தோழா - நீ    வறண்ட நிலத்தை
வாங்கிடும் தோழா - நீ
வகைவகையான
விதைகள் விதைத்தால்
விளைந்திடுமா தோழா

     உழுத நிலத்தில்
வீடுகட்டும் தோழா - நீ
உடைத்து மீண்டும்
விதைக்க நினைத்தால்
வளமாகிடுமா தோழா

     காட்டை அழித்து
காற்று வாங்கிடும் தோழா -நீ
கார் மேகத்தை
கிழித்து பார்த்தால்
மழை பொழிந்திடுமா தோழா

     கண்ணீரை விற்று
கடவுளை வாங்கும் தோழா -நீ
கதிரவனை மறைத்து
கார் மேகத்தை
வாங்கிட முடியுமா தோழா

     எண்ணியதெல்லாம்
எடுத்துக்கொடுக்கும்
பூமியிருக்கு தோழா - நீ
எழுந்து இன்றே வளமாக்க
எண்ணிவிடு தோழா ...!

4 comments:

 1. வணக்கம்

  வரிகள் ஒவ்வொன்றும் சிறப்பு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் பல

   Delete
 2. கவிதை எதார்த்தம் சொல்கிறது...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் பல

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...