தமிழ் வாசல் -ஜுன் 2016 ! (ஹிஷாலியின் ஹைக்கூ)


காற்றின் அரங்கேற்றத்தில் 
நடனமாடும் கிளைகள் 
விருதுகள் வழங்கும் கோடை!
மரபணு காப்பகத்தில் 
விடப்பட்டது 
இந்திய விவசாயம்...!
தாய்பால் இன்றி வானம் 
வாடுகிறது 
மரக்கன்று !
அருகம்புல் நடுவே 
துளிர்கிறது 
பாரதியின் கனவு !
கொட்டும் அருவி 
விசமாக மாறுகிறது 
விவசாயம் !
பறவையின் கலைக்கூடம் 
நுழைய மறுக்கிறது 
காந்தி நோட்டு !
சலசலக்கும் நீரோடையை 
மௌனமாய் கடக்கிறது 
நீரில் விழுந்த நிலா ...!

2 comments:

  1. சிறப்பான ஹைக்கூக்கள் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தவறாது வந்து எனது கவிதையை படித்து பாராட்டும் அண்ணாவுக்கு எனது மனம் மார்ந்த நன்றிகள் பல

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு