நம்மால் முடியும் ...!


இதையம் துடிக்க 
இளமை பிறக்க 
முதுமை ஒழிக்க 
உலகம் வியக்க 
வாழ்வதே வாழ்க்கை 

இளைஞர்களே விழித்திடுங்கள் 
நாளைய உலகம் நம் கையில் 
என்று ஜெயித்திடுங்கள் 

ஏறு பூட்டி 
சோறு போட்ட காலம் போய்..
டிரக்டர் பூட்டி 
பாடுபட்ட காலம் வந்தாச்சு 

சாணம் பூசி 
கோலம் போட்ட காலம் போய் 
வானம் தொட்டு 
சாதனைப் பூக்கும் காலம் வந்தாச்சு 

ஊனமெல்லாம்  
பதுங்கி வாழ்ந்த காலம் போய் 
ஒலிம்பிக்கிலையே வெற்றி வாகை 
வீசும் காலம் வந்தாச்சு

காற்றும் நெருப்பும் 
காதலித்தால் உலகம் 
தூங்காது...

வாழும் உயிர்கள் 
மோதிவிட்டால் 
பூமி தாங்காது....

கடலும் அலையும் 
ஒய்ந்துவிட்டால் 
மழைகள் தூவாது...  

வெயிலும் குளிரும் 
இணைந்துவிட்டால் 
இமைகள் கூசாது...

விண்ணும் மண்ணும் 
தொட்டுவிட்டால் 
ஜனனம் கிடையாது 

இதயமே எழுந்து நில் 
ஏரி மலைகளை தாண்டும் 
தண்ணீர் போல்...

ஏழை உள்ளங்களை 
தீண்டும் தீண்டாமையை 
கல்வி கண்ணால் ஒழித்துவிடு 

ஓருயிர் பிறப்புக்கு 
ஆருயிர்  அன்பிற்கு  
என்று அளந்து வாழ்ந்தால் 

எல்லாம் முடியும் நம்மால் 
ஏழைகள் என்ன சும்மா 
வாழ்க்கை இனிக்கும் கரும்பா 
வாழ்ந்து காட்டு கம்மா...! 2 comments:

  1. காற்றும் நெருப்பும்
    காதலித்தால் உலகம்
    தூங்காது...
    arumai sister

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...