அருவி இதழ் எண் - 19

உலர்ந்த கண்களோடு
மலர்ந்த பூக்களை விற்கிறேன் 
வறண்ட நாவிற்கு
ஒரு பிடி அரிசி கிடைக்காதா என்று

அறுந்த செருப்போடு
அறுந்து வரும் செருப்புகளைத்தைக்கிறேன்
இருண்ட குடிசைக்கு
ஒரு வாசல் கிடைக்காதா என்று

கிழிந்த புடவையும் 
மலிந்த முகமுமாய் 
வாகனத்தைத் தேடுகிறேன்
தகனம் செய்யும் தருணத்தில் வாய்க்கரிசிக்கு
ஒரு வழி கிடைக்காதா என்று

ஏதும் படிக்கவில்லை
அடையாளம் காட்டுகிறேன்
பழகிய தெருக்களில்
ஒரு வேளை பழைய சோறு கிடைக்காதா என்று

ஊனத்துடன் உழைப்பைக் 
கூட்டுகிறேன்
சலிப்பின் வியர்வை
ஒரு நாள் பிழைப்பை கெடுத்துவிடக் கூடாதென்று 

ஒண்டக் குடிசையில்லை
ஒய்யாரக் கூடத்தில்
கலவை சுமக்கிறேன்
பண்ட பாத்திரங்கள் எல்லாம்
ஒரு பாட்டில் மதுவிற்குள் மூழ்கிவிடக்கூடதென்று..!


6 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. இந்த நிலைமை யாருக்கும் வரக் கூடாது...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      ஆம் என்ன செய்வது இன்னும் உலகம் திருந்தவில்லை என்று கூறுவதை விட மனிதர்கள் திருந்தவில்லை என்று தான் கூறவேண்டும்

      Delete
  3. "ஊனத்துடன் உழைப்பைக்
    கூட்டுகிறேன்
    சலிப்பின் வியர்வை
    ஒரு நாள் பிழைப்பை கெடுத்துவிடக் கூடாதென்று" என்ற
    வரிகளை விரும்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145