நதிக்கரை_ஞாபகங்கள் ...!

லேசான தென்றல் காற்று 
சிலுசிலுக்கும் மீன்கள் கூட்டம் 
நடு நடுவே மெல்ல சிரிக்கும் தாமரை 
நூலறுந்த தூக்கணாங் குருவி கூடு 
அதை தாங்கி பிடிக்கும் கொடி மலர்கள் 
மின்னும் கோவைப் பழம், மிதந்து வரும் நீர் கோழி 
அத்தனையும் மறந்து நானிசைக்கும் 
ஆலமரக் குழலோசையில் நீ அழைத்த குயிலோசை 
உருவம் மறந்து நிழலையே வெறித்து பார்க்கும் கொக்கு 
கூடவே குதித்து விளையாடும் தவளை 
இதோ பாம்பென்று நானுரைக்க பதறிக் குதித்து 
நீயோட பட்டாம் பூச்சிகள் எல்லாம் 
சுற்றி வளைத்து சுத்திப்போட்ட அழகை நினைக்கையில்
 நிறுத்தற் குறியான கண்ணீரைக் கண்டு 
அடையவரும் பறவை கூட்டம் கீச் கீச் என்று கூச்சலிட 
அலறி எழுந்தேன் ,அந்தி சாய்ந்தது 
அழகு முலாம் பூசியது போல் 
ஆதவன் தன்னை மறைத்து 
அரும்பும் முத்து சுடராய் நிலவொளி வந்து 
முன்னும் பின்னும் உரசுகையில் உயிரே போகுதே 
நாம் உடனிருந்த நாட்களை நினைக்கையில் 
அத்தனையும் மறந்து அமைதியாக 
உறங்குகிறாய் நதிக்கரையில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145