சு என்றதும் நாவை
சுண்டி இழுத்தது அலைகள்
அதனால் தான் என்னவோ
சுனாமி என்ற பெயர் வந்ததோ !
எண்ணிடா அலைகள் சேர்ந்து
என் தாய் மக்கள்
தலை கொய்தாயே
நீ என்ன பேயா ? இல்லை
சீசனில் வந்து போகும் நோயா ?
மீன் விற்று உயிர் வளர்த்தோம்
மீண்டும் பண்டமாற்று முறை போல்
எண்கள் உயிர் தின்று
கடன் தீர்த்தாயோ ?
வெள்ளலைகளை கண்டு
உள்ளம் மகிழ்ந்தோம் உன்
தொல்லலைகளால்
எங்கள் பெண்கள்
வெள்ளலைகளாய் வளம் வர
கனவு கண்டாயோ ?
பலித்த கனவு பாதை மீறியதில்
அள்ளியக் கூந்தால் ஆடுகிறது
அருகில் குழந்தை தேடுகிறது பசியில்
ஆவலில் உன் அலைப் பாலை குடித்து
உயிர் பால் புதயலானதே மண்ணில் !
நீர் பால் கொண்ட பூமியில்
நிலநடுக்கம் ஏன் ?
நிறைவுடன் வழியனுப்புகிறோம் இனி
நீ கனவிலும் கரை தாண்டாதே
எங்கள் கடலன்னையே !
சுனாமி மீண்டும் வரக்கூடாது! அருமையான படைப்பு!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅப்படிச் சொல்லுங்க... அருமை...
ReplyDeleteஇனி வரவே கூடாது...
எல்லோர் ஆசையும் அதுவே அன்பு நன்றிகள் அண்ணா
Delete