பூவாளே காதல் சொல்ல வந்தேன்...!



கொல்லையில மல்லிப் பூவு
கொண்டு வந்தேன் ராஜாத்திக்கு நீ
அல்லி முடிஞ்சா கூந்தலிலே
ஆசையாக சூடிக்கிட்டு...

தண்ணிக் குடம் தாகத்தாலே
தளதளனு சிரிச்சிப் புட்டு
கனகாம்பரம் வெக்கத்தில என்ன
காதல் பார்வை பார்த்தவளே

அல்லிப்பூ செண்டாலே
அய்த்தான் வாறேன் பக்கத்துல
ஆசையாக முத்தம் தந்தா
ரோஜா தருவேன் என்
ராஜாத்திக்கு ராஜாவா நானுமிருப்பேன்

நீயிருக்கும் இதயத்திலே நித்தம்
ஒரு பூ பூக்கையிலே
அச்சமெல்லாம் பேசுதுங்க
அகிம்சையாக கூசுதுங்க
மிச்சம் மீதி வாசத்திலே
மீட்க வாங்க ரோசத்துல
மரிகொளுந்து மாமா எனக்கு
மஞ்சத் தாலி தாமா

காதல் பூ சொன்னவளே
காகிதப்பூ பெண்ணவளே வைகாசி
மாதத்துல வாழைப்பூபந்தலில் பரிசம்போட்டு
மிச்ச மீதி பூவையெல்லாம்
மாலையாக கோர்த்து வச்சு
தாலிகட்டி கைபிடிப்பேன் தங்கமே
தாழம்பூ சாட்சியாக ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145