நம் நாட்டிலே ....!


அசையாத தேராய் நின்ற என்னை
அசைக்கும் ஓர் நாளில் அழகாய்
மாற்றிய மனிதா நீ
அறிவை இழந்து ஆணவம் கலந்து
இம்சை செய்கிறாயே இது சரியா

அகிம்சை வாழ்வில் அன்னமின்றி
அலையும் உயிரை கண்டு நீ
அன்னதானம் தந்து புண்ணிய தானத்தை
பெருக்கிகொள்ள மறந்து விட்டாயேடா

சன்னிதானத்தின் சாஸ்திரங்கள் மாற்றுகின்ற
போதிலும் மக்கள்
சாக்கடையில் வாழும் வீட்டை மாற்றி
கொஞ்சம் பாரடா
எண்ணாத தானம் செய்கின்ற மனதிலே
ஏழை எழுந்து நின்று வாழ்ந்திடுவான்
நம் நாட்டிலே ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...