சிப்பிக்குள் முத்து ...!


என்னுள் எண்ணற்ற
ஆசைகள் இருந்தும்
அசையாத விழிகள்
உன் வருகையை
எண்ணி அசைக்கிறது

உன் வழியெங்கும்
பூவிழி தூரலில்
புதுப்புது கவிதைகள்
வடிக்கிறது தினமும்
அதை படிக்கும்

நாளில் நான்
வடிப்பேன் அழகிய
புத்தகமாய் அன்பே
அதில் கரையும்
மையாக வருவாயா
சொல் .....

இருகை கோர்த்து
இணையும் நூலில்
கூடியிருப்போம் நல்
சிந்தனை வரிகளாய்
சிப்பிக்குள் பிறக்கும்
முத்துக்களாக ....!

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த...