முரண்பாட்டுக் கவிதை ...!


பூவுமிருக்குது பாலுமிருக்குது
குடித்து பார்க்க யாருமில்லடி ராசாத்தி

வானமிருக்குது வண்ணமிருக்குது
வளைத்து பார்க்க யாருமில்லடி ராசாத்தி

கள்ளி மண்மேலே வளர்ந்தாலும் - வானம்
கண்ணாலே பார்த்தாலும்

எல்லாமே பாய்சன் தான் இதை
சொன்னாலும் ஏற்கும் பூமி தான் .......!

கண்ணுமிருக்குது கனவுமிருக்குது
அதை நேரில் காட்ட யாருமில்லடி ராசாத்தி ....!

உண்மையிருக்குது பொய்யுமிருக்குது
அதை நடத்திக்காட்ட யாரும்மில்லடி ராசாத்தி .....!

எல்லாமே வேசம் தான் இதை
சொன்னாலும் ஏசும் பூமி தான் .......!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்