வானவில் ...!


வளையா உலகில்
வளைந்திடும் வானவில்லாய்
வளைகிறேன்
ஏழு வண்ணங்களில் ....

ஞாயிறு வண்ணமெடுத்து
நாடெங்கும் விடுமுறை
பூக்களாய் செழிக்கிறேன்

திங்கள் வண்ணமெடுத்து
தங்க முயற்சிகளுக்கும்
தலைவனாய் இருக்குறேன்

செவ்வாய் வண்ணமெடுத்து
செல்வம் சேர்த்திடும்
லட்ச்சுமியாய் வணங்குகிறேன்

புதன் வண்ணமெடுத்து
புண்ணிய காரியங்களை
புனிதமாக்கும் வெற்றியை
வழிநடத்துகிறேன்

வியாழன் வண்ணமெடுத்து
வந்தாரை வாழவைக்கும்
வாழ்க்கை நெறிகளை களையும்
கற்பனை கோட்டையில்
கால்பதிக்கிறேன்

வெள்ளி வண்ணமெடுத்து
விதவிதமான கோயில்களின்
விளக்கேற்றும் கன்னிகளுக்கு
அருள் புரியும் அன்னையாய்
வரம் தருகிறேன்

சனி வண்ணமெடுத்து
சகல கஷ்டங்களையும் தீர்த்து
இஷ்டங்களை அளிக்கும்
சனிப்பெருக்காய் சாதிக்கிறேன்
என் சங்க தமிழ் நாட்டில்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...