நீரின்‌னூற்று....!


வானுற்ற நீர் மக்கள் வயிருற்று மீண்டும்
வாழ்வுற்ற துன்பத்தில் கண்ணுற்ற உவர்ப்பு

குடியுற்ற நீர் மனிதனின் பசியுற்று மீண்டும்
உழைப்புற்ற தேகத்தில் வியர்வையுற்று பிரித்தலே

தேன்னுற்ற நீர் கடந்து கடலுற்று மீண்டும்
தேன்னற்ற மண்ணில் மீன்னுற்றதே சிறப்பே

கடலுற்ற நீர் நிலத்தின் உப்பளம் முற்று மீண்டும்
கரையுற்ற உணவுக்கு சுவையுற்று கரைகிறதே கடலைபோல

தானுற்ற உலகில் வானுற்று இயற்கைக்கு மீண்டும்
தலையுற்ற நீராய் தரணியுற்று சிரிக்கிறது

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - மார்ச் - 2018

பூ போட்டுப் பார்க்கிறேன்  மண் விழுந்தது மூடநம்பிக்கையில்