில்லை
அனாதையாய் வாழ்ந்ததுமில்லை
நகை நட்டு அழகைவிட
நாளு மொழம் பூவழகாலே
மங்கலமாய் சிரித்திருக்கும் பூ மகளோ

மாமியார் கொடுமையில்லை
மானங்கெட்ட பொளப்புமில்லை
புத்தி கெட்ட மனிதர்களுக்கு
புத்தி புகட்டும் ஊனமில்லா பூ மகளோ

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...