கண்களால் தொட்ட காதல்.


பல்லவி :
முகம் கண்ட நேரம் முதல் அகம் கண்டு மகிழ்ந்தேன் 
சுகம் கொண்ட காதல் மலரே வா 
கார்கால மேகம் போல் ஊர்கோலம் போவோமா என் 
காதல் கிளியே கவிதை குயிலே வா 
சரணம் :
விழி பட்ட மலரெல்லாம் இதழ் முத்தம் தேடுகிறேன் 
செவி கேட்ட பாடலெல்லாம் உயிர் மூட்டம் போடுகிறேன் 
தடம் பட்ட இடமெல்லாம் தாவி தாவி கூடுகிறேன் 
உடை மாற்றம் கண்டு என்னை உயிரோடு அணைப்பாயா - இல்லை  
உலராத மூங்கில் போல் வளைந்து நெளிந்து கொடுப்பாயா 
 (முகம் கண்ட)
விழி தொட்ட காதலெல்லாம் வழி மாறிப் போனதில்லை 
விரல் பட்ட தேகமெல்லாம் மறந்தோடிப் போவதில்லை 
நிழல் தொட்ட என் காதலியே நிஜமாகவே நினைக்கின்றேன் 
நிறம் தேடி மறுத்துவிடாதே என் மனம் தேடி மணந்துவிட
வாராயோ இல்லை வாராமல் போறாயோ காதலியே  (முகம் கண்ட)

(முதல் முறையாக தலைப்புக்கேற்ற பாடல் எழுதும் போட்டியில் கலந்து கொண்ட பாடல் எப்படி இருக்கு நண்பர்களே )

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145